1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை
1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை
(ஒரு நல்ல தலைவரின் பண்புகள்
மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி அறிய)
1. தலைவர் /
தலைமைத்துவத்தை வரையறுத்தல்
அனைவருக்கும் மேலாக இருப்பவர் தான் கடைசியாக இருப்பதை
தேந்தெடுப்பவரும் மற்றவருக்குச் சேவை செய்பவராகவும் இருப்பார். மற்றும் எல்லா சிறந்த காரியங்களும்
கொண்டிருப்பினும்,
சிறந்த மேம்பாடு
மற்றும் சிறந்த முன்னேற்றத்தின் நோக்கத்தை அறிந்திருந்து சுயத்தைத் தாழ்த்திக்
கொள்ளும் எவரும் ஒரு பொழுதில் சிறந்தவராக உயர்வார். மேலும், அந்த நபர் குறிப்பிட்ட
சித்தாந்தங்களை தன்னுள் வைத்துக்கொண்டு சுற்றியுள்ள நபர்களைப் புண்படுத்தமாட்டார், ஆனால் அனைவரையும்
பாகுபாடின்றி ஏற்றுக்கொள்வார்,
சுயநலம்
இல்லாமல் சிறந்து விளங்குவதற்கும், மற்றவர்கள் தங்களை திருத்திக்கொள்ளவோ
அதிகாரப்படுத்தவோ விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய முயற்சித்து தன்னுடைய சிறந்த திறனைப்
பயன்படுத்துவார்.
தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கு மேல் இருப்பது
அல்லது அதிகாரம் செலுத்துவது அல்ல, ஆனால்
மற்றவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்பு அல்லது சேவை, மேலும் அது ஒரு நபரை மிக உயர்ந்தவராக
ஆக்குகிறது.
2. முதலாளித்துவமும் தலைமைத்துவமும்
ஒரு கூட்டத்தின் முதல்வராக இருக்கும் ஒரு நபரைக் கருத்தில்
கொண்டு,
அவரது
தலைமைத்துவப் பண்புகளைக் கணக்கிடுவது அதிக பயன் தராது. அந்த நபருடனான உறவு மாத்திரமே
அவரின் அணுகுமுறையையும் செயலையும் வெளிப்படுத்துகிறது, இது அவர் ஒரு முதலாளியா அல்லது
தலைவரா என்பதை வரையறுக்க உதவுகிறது. ஒரு நபருடனான தன்னார்வ மற்றும் நீடித்த உறவு
நாம் அந்த நபரைத் தலைவராக வரையறுக்கும்போது மட்டுமே சாத்தியமாகும், இல்லையெனில்
வார்த்தைகளால் சொல்லப்பட்டாலும் அந்த உறவு சில கொடுத்தல் வாங்குதலில் முடிந்துவிடும்.
ஒரு தலைவர் குழுவினரை கவனத்துடன் பாதுகாப்பார், அவர்களின் கவலைகள்
குறித்து கவனம் இல்லாமல் இருக்க மாட்டார். தலைவர் மிகப் பெரிய பண்புகளைக்
கொண்டிருந்தாலும் தன்னைத் தாழ்த்திக் கொள்வார், மேலும் அவரது சிறந்த திறன்களின்
நிமித்தம் பெருமைப்பட மாட்டார். தலைவர் குழுவினரை அவர்களின் நன்மைக்காக ஆவலுடன்
ஆதரிப்பார்,
ஆதாயத்திற்காக
அல்ல. தலைவர் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பார், மற்றவர்கள் மீது ஆதிக்கம்
செலுத்துவதில்லை. மற்றவர்கள் விருப்பத்துடன் காரியங்களைப் பின்பற்ற அல்லது செய்யத்
தலைவர் அனுமதிக்கிறார்,
எவரையும்
கட்டாயப்படுத்த மாட்டார்.
தலைவர் குழுவினர் சொல்வதைக் கேட்பார், குழுவினருக்கு
உத்தரவிட மாட்டார். தலைவர் மற்றவர்களுக்குச் சேவை செய்வார், சேவை செய்யப்படுவதில்
ஆர்வம் காட்ட மாட்டார். தலைவர் அனுதாபம் காட்டாமல் மற்றவர்களுடன் பரிவாக இருப்பார்.
தலைவர் அதிகம் ஆராய்ந்த பின் காரியங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார், மேலும் ஆணையிட
மாட்டார். தலைவர் குழுவை ஒழுங்குபடுத்துவார், தண்டிக்க மாட்டார். தலைவர்
குழுவினருக்கு ஆலோசனை கூறுவார்,
கைவிடுவதில்லை.
தலைவர் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வார் மற்றும் அவரது இதயத்தைக்
கடினப்படுத்துவதில்லை.
செயல்பாடு:
முதலாளித்துவம் மற்றும் தலைமைத்துவத்தின்
சிறப்பியல்புகள் சிறிய தாள்களில் எழுதிக்கொள்ளவோ அச்சிடவோ வேண்டும், அதை ஒரு காகித உறைக்குள்
போட்டுக்கொள்ள வேண்டும்.
கலந்துக்கொள்பவர்கள்
தனிநபர்களாகவோ குழுக்களாகவோ அந்தச் சிறப்பியல்புகளை ‘முதலாளித்துவம்’ மற்றும்
‘தலைமைத்துவம்’ ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் யோசித்து பிரிக்க வேண்டும்.
|
முதலாளித்துவம் |
தலைமைத்துவம் |
|
கட்டாயப்படுத்தல் |
விருப்பம்
அளித்தல் |
|
அதிகாரம்
செலுத்துதல் |
உதாரணமாக
இருத்தல் |
|
லாபகரமாக
இருத்தல் |
ஆர்வம்
கொண்டிருத்தல் |
|
கர்வம் கொண்டிருத்தல் |
தாழ்மையாக
இருத்தல் |
|
கவலையற்று
இருத்தல் |
கவனிப்பு
அளித்தல் |
|
கட்டளையிடுதல் |
கவனித்தல் |
|
சேவை
செய்யப்படுதல் |
சேவை
செய்தல் |
|
பரிதாபப்படுதல் |
புரிந்துக்
கொண்டிருத்தல் |
|
அதிகார
ஆணையிடுதல் |
தெரிவித்தல் |
|
தண்டனை
கொடுத்தல் |
ஒழுங்குப்படுத்துதல் |
|
கைவிடுதல் |
ஆலோசனை
அளித்தல் |
|
கடினமாகுதல் |
ஏற்றுக்கொள்ளுதல் |
3. ஒரு நல்ல தலைவரின்
குணாவதிசயங்கள்
ஒழுக்கம்:
ஒரு தலைவர் தன் சுய திருப்திக்கோ பரவலாக
நடைமுறையில் உள்ள கொள்கைகளுக்கோ உட்படக் கூடாது. தலைவர் சமூக ரீதியாக
மதிக்கப்படும் உயர்ந்த கொள்கைகளைச் சொற்களிலும் செயல்களிலும் கொண்டிருக்க
வேண்டும். எந்த விதத்திலும் ஒழுக்கக்கேடு அல்லது அடிமைத்தனத்திற்கு ஆளாகாமல்
இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு:
ஒரு தலைவர் கடந்த கால காரியங்களைக் கருத்தில்
கொண்டு,
தற்போதுள்ள
எல்லாவற்றையும் கவனமாக விழிப்புடன் கவனிக்க வேண்டும். ஒரு தலைவர் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்,
மற்றும் எதிர்பார்க்கப்படும்
நன்மைக்காக விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும்.
நல்ல நடத்தை:
ஒரு தலைவர் இரட்டை பேச்சைக் கொண்டிருக்கக் கூடாது, ஆனால் செயல்களிலும்
நடத்தையிலும் நேராக முன்னோக்கி இருக்க வேண்டும். ஒரு தலைவர் தான் பேசுவதை கடைப்பிடிக்க
வேண்டும்.
கற்பிக்க கூடிய தன்மை:
ஒரு தலைவர் சுய முன்னேற்றத்திற்காக எப்போதும் கறக வேண்டும், வெவ்வேறு புதிய
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு காரியங்களைக் கையாள வேண்டும். ஒரு தலைவர் தனிநபர் அல்ல, எனவே தலைவர் மற்றவர்களின்
நலனுக்காகக் கற்றுக்கொண்ட அனைத்தையும் கற்பிக்கவும் வேண்டும்.
விருந்தோம்பல் அளித்தல்:
ஒரு தலைவர் தனது சொந்த விஷயங்களை மாத்திரம் அனுபவித்து
தனியாக இருக்க முடியாது. ஒரு தலைவர் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்களை வரவேற்று
அவர்களின் தேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
பேராசை இல்லாதிருத்தல்:
ஒரு தலைவர் பேராசையுடன் நியாயமற்ற பணத்தைப் பெற கூடாது.
ஒரு தலைவர் சுயநல ஆதாயத்திற்காக அவதூறு செய்பவராக இருக்க கூடாது. ஒரு தலைவர்
தன்னிடம் உள்ள அனைத்தையும் வைத்துத் திருப்தியாக இருக்க வேண்டும், பொறுமையாக உழைப்பதன்
மூலம் விரும்பத் தக்க நேர்மறையான மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பிரபலமாக இருத்தல்:
ஒரு தலைவர் தான் ஈடுபட்டுள்ள மக்களுக்குப் பிரபலமானவராக
இருக்க வேண்டும். ஒரு தலைவர் என்பவர் முன்னோடி அல்லது பரம்பரையாக முன்னதாக
இருப்பவர் அல்ல,
ஆனால்
தலைவர் குழுவில் ஒருவராகவும்,
குழுவினருடன்
இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
தாழ்மை:
ஒரு தலைவர் தன்னை விடப் புத்திசாலியான
ஒருவரிடமிருந்து மட்டுமல்ல,
சுற்றியுள்ள
மக்களில் குறைந்தவர் என்று கருதப்படுபவரிடமிருந்து வரும் அறிவுரையைக் கூட ஏற்க
வேண்டும். ஒரு தலைவர் தான் சந்திக்கும் அனைவருக்கும் சேவை செய்பவராக இருக்க
வேண்டும்.
பொறுமை:
ஒரு தலைவர் எளியதும் சாதாரணதுமான காரியங்களுக்குக்
கோபப்படக் கூடாது. தலைவர் உணர்ச்சிவசப்படுவது தவறல்ல, ஆனால் உணர்ச்சிகளைச் சிறந்த
முறையில் வெளிப்படுத்த அதைப் புத்தியால் கட்டுப்படுத்தி சமப்படுத்தப்பட வேண்டும்.
சரியாக இல்லாத சில காரியங்களைச் சரிசெய்ய முயற்சிக்கும் முன், ஒரு தலைவர் சரியான
நேரத்தையும் நேர்மறையான மாற்றத்தையும் எதிர் நோக்க வேண்டும்.
நல்ல விதத்தில் பேசப்படுதல்:
ஒரு தலைவர் மற்றவர்களின் எண்ணங்களையும் தேவைகளையும்
கருத்தில் கொள்ளாமல் காரியங்களைச் செய்யமாட்டார். அவர் சரியானவற்றுக்காக நிலை நிற்க
வேண்டும்,
அதே
நேரத்தில்,
அனைவரையும்
ஒன்றுச் சேர்த்து,
சரியாகவும்
பொறுமையாகவும் காரணத்தோடு கருத்துக்களுக்கு உடன்பட அல்லது உடன்படாமலிருக்க
ஒப்புக்கொண்டு மற்றவர்களுடன் நன்றாக இருக்க வேண்டும், அப்படியானால் அவர் நல்ல
விதத்தில் பேசப்படுவார்.
உண்மை:
ஒரு தலைவர் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தி
எல்லாவற்றையும் நீதியுள்ளவனாகக் கையாள வேண்டும். ஒரு தலைவர் நேர்மையாக இருக்க
வேண்டும்,
அவர்
கையாளும் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
தைரியம்:
ஒரு தலைவர் தன்னுடைய சுபாவத்தையும் நேர்மையையும் இழப்பது
குறித்த காரியங்களைத் தவிர்த்து,
ஒருப்போதும்
யாருக்கும் பயப்படக் கூடாது. ஒரு தலைவர் தவறுகளைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், அதை ஏற்று சரி செய்ய வேண்டும், மேலும் குழப்பங்களைச்
சமாளிக்க கடுமையாகப் போராடித் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
பொறுப்பு:
ஒரு தலைவர் சுயத்திற்காக்ச் செல்வங்களைச் சேர்ப்பவராக
இல்லாமல் நல்ல பணியாளராக இருக்க வேண்டும். ஒரு தலைவர் சுயத்திற்காகப் பொறுப்பேற்க
வேண்டும்,
அத்துடன்
சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும்.
குற்றமற்றிருத்தல்:
ஒரு தலைவர் மிதமான தன்மையுடையவராக இருக்க
வேண்டும். அவர் வீண் விஷயங்களில் ஈடுபடக் கூடாது. ஒரு தலைவர் தவறுகள் நிறைந்தவராக
இருக்கக் கூடாது,
குற்றமற்றவராக
மாற எப்போதும் சுயத்தை புதுப்பிப்பவராக இருக்க வேண்டும்.
செயல்பாடு:
பங்கேற்பாளர்கள் குழுக்களாகப்
பிரிந்துக்கொள்ளலாம். தினசரி செய்தித்தாளிலிருந்து சில சூழ்நிலைகளைக் கொடுக்க வேண்டும்
மற்றும் அதிலிருந்து பங்கேற்பாளர்களுக்குத் தலைமைத்துவத்தின் தேவையை அடையாளம் காண
உதவ வேண்டும்.
4. ஒரு நல்ல தலைவரின்
தேவை
சுமையிலிருந்து வெளியே கொண்டு வருதல்:
ஒரு நல்ல தலைவர் தான் எதிர்கொள்ளும் மக்களின்
பிரச்சனைகள் மற்றும் துன்பங்களைப் புரிந்துகொண்டு, சுமையிலிருந்து வெளியேறுவதற்கு
அவற்றைத் தீர்க்க அல்லது புறக்கணிக்க, அல்லது
சரியான பாதையைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவ வேண்டும்.
சரியான திசையைக் காட்டுதல்:
ஒரு நல்ல தலைவர் எது சரி எது தவறு என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளும் நபராக இருக்க வேண்டும். இலக்கு மட்டும் முக்கியம் அல்ல, இலக்கை அடைய பின்பற்றப்படும்
பாதையும் கூட முக்கியம். ஒரு நல்ல தலைவர் சரியான இலக்கை அடைய மக்களைச் சரியான
பாதையில் நடத்தி செல்வார்.
மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ளுதல்:
ஒரு நல்ல தலைவர் எளிதில் கோபப்படுவதில்லை அல்லது
மக்களை எளிதில் கைவிடமாட்டார்,
ஏனென்றால்
அவர் எல்லாவற்றையும் பற்றி அக்கறையுள்ளவராகவும், மக்களிடமிருந்து எந்தவிதமான
நிபந்தனையும் இல்லாமல் அவருடைய தயவால் அவர்களை ஏற்றுக்கொள்வார். எனவே ஒரு நபர் மிகப்
பெரிய தவறு செய்தாலும்,
ஒரு நல்ல
தலைவர் அனைவரையும் மன்னிப்புடன் ஏற்றுக்கொள்கிறார்.
மக்களுக்கான பரிந்துரை செய்தல்:
ஒரு நல்ல தலைவர் மக்களைத் தங்கள் வரம்புகளுக்கும்
தவறுகளுக்கும் மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களைப் பலப்படுத்தவும், தவறுகளை மேலும் தொடர
வேண்டாம் என்றும் ஊக்குவிக்கிறார். அவர் மக்களை அப்படியே விட்டுவிடாமல், மக்கள் மீண்டு வருவதற்கும்
திறம்பட செயல்படுவதற்கும்,
தங்களிடமும்
மற்றவர்களிடமும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் பரிந்து பேசுவார்.
பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:
யாராவது எதையாவது ஒப்படைப்பதற்காகவோ அல்லது ஏதாவது
செய்ய நிர்பந்திக்கப்படுவதற்கோ ஒரு நல்ல தலைவர் காத்திருக்க மாட்டார், ஆனால் ஏதாவது
தேவைப்பட்டால் உணரப்பட்டவுடன் சுயமாகப் பொறுப்பேற்கிறார். ஒரு நல்ல தலைவர்
மக்களைச் செயல்பட தூண்டிவிடுகிறார், முன்னேறுவதன்
மூலம் ஒரு முன்மாதிரியாக மாறுகிறார்.
அறியாதவர்களுக்கு அக்கரை அளித்தல்:
ஒரு நல்ல தலைவர் மக்களை நன்கு அறிந்திருப்பார், வழிநடத்த யாரும்
இல்லாமல் பல காரியங்களைப் பற்றி அறியாதவராக இருப்பவர்கள் மீது இரக்கம்
காட்டுகிறார். ஒரு நல்ல தலைவர் அறிவற்றவர்களைக் குற்றம் சாட்டுவதில்லை, ஆனால் அறிவற்ற மக்கள்
விழிப்புடன் இருக்கவும்,
அவர்களின்
அறியாமையிலிருந்து அவர்கள் விடுபடவும் அக்கறை காட்டுகிறார்.
சிதறியவர்களின் மீது இரக்கம்:
ஒரு நல்ல தலைவர் பெருமை பேச விரும்புவதில்லை, அவருடைய பெயரால்
மட்டுமே அழைக்கப்படும் ஒரு குழுவை விரும்புவதில்லை, ஆனால் மக்களின் ஒற்றுமையில்
ஆர்வம் காட்டுகிறார். ஒரு நல்ல தலைவர் சிதறிய மக்களைப் பற்றிக் கரிசனையுள்ளவர், ஏனெனில் அவர்கள் நிறைய
சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குழுவினருக்காக உழைத்தல்:
ஒரு நல்ல தலைவர் என்பவர் மற்றவர்களிடமிருந்து
சேவையைப் பெறுபவர் அல்ல,
மற்றவர்களுக்குச்
சேவை செய்பவர். தலைமைத்துவம் என்பது பாராட்டப்படும் நிலை மட்டுமல்ல, அது குழுவினருக்கான
பொறுப்பும்,
தொடர்புடைய
மக்களுக்கு உழைப்பதும் ஆகும்.
5. சாத்தியமான பயன்
சுயநலம் அகற்றப்படுதல்:
நல்ல தலைமை இருக்கும்போது, சுயநலம் திறம்பட கையாளப்படும், மற்றவர்களுக்கு நன்மை
பயக்கும் ஒரு குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான சரியான பாதையைத் தலைவரே
காண்பிப்பதால் எல்லோரும் மற்றவர்களின் நன்மைக்குப் பங்களிக்கத் தொடங்குவார்கள்.
சலுகைகள் சமமாக அனுபவிக்கப்படுதல்:
ஒரு நல்ல தலைவர் தனது பராமரிப்பில் உள்ள மக்களுக்கு
அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்க உதவுவார், மேலும் வலுவான
பிரிவினரால் சுரண்டப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பார்.
ஒவ்வொருவரையும் கருத்தில் கொள்ளுதல்:
ஒரு நல்ல தலைவர் ஒரு எளிய விஷயம் முதல் ஒரு பெரிய
விஷயம் வரை அனைத்திலும் மற்றவர்களைக் கருத்தில் கொள்வார், தீர்மானங்கள் மக்களின் ஈடுபாடு
மற்றும் நலனுடன் இருக்கும். சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல
வேண்டியிருக்கும் போது நல்ல தலைமையின் கீழ் உள்ளவர்களும் மற்றவர்களையும் அவர்களின்
நலனையும் கருத்தில் கொள்வார்கள்.
சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இருக்க கற்றல்:
நல்ல தலைமை இருக்கும்போது, மக்கள் தங்களுக்குத் தெரியாத
வித்தியாசமான மற்றும் புதுமையான விஷயங்களையும் குறித்து
வெளிப்பாடு அடைவார்கள்,
மேலும்
நல்ல விஷயங்களைச் சரியான மதிப்பீடுகளுடன் சரியான வழியில் முயற்சிக்க நல்ல தலைவர்
மக்களை ஊக்குவிப்பார். தீர்வுகள் சரியான முறையில் கொண்டு வரப்படும், மேலும் அனைவரும்
சிறந்தக் காரியங்களைச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கற்றுக்கொள்வார்கள்.
வேறுபாடுகளில் ஒற்றுமை:
நல்ல தலைமை இருக்கும்போது, மக்களிடையே ஒற்றுமையும்
நல்லிணக்கமும் இருக்கும். வேறுபாடுகள் ஆக்கபூர்வமாக இருக்கும், பாகுபாட்டை நோக்கி
அல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் பயனளிக்க கூடிய விதத்தில் வெவ்வேறு காரியங்களில்
தங்கள் பலத்தை ஒப்புக்கொள்வார்கள், மற்றும்
ஒருவருக்கொருவர் தங்கள் வரம்புகளில் பலப்படுத்துவார்கள்.
ஒருவரையொருவர் ஊக்குவித்தல்:
நல்ல தலைமை இருக்கும்போது, நீதியும் ஒழுக்கமும்
இருக்கும். மக்கள் எதை வேண்டுமானாலும் செய்யமாட்டார்கள், செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
பின்னால் ஒரு பெரிய நோக்கத்துடன் சரியான தகுதியான பொதுவான தரநிலைகள் இருக்கும்.
முன்னேற்றத்திற்காக ஒருவரையொருவர் திருத்தம் செய்வார்கள், குற்றச்சாட்டுவதற்கு அல்ல.
Comments
Post a Comment