10. ஒரு தலைவரின் வெற்றி
10. ஒரு தலைவரின் வெற்றி ( ஒரு குழுவில் உள்ள அனைவரின் வெற்றியே தலைவரின் வெற்றி என்பதை அறிய) 1. முழுமையான வெற்றி தீமையை விட்டு விலகி நீதியைப் பின்பற்றுதல்: சில சமயங்களில் ஒரு தனிமனிதர் வெற்றியாளராகக் காணப்படலாம் , ஆனால் அவர் பலரின் துன்பம் அல்லது சுரண்டலின் மூலம் அவ்வெற்றியை பெற்றிருக்கலாம். ஒரு நல்ல தலைவர் சில நியாயமற்ற ஆதாயத்தினால் வெற்றியை ப் பெறமாட்டார். ஒரு நல்ல தலைவர் எப்போதுமே தீமையிலிருந்து விலகி , சரியானதை பின்பற்ற வேண்டும் , அது அவர்களுக்கு த் தனிப்பட்ட முறையில் நன்மை தருகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் , தீமையானது ஏதோ ஒரு கட்டத்தில் நிச்சயமாக யாரையாவது அல்லது எதையாவது பாதிக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பழி மற்றும் ஒழுக்கக்கேடு இல்லாமல் இருத்தல்: பிறரிடமிருந்து பெறும் செய்திகளையோ அல்லது தகவலையோ நாம் அனைவரும் சரிபார்ப்பதில்லை என்பதால் , ஒருவரைக் களங்கப்படுத்த ஏதுவான தவறான செய்திகளைப் பரப்புவது எளிது. ஒரு நல்ல தலைவர் குற்றமற்றவராகவும் ஒழுக்கமுள்ளவராகவும் இருப்பார் , மற்றவர்களிடமிருந்து நல்ல பெயரைப் பெறுவதற்காக அல்ல , ஆனால் கபடற்று இருக்கவும் , ...