உள்ளடக்கத்தைக் கையாளுதல்
உள்ளடக்கத்தைக் கையாளுதல்:
பயிற்சி
அமர்வை வழிநடத்தும் நபரால் கருப்பொருள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். விரிவுரை அல்லது விளக்கமளித்தலோடு
கூட, கருப்பொருளின் பெரும்பாலான
கற்றல்களைப் பெறுவதற்கும் அதை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றவும் ஒன்று அல்லது
இரண்டு செயல்பாடுகள் இருக்கும்.
திட்டமிடுவதற்கும்
செயல்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்படும் செயல்பாடுகள், அந்தச் செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்கான
திட்ட வடிவத்துடன் சில செயல்பாடுகளின் பட்டியல் உள்ளது. தேவையின் அடிப்படையில் மற்ற தலைப்புகள்
அல்லது கருப்பொருள்கள் கையாளப்படலாம் மற்றும் பட்டியலிட்டுள்ள கருப்பொருள்களின் வரிசை
கூடத் தேவையின் அடிப்படையில் மாற்றப்படலாம். அதேபோல், தேவையின் அடிப்படையில்
வேறு சில நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படலாம்.
|
வரைவு
திட்டம் |
|||
|
வ.எண். |
தலைமைத்துவ
மேம்பாடு |
பரிந்துரை செயல் திட்டம் |
|
|
மையத்தலைப்பு |
நோக்கம் |
||
|
1 |
குழுக்களின் முக்கியத்துவம் |
குழுப் பணியின் ஆற்றலைப் புரிந்துகொள்ள |
சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைக்
கண்டறிதல் மற்றும் சமூக நடவடிக்கையின் அவசியம்
|
|
2 |
பங்குகள் மற்றும் பொறுப்புகள் |
குழுவில் சாத்தியமான பல்வேறு பங்குகள் மற்றும்
பொறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள |
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆர்வங்களையும் தேவைகளையும் அடையாளம் காணுதல் |
|
3 |
நல்ல தலைமைத்துவமும் அதின் தேவையும் |
நல்ல தலைவருடைய பண்புகளை உணர்வதற்கும், அதன்
தாக்கங்களைப் புரிந்துக்கொள்வதற்கும் |
சமூகத்தில் துப்புரவு பணி மற்றும்
சுத்தத்தை பற்றிய பிரச்சாரம் |
|
4 |
முன் உதாரமான சிறந்த தலைவர்கள் |
வாழ்வில் சிறந்த தலைவர்களை முன் உதாரணங்களாகக்
கொண்டு ஊக்கப்பட |
விழிப்புணர்வு நிகழ்ச்சி (சமூகத்தில் தேவைப்படும் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்) |
|
5 |
மற்றவர்கள் மீது கரிசனை |
சுற்றியுள்ள மக்கள் மீது உண்மையான கரிசனையும் அக்கறையும்
கொள்ள |
சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சித்தல்/ ஒரு விஷயத்தை ஆதரித்தல் |
|
6 |
தொடர்ந்து கற்றல் |
சுயத்தையும், புதிய காரியங்களையும், உலகை பற்றிய தகவல்களையும்
தெரிந்துக்கொண்டு மேம்பட |
ஒரு சிறிய நூலகத்தை உருவாக்குதல் (இது தேவையின் அடிப்படையில் வேறு செயல்களாகவும் இருக்கலாம்) |
|
7 |
மற்றவரை மேன்மையாகக் கருதுதல் |
அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களுடைய
உணர்வையும் சிந்தனைகளையும் மதிக்க |
சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்குச் செல்வந்தர்களின் ஆதரவுடன் உதவுதல் |
|
8 |
இடைவெளிகளை நிரப்புதல் |
தனிப்பட்ட தவறிற்கோ, குழுவாகச் செய்த தவறிற்கோ
பொறுப்பேற்று அதைச் சரி செய்ய |
விழிப்புணர்வு நிகழ்ச்சி (சமூகத்தில் தேவைப்படும் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்) |
|
9 |
வளங்களைக் கையாளுதல் |
சுற்றியுள்ள வெவ்வேறு வளங்களை அறநெறிகளை கொண்டு சிறந்த
முறையில் கையாள |
சமூகத்தில் உள்ள திறமையான மற்றும் திறமையற்ற நபர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல்.
அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளைப் பரிந்துரைத்தல் |
|
10 |
முன் உதாரணமாக இருத்தல் |
பயனுள்ள நேர்மறையான வழியிலான மதிப்புமிக்க
வாழ்வினால் சுற்றியுள்ளவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்த |
சமூகத்தில் உள்ள முதிர்வயதினர்/ மாற்று திறனாளிகளைக்
கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் |
|
11 |
விட்டுக்கொடுக்க கூடாதப் பற்றுறுதிகள் |
நிறைய காரியங்களைக் கருத்தில் கொண்டு உண்மையை
விட்டுக்கொடுக்காமல் நேர்மையாக நிலைநிற்க |
விழிப்புணர்வு
நிகழ்ச்சி (சமூகத்தில் தேவைப்படும் ஏதாவது ஒன்றின் அடிப்படையில்) |
|
12 |
தலைவரின் வெற்றி |
குழுவின் முழுமையான
வெற்றியே ஒரு தலைவரின் வெற்றி என்பதை உணர |
சமூகத்தில் விளையாட்டு / பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துதல்
|
குறிப்பு : தேவைக்கேற்ப அட்டவணையில் சில மாறுதல்கள் செய்துக்கொள்ளலாம்
எதிர்பார்க்கப்படும்
பயன்:
தலைமைத்துவ
திறன்களும் நம்பிக்கையும் மேம்படுத்தப்படும்
நடத்தை
மற்றும் குணம் நேர்மறையாக மாறும்
புதுமையாகப்
பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் முடிவெடுத்தல் வளரும்
நேரம், உடைமைகள் மற்றும்
திறமைகளைச் சரியான முறையில் பயன்படுத்துதல்
சமூக
அக்கறை மற்றும் பொறுப்பு மேம்படும்
தலைமைத்துவ
மேம்பாட்டின் விரிவாக்கம்:
ஒரு பகுதியில்
உள்ள பல்வேறு மக்கள் குழுக்கள் காரியங்களை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை சந்தித்து சில நேர்மறையான காரியங்களைப் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கான
சில புதுமையான திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆண்டுதோறும் அனைத்து மக்கள் குழுக்களும்
ஒன்றுகூடி அறிக்கைகள் மற்றும் கற்றல்களை ஒருவருக்கொருவர் முன்வைக்கலாம்.
அங்கீகாரங்கள்:
மக்கள்
குழுக்கள் சட்ட விதிகளை ஏற்று தங்களை சங்கங்கள் அல்லது சமூக அடிப்படையிலான அமைப்புகளாகப்
பதிவு செய்துகொள்வதுடன்,
பல்வேறு பணிகளை
மிகவும் முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் கையாள்வதற்கான முறையான மன்றமாகச்
செயல்படலாம்.
சமூக நல
நடவடிக்கைகளைச் செய்வதற்கான ஒரு முறையான குழுவாக மாற விரும்பும் ஆற்றல்மிக்க இளைஞர்
குழுக்கள்,
இந்திய அரசின்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் NYKS (நேரு யுவ கேந்திர சங்கதன் Nehru
Yuva Kendra Sangathan (nyks.nic.in)) இல் இளைஞர் கழகங்களாகப் பதிவு செய்ய
ஊக்குவிக்கப்படுவர்.
குழுக்கள்
ஒத்த எண்ணம் கொண்டதும்,
தங்கள் வட்டாரங்களில்
பரவலாகச் செயல்படுவதும்,
அணுகக்கூடியதாகவும்
இருக்கும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அடையாளம் காணலாம். அவர்கள் அவர்களுடன் இணைந்தும்
செயல்படலாம்.
Comments
Post a Comment