முன்னுரை
முன்னுரை
நம்மில்
பெரும்பாலோர் சுயத்தை மையமாகக் கொண்டவர்கள், நமக்குத் தொடர்புடைய இடங்களில்
நாம் வகிக்கும் தலைமைப் பதவிகள் கூட அதிகாரம், பதவி அல்லது உடைமைகள் போன்று
நமது சுயநலத்திற்காகவே உள்ளன. காரியங்களை நாம் எடுத்ததன் காரணமாகவோ அல்லது நமக்கு அது
கொடுக்கப்பட்டதன் காரணமாகவோ நாம் நமது உரிமைகளைக் கோருகிறோம் மற்றும் சலுகைகளை அனுபவிக்கிறோம், ஆனால் பெரும்பாலான
நேரங்களில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் நாம் பொறுப்பேற்று இருக்கும்
எல்லாவற்றிலும் நமக்கிருக்கும் பொறுப்புகளைப் பற்றிச் சிந்திப்பது குறைவே.
நாம்
ஒவ்வொருவரும் நமது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்க முடியும். நம்
ஒவ்வொருவரின் அபரிமிதமான ஆற்றலைச் சிறிய முயற்சியுடனும் கற்றலுடனும் சரியான
முறையில் பயன்படுத்தினால்,
அது
சமூகத்தில் ஒரு பெரிய நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும். ஒரு சிறிய முயற்சி
சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தலைமைத்துவம் எல்லா இடங்களிலும் தேவை, எல்லோரும் ஒரு தலைவராக
இருக்க முடியும். ஒரு நபர் மற்றொரு நபரையோ அல்லது ஆயிரக்கணக்கான மக்களையோ வழிநடத்துபவராயினும், அவர்களைச் சரியான
வழியிலும் சரியான மதிப்பீடுகளிலும் வழிநடத்தும் ஒரு நபராக ஒரு தலைவர் இருக்க
முடியும்.
‘சமூக சூழலில் தலைமைத்துவ
மேம்பாட்டிற்கான கையேடு'
என்பது
நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள்
மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும்
உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில்
ஈடுபடுவதன் மூலம்,
நம்மை
நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற்றும்
சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்திற்காக நாம் விமர்சன ரீதியாகச்
சிந்திக்கவும்,
ஒருவருக்கொருவர்
ஒத்துழைக்கவும் முடியும்.
திறந்த மனதுள்ளாவர்களாக நீதியுடனும் நேர்மையுடனும்
இருப்பதற்கு நம்மை நாமே கவனமாகப் பகுப்பாய்வு செய்யும் போது, ‘சமூக சூழலில் தலைமைத்துவ
மேம்பாட்டிற்கான கையேடு’ நமது குணாதிசயத்தையும் நடத்தையையும் சரியாக அமைத்துக்
கொள்ள உதவும்.
மனிதர்கள்
சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களாக இருக்க முடியும். சிறிய வழிகாட்டுதலின்
மூலம் அவர்களின் அதிகபடியான திறனைச் சரியான விதத்தில் பயன்படுத்தினால், அது சமூகத்தில்
சாதகமான பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
மக்கள்
குழுக்கள்:
மக்களின்
நலனுக்காகச் சிந்தித்து செயல்படும் ஆற்றலுள்ள சிறு குழுக்கள் சமூகத்தில் பெரிய
மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ‘சமூக சூழலில் தலைமைத்துவ
மேம்பாட்டிற்கான கையேடு’
என்பதை பயன்படுத்தி
அளிக்கும் தலைமைத்துவ பயிற்சியானது, மக்கள் குழுக்கள் குறிப்பாக இளைஞர்கள்
தலைமைத்துவ பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் தங்களை முழுமையாய் வளர்த்துக்
கொள்வதற்கும்,
அவர்களைச்
சுற்றியுள்ள மற்றவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருக்கும்.
கவனம் செலுத்தப்படும் வயதினர் 13 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லாமல்
இருக்கலாம். ஒரு சிறந்த குழு 8-12 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
தலைமைத்துவ
மேம்பாட்டு பயிற்சி அல்லது பயிற்சியின் நோக்கம்:
நேரம்
மற்றும் திறமைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் சமூகத்தில் ஈடுபடுவதன் மூலமும் மக்கள்
நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் இருக்க தூண்டுதல்.
மக்கள்
விமர்சன ரீதியாகச் சிந்தித்து,
ஒருவரோடு
ஒருவர் ஒத்துழைத்துப் புதுமைகளின் மூலம் சிக்கல்களைத் தீர்த்து நேர்மறையான மாற்றத்தைக்
கொண்டுவரச்செய்தல்.
செயல்
வடிவம்:
கலந்தாலோசித்து
குறித்த நேரத்தில், மக்கள் குழுக்களுக்கு 1.5 மணி நேரம் அளவில் மாதம் ஒருமுறை தலைமைத்துவத்தை
மையமாகக் கொண்ட பயிற்சிகள் வழங்கப்படலாம்.
மேலும் மக்கள் குழுக்கள் வாரந்தோறும் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலுடன் 1.5 மணிநேரம்
சந்திக்க ஊக்குவிக்கப்படலாம்,
தலைமைத்துவ
திறமைகளை வளர்க்க வாழ்க்கைத் திறன், மதிப்பீடுகள் அடிப்படையிலான தலைபபு, அல்லது விழிப்புணர்வை
அளிக்கும் தலைப்பைக் கொண்டு செயல்பாடுகளைத் திட்டமிட்டு உருவாக்கி அவர்களில்
ஒருவர் 15-20 நிமிடங்கள் சுழற்சி முறையில் மற்றவர்களை வழிநடத்தலாம். தேவையின்
அடிப்படையில் வழிகாட்டிகள் வழிகாட்டுதல் வழங்கலாம். குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து
தீர்மானித்தவாறு சில திட்டங்களைக் காலக்கெடுவுக்குள் செயல்படுத்த வேண்டிய பொழுதெல்லாம்
அவர்கள் சேர்ந்து சந்திக்கலாம்.
Comments
Post a Comment