8. ஒரு முன்மாதிரியாக இருத்தல்
8.
ஒரு முன்மாதிரியாக இருத்தல்
(ஒரு
தகுந்த
வாழ்க்கையின் மூலம் நேர்மறையான முறையில் சுற்றியுள்ள மற்றவர்களித்தில்
தாக்கத்தை ஏற்படுத்துதல்)
1.
சரியான வார்த்தைகள் மற்றும் செயல்கள்
ஆசைப்படுவது
மட்டுமல்ல, செயலாக்கப்படுத்துவது:
பெரும்பாலான
நேரங்களில் உணவு அல்லது துணி இல்லாமல் இருக்கும்
ஒரு நபரைப் பார்க்கும்போது, அவர்களுக்கு
அது கிடைக்க வேண்டும் என்று நாம் அனுதாபம் கொள்கிறோம்,
ஆனால்
அதைச் செயலாக்கப்படுத்த
அதிகம் யோசிப்பதில்லை, ஆனால்
நம்மால் அதற்காக
ஏதாவது செய்ய முடியும். நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சனைகளுக்காகவும்
நம்மைத் தொந்தரவு செய்யும் ஏதாவது காரியத்திற்காகவும்,
அதைச் சரி செய்ய ஏதுவாக
ஏதாவது செய்ய வேண்டும்,
அதில்
நமது அக்கறையை உண்மையாகக்
காட்ட வேண்டும். மேலும் சில நேரங்களில் அனுதாபம் கொள்வதோடு
சில விஷயங்களைச் செயல்படுத்துவது, நம்
மீது பிறருக்கு தன்நம்பிக்கையையும்
நம்பிக்கையையும் உருவாக்குகிறது, மற்றும்
பலர் நம்மை அணுகும்போது ஆறுதல் பெறுவார்கள்.
செயல்கள்
இல்லாத
ஆசைகள், இறந்ததற்கு
சமானம்:
மிகவும்
எளிமையான விஷயங்கள் முதல் அசாதாரண சாதனைகள் மற்றும் வாழ்வின்
வெற்றிகள்
வரை நாம் மற்றவர்களை எப்போதும் வாழ்த்துகிறோம்.
மேலும், அவர்களின்
கஷ்டங்கள் மற்றும் துன்பங்களின் நேரத்தில் அவர்கள் நலமாக இருக்க விரும்புகிறோம்.
மகிழ்ச்சியின் போது நாம் நிறைய நேரங்களில்
செயல்படாவிட்டாலும், நம்முடைய
இடைபாடு இல்லாமல் மற்றவர்கள்
தங்களை தாங்களே நிலைநிறுத்திக்கொள்ள
முடியும் என்பதால் அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் துக்கத்தின் போது
சில விஷயங்களுக்காக நாம்
செயல்படும்போது அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது,
மேலும்
அது மற்றவர் தம்
சுயத்தைப் புதுப்பித்து மதிப்பீடுகளுடன்
தகுதியான காரியங்களைத்
தொடர்வதற்கான நம்பிக்கையை
அளிக்கிறது.
விலகலைத்
தவிர்த்தல்:
நிச்சயமாக
நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு சில
சூழ்நிலைகள் இருக்கும் மற்றும் எதிர்பாராத விஷயங்களும்
நடக்கும், இது
முன்குறித்த
திட்டம் மற்றும் செயல்முறையிலிருந்து நம்மை விலகச்
செய்யும். உயர்ந்த தரங்களின் அறிவைக் கொண்ட ஒரு புத்திசாலியான
மனிதன் சிற்றின்பம் தரும் தவறான
விஷயங்களைத் தவிர்த்து, வாழ்க்கையின்
எந்தக் கட்டத்திலும் சாந்தத்துடன் தனது செயல்களில்
நல்ல நடத்தையைக் கொண்டிருப்பார்.
ஒரு நல்ல தலைவர் வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்
மற்றும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடாது,
ஆனால்
எப்போதும் தனது வாழ்க்கையின்
மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது சரியான முறையில் செயல்படுவதன்
மூலம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத
சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
பேச்சில்
கவனமாக இருத்தல்:
ஒரு நாக்கு
உடலின் மிகச் சிறிய பகுதியாகும், ஆனால்
மாற்றி அமைக்கப்படும் வார்த்தைகளாலும் வஞ்சனையுள்ள
வார்த்தைகளாலும் அது உலகத்தைத்
தலைகீழாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. ஒரே வாயிலிருந்து வாழ்த்துதலும்
சபித்தலும்
வெளிவருகிறது, ஆனால்
மக்கள் வாழ்த்துதல்களை
விட நாம் உச்சரிக்கும் சாபத்தை நினைவில் கொள்கிறார்கள். நாம் பேசும் வார்த்தைகளில்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால்
உண்மையான கரிசனையோடு
பேசப்படும் வார்த்தைகளை மற்றவர் தாங்கள் விரும்பும்
விதத்தில் விளக்குவதன் மூலம் வேறு ஏதாவது அர்த்தத்தில்
எடுத்துக்கொள்ளச் செய்ய முடியும். மேலும்,
மற்றொரு
நபரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழிவுபடுத்தும் அல்லது சங்கடப்படுத்தும்
வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும். ஒரு நல்ல முன்மாதிரியாக இருப்பதற்கு நாவை
அடக்குவது மிகவும் அவசியம்.
செயல்பாடு:
சூழ்நிலையும்
பங்கு நாடகமும்
அனைத்து பங்கேற்பாளர்களும்
5-8 உறுப்பினர்களைக்
கொண்ட குழுவை உருவாக்கலாம். ஒவ்வொரு குழுவிலும்
யாரோ ஒருவர் மிகக் கடுமையாகப் பேசுவது அல்லது நடந்து கொள்வது போன்ற ஒரு
சூழ்நிலையைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும், மேலும்
மற்றொரு சூழ்நிலை என்னவெனில் யாரோ
ஒருவர் மற்றவர்களுடன் நன்றாகப் பேசுதல்
மற்றும் நடந்துகொள்ளுதல்.
அவர்கள் மற்ற குழுக்கள் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக
இரண்டு சூழ்நிலைகளையும்
செயல்முறைபடுத்த
வேண்டும். இரண்டு சூழ்நிலைகளையும் கவனமாகக் கவனித்த பிறகு,
உணர்வுகள்
மற்றும் எண்ணங்களில் அது எவ்வாறுமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை மற்ற குழுக்கள்
கவனிக்க வேண்டும்.
2.
சரியான அணுகுமுறை மற்றும்
மதிப்பீடுகள்
மனதினை
கட்டுப்படுத்துதல்:
நம்
ஒவ்வொருவருக்கும் நம் உணர்வுகள் உள்ளன, அதிலிருந்து
வெவ்வேறு உணர்ச்சிகள்
எழுகின்றன. நம் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தைப்
பல விஷயங்கள் பாதிக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் சரியான உணர்வுகளைச்
சரியான முறையில் வெளிப்படுத்த நம் மனதினை கட்டுப்படுத்துவது
அவசியம். ஒருவரையொருவர்
சகித்துக்கொள்வதற்கும் மன்னிப்பதற்கும் நாம் இரக்கம்,
மனதுருக்கம், பணிவு,
சாந்தம்
மற்றும் பொறுமை ஆகியவற்றை நம் மனதினில் கொள்ள
வேண்டும். நமக்குள்ளும் மற்றவர்களோடும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு,
நமக்குத்
தவறுச்
செய்தவர்களை மன்னிப்பதில்
கூட நம் மனதினை
வடிவமைக்க வேண்டும்.
பரிபூரணத்தின்
பிணைப்பை அணிதல்:
நம்மை மிகவும்
சிறப்பானவராக்வும்
நல்லவராகவும்
ஆக்கும் பல தன்மைகள்
நிச்சயமாக உள்ளன. ஆனால் மிகக் கடினமாகவோ தாராளமாகவோ
இருப்பது அனைத்து தன்மையையும்
பயனில்லாததாகவும் மாற்றியமைக்கப்பட்டதாகவும் ஆக்கலாம்.
சிந்தனையையும் உணர்வைவும்
சமநிலையில் இருக்க செய்யாத கடினத்தன்மையோ தாராளத்தன்மையோ
அழிவை ஏற்படுத்தும். நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் அன்பு என்ற மிகப்பெரிய
காரணிக்கு அதிக
இடத்தைக் கொடுப்பது, நம்மிடம்
இருக்கும் காரியங்களிலும், நாம்
செய்யும் எல்லாவற்றிலும் எப்போதும் சமநிலையை கொண்டிருக்க
உதவும். எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் இல்லாத உண்மையான அன்பு
செலுத்துதலை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
மனதில்
உயர்ந்த மதிப்பீடுகள் கொண்டிருத்தல்:
நாம் பழக்கமாக்கும்
பல்வேறு காரியங்களையும்,
காரியங்களைச் செய்யும் விதத்தையும் கவனமாகச்
சிந்திப்பது மிகவும் முக்கியம். எல்லாவற்றையும் சரிபார்ப்பதும்,
நாம்
வழக்கமாகச் செய்யும் காரியங்களைக்
கூட மறுபரிசீலனை செய்வதும் அவசியம், ஏனென்றால்
அவை நம் வாழ்க்கையில் இருக்க
வேண்டிய மதிப்பீடுகளுக்கு
முரணாக இருக்கலாம். வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பீடுகள்
நம் வாழ்வின் எல்லாப்
பகுதிகளிலும் அனைத்து
ஞானத்தோடும் வலிமையாக இருக்க
வேண்டும். இது மற்றவர்களுக்கும்
கற்பிக்கப்பட வேண்டும், மேலும்
ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறி
அவர்கள் சிறந்து விளங்க உதவ வேண்டும்.
மற்றவர்களின்
ஆர்வத்தை கருத்தில் கொள்ளுதல்:
ஒன்றுமே
தெரியாது என்று உலகில் யாரும் இல்லை,
ஒவ்வொருவருக்கும்
அவரவருக்கான
தனித்துவம் உள்ளது. நமது
முந்தைய அல்லது தற்போதைய நிலையைப் பொருட்படுத்தாமல்,
நாம் பெற்றிருக்கும் சிறந்த காரியங்கள் எதுவாக
இருந்தாலும், நாம்
எப்போதும் தாழ்மையுடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் சுயநலத்தை
மறுத்து மற்றவர்களின் நலன்களை எப்போதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
குற்றமற்றவர்களாகவும், தீங்கற்றவர்களாகவும்
இருந்து, முணுமுணுக்காமலும்,
வாக்குவாதம்
செய்யாமலும்
நாம் காரியங்களைச் செய்ய வேண்டும்.
3.
ஒப்படைத்து விட்டுவிடுதல் அல்ல செயல் விளக்கம் அளித்தல்:
பிறரை
மகிழ்விக்கும் செயல்கள்:
சில
சமயங்களில் நாம் நிறைய பேசுகிறோம், நம்மைச்
சுற்றியுள்ளவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்,
ஆனால்
நாம் நம் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம்,
நாம்
செய்யக்கூடாததை நாமே செய்கிறோம். பெரும்பாலும் மக்கள் நம் வார்த்தைகளை விட
செயல்களை அதிகமாகக் கவனிக்கிறார்கள்,
மேலும்
நமது வார்த்தைகளிலும் செயலிலும் பெரிய விலகல் இருக்கும்போது,
அவர்கள்
நம்மை நம்ப
மாட்டார்கள், நம்மிடம் எதையாகிலும் கேட்கவோ
அல்லது அணுகவோ விரும்ப மாட்டார்கள். நாம் மற்றவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும்,
மற்றவர்களுக்கு
ஊக்கமளிக்கும் ஒரு
ஆதாரமாக இருக்க வேண்டும். நாம் பலவீனமானவர்களின் அக்கிரமங்களைச் சுமக்க வேண்டும்,
மேலும்
நற்செயல்கள் மூலம் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயற்சிக்க வேண்டும்,
அதே
போல் நமது வரம்புகளையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வரம்புகள் இருப்பினும்
மற்றவர்களை வரவேற்றல்:
மற்றவர்களின்
தவறுகளைச்
சகித்துக் கொள்வது மிகவும் கடினம், குறிப்பாக
நாம் செய்யும் செயலில் அவை பேரழிவையோ
இடையூறையோ
ஏற்படுத்தும்
போது. மேலும், குறைவான
வெளிப்பாடு, குறைந்த அனுபவம்
அல்லது வாழ்க்கையின் குழப்பமான சூழ்நிலைகள் போன்றவற்றின் காரணமாகக்
குறைவான திறன் கொண்டவர்கள் உள்ளனர். அந்த நபரின் மனப்பான்மையை நாம் ஆராய்ந்து,
எதிலும்
திறமையில்லாதவர்களாகவும் அல்லது
அணுகுமுறையில் பிரச்சனை
உள்ளவர்களாகவும் இருப்ப்வர்களை
கூட, அவர்கள்
பயனுள்ள
விதத்திலும்
மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுவதற்காக எப்போதும் அவர்களை
ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
சகிப்புத்தன்மை
மற்றும் செயலில் பொறுமை:
சில
விஷயங்கள் சாத்தியமில்லாத போதும்
சில விலகல்களுடன் அல்லது நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் இருக்கும் போதும்
எல்லா
மனிதர்களுக்கும் கோபம் மற்றும் கசப்பு உணர்வுகள் நிச்சயமாக ஏற்படும்.
ஆனால், நாம்
மற்றவரின் நிலையிலிருந்து யோசிக்க
தொடங்கும்போதும், மற்றவரின்
உள் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்வதன் மூலமும்,
உயர்ந்த
மதிப்பீடுகளையும்
உண்மையையும் அறிந்து ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமும்,
மரண பரியந்தம் நம்மை அவமதிப்பவர்களிடமும்
துன்புறுத்துபவர்களிடமும் கூடச் சகிப்புத்தன்மையையும்
அதீத பொறுமையையும் காட்ட முடியும்.
மன்னித்தலும்
வெறுப்பு
இல்லாமல் ஏற்றுக்கொள்ளுதலும்:
தெரிந்தே
யாருக்கும் எதற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்காக,
வாழ்க்கையின்
உயர்ந்த மதிப்பீடுகளின்படி
இருக்கும் தரநிலைகள் மற்றும் கொள்கைகளுடன் ஒரு தலைவர் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு சிறந்த தலைவர் எதிரியின் தவறை மன்னித்து,
துன்புறுத்துபவர்களைக்
கூட வெறுப்பின்றி ஏற்றுக்கொள்வார், அவர்கள்
அதைத் தொடர்ந்து செய்தாலும், அவர்களின்
நலனை விரும்பி, அவர்களின்
வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை எதிர்பார்ப்பார்.
செயல்பாடு:
தலைவரின் வழிமுறைகளைப் பின்பற்றுதல்
அனைத்து
பங்கேற்பாளர்களும் 5-8
உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உருவாக்கலாம். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் ஒரு
தலைவரைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குழு
முன் வரலாம்.
தலைவரைத் தவிர அனைவரின்
கண்களும் மூடி இருக்க
வேண்டும். ஒரு
படம் அல்லது சூழ்நிலையைப் பிரதிபலிக்கும்
நிலையில் உறுப்பினர்களை நிற்க வைக்கத்
தலைவர் வழிமுறைகளைச் சொல்ல
வேண்டும். உறுப்பினர்கள் தலைவரின் அறிவுரைகளைக்
கவனமாகப்
பின்பற்ற வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ள
வேண்டும், தலைவர்
கூட இறுதியாக ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மற்ற குழுக்கள் படத்தில் என்ன உள்ளது அல்லது
அது என்ன சூழ்நிலை என்பதை
அடையாளம் காண வேண்டும்.
4.
சுயநலத்தைத் எடுத்துப்போடுதல்
வெவ்வேறு தாலந்துகளும்
திறமைகளும்:
ஒவ்வொருவருக்கும்
ஏற்கனவே அவர்களிடம் இருக்கும்
அல்லது இன்னும் அவர்கள்
அடையாளம் கண்டு பயன்படுத்தாத சில தாலந்துகள்
உள்ளன. மேலும், நிபுணராக
நாம் இல்லாவிட்டாலும் நம் அனைவருக்கும் சில திறமைகள் உள்ளன,
அதனால், ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில்
பங்களிக்க முடியும். ஒரு நல்ல தலைவர் தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் தாலந்துகளையும்
திறமைகளையும் அடையாளம் கண்டு, அவரை
அணுகும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாய்ப்பை வழங்க முயற்சிக்கிறார். மேலும்,
தாலந்துகளும் திறமைகளும் சுயத்தை
மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, மற்றவர்களின்
நன்மைக்காகவும் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒன்றாகச்
சேர்ந்து செயல்படுவதில்
உள்ள சிறந்த உணர்வு:
சில வேலைகளை
நாமே பொறுப்பேற்று செய்து முடிக்க முயலும் போது நிச்சயமாக அதிக பொறுப்பும் நம்முடையது
என்ற உணர்வும் இருக்கும். ஆனால்,
குழுப்பணியின்
முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு நம்மில் பலர் ஒன்றாகச் செயல்படும்போது,
சாதனைகளும்
செயல்திறனும்
நிலைத்தன்மையும் அதிகமாக
இருக்கும்.
நாமே காரியங்களைச் செய்யும்போது, நாம்
நம்மை மேம்படுத்திக் கொள்கிறோம், ஆனால்
மற்றவர்களை ஈடுபடுத்தும்போது, நம்மை
மேம்படுத்துவதுடன், மற்றவர்களையும்
கட்டியெழுப்புகிறோம், மேலும்
அதில் ஒரு பெரிய பயன்
இருக்கிறது.
எல்லாம்
கடந்து போகும், அன்பு ஒருபோதும் அழியாது:
ஒரு குழுவில்
சேர்ந்திருப்பது
எப்போதுமே கடினம், ஏனெனில்
சில முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, சில
நிலையான நடைமுறைகளை நாம்
பின்பற்ற வேண்டும் மற்றும் சில பொதுவான கொள்கைகளைக் கொண்டிருக்கவும்
வேண்டும். நம்மிடம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதும்
முறையானதுமான
கொள்கைகள் அல்லது நடைமுறைகள் இருந்தாலும்,
வெவ்வேறு
நபர்கள் தங்கள் சுய
சூழ்நிலைகள் மற்றும் பின்னணிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக எடுத்துக்கொள்கிறார்கள்,
ஏனெனில் மனிதர்கள் சிந்தனைகளை
மட்டுமல்ல உணர்வுகளையும் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், முன்பு
உருவாக்கப்பட்ட அனைத்தும் மற்றும் ஒவ்வொரு முன்னுரிமையும் மாறினாலும்
கூட, அன்பின் காரணி மட்டுமே எல்லாவற்றையும் சரிசெய்தும்
சமரசம் செய்தும்
மீண்டும் ஒன்றிணைக்க முடியும்.
தேவையானவற்றைப்
பயன்படுத்தி பயனுள்ளவராக இருத்தல்:
பெரும்பாலான
சமயங்களில் உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காமலும்,
தேவையை
நாமே நிறைவேற்றுவது சாத்தியமா அல்லது வேறொருவரின் ஆதரவு தேவையா என்று
யோசிக்காமலும், அறிந்தோ அறியாமலோ நம்மிடம் இருப்பதைப்
பயன்படுத்த முயற்சிப்போம். மேலும், சில காரியங்களில்
மிகவும் திறமையான நபர்கள் இருப்பார்கள், எனினும்
சூழ்நிலைக்கு வேறு ஏதாவது தேவைப்படலாம், ஆனால்
அந்த நபர் சுயத்தை உயர்த்தி, தான்
நிபுணத்துவம் பெற்றதைச் செய்ய விரும்புவார்கள்.
ஒரு நல்ல தலைவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டுவதில் ஆர்வம் காட்டாமல்,
தேவையானதைச்
செய்து அதில்
சிறந்த விளங்குவார்.
5.
உயர்ந்த மரபை விட்டுச் செல்லுதல்
உண்மையான
நன்மையைக் கண்டறிதல்:
நாம் சரியான்
வழியில் நடக்கும்போது,
சரியான
வழிமுறைகளைப் பின்பற்றும்போது, உண்மையான
மனிதர்களின் பார்வையில் உண்மையான தயவு இருக்கும்,
மற்றும் பொறாமை கொண்ட சிலரும் இருக்கலாம்.
ஒரு நல்ல தலைவனுக்குச்
சில கொள்கைகள் மற்றும் நடத்தை விதிகள் உள்ளன,
அதை
யாராலும் கொள்ளையாட
முடியாது. சரியானதை நோக்கி இருப்பதில்
அவர்கள் நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள். சிலர் அவர்களைத் துன்புறுத்தினாலும்,
துன்பங்கள்
இருந்தாலும், அவர்கள்
உண்மையைப் பின்பற்றும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்,
இதன்
மூலம் நெருங்கிய தொடர்புடைய மக்களின் பார்வையிலும்,
அவர்களைத்
துன்புறுத்தும் நபர்களின் பார்வையிலும் கூட
உண்மையான தயவைக் கண்டடைகிறார்கள்.
ஒழுங்கின்மையிலிருந்து
விலகுதல்:
சில
நடைமுறைகள் அல்லது செயல்முறைகள்
சட்டமாகிவிட்டன, ஏனெனில்
அவை பெரும்பான்மையானோரால்
தேர்வு செய்யப்படுகிறது.
பெரும்பான்மையினால் நாம்
கவரப்பட கூடாத, ஆனால் எப்போதும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சரியானததுமான
காரியங்களின் ஒரு பகுதியாக இருக்க
வேண்டும். நாம் செய்யும் அல்லது பின்பற்றும்
செயல்கள் சரியானதா என்பதையும் அல்லது
ஒழுங்கின்மை நோக்கி விலகிச் செல்கிறதா என்பதையும்
எப்போதும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவது,
செய்வது
மற்றும் சொல்வது போன்றவற்றால் ஒரு நல்ல தலைவர் ஒருபோதும் ஈர்க்கப்பட
மாட்டார், ஆனால்
எப்போதும் மகிழ்ச்சியானதையும் நன்
மையானதையும் செய்ய முயற்சிப்பார்.
பின்பற்ற ஒரு
எடுத்துக்காட்டு:
உலகில் உள்ள
பலருக்கு முன்மாதிரியாகப்
பலர் உள்ளனர். நாம் செய்யும் விதமும், பேசும்
விதமும் மற்றவர்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கிறது. நாம்
ஒருவருக்கு முன்மாதிரியாக இருக்கும்போது, அவர்களுக்கு
நல்ல விஷயங்கள் மட்டுமல்ல, நம்மில்
என்ன தவறு இருக்கிறதோ அதுவும் பிடிக்கப்படுகிறது.
அதேபோல், ஒருவரை
முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும்போது, கெட்ட
பழக்கங்களைக் கூட நல்லதாகப் பகுத்தறிய முயற்சிக்கிறோம்.
ஒரு நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுவது மிகவும் கடினம்,
மேலும்
ஒரு நல்ல உதாரணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஒரு நல்ல தலைவர் தன்னைப்
பின்தொடரச் சொல்வதை விட, தவறுகளில்
இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்,
மேலும்
அவரது குழுவினருக்கு எது சிறந்தது என்பதைக்
கூறுகிறார்.
நன்மை
செய்வதில் சோர்வடைய வேண்டாம்:
அன்றாட
வாழ்விற்காகப் பாடுபடாமல், நல்ல
நிலைக்குச் சென்றுவிட்டால், சில
நன்மைகளைச் செய்வது எளிது. ஆனால் ஒரு நல்ல தலைவர் சிறந்தவிதத்தில் தன்னால்
இயன்றதைச் செய்ய முயற்சிப்பார், அவரால்
ஒரு காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும்,
ஆதரவளிக்கும்
திறன் கொண்ட ஒருவரைக் கண்டறிந்து நிச்சயமாக அவர் ஏதாவது செய்வார். சில சமயங்களில்
சிலர் தங்களுக்காகச் செய்யப்படும் காரியங்களைத்
தீவிரமாக எடுத்துக்
கொள்ளாமல், செய்ததைக்
குறை கூறும்போது, நன்மையைச்
செய்வதில் ஊக்கமின்மை
இருக்கும். ஆனால் ஊக்கமிழக்க செய்பவர்கள் உட்பட பலருக்கு ஒரு கட்டத்தில் அந்நன்மை
தேவைப்படுகிறது, இருப்பினும்
அதன் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியாது.
புத்திசாலியாகவும்
எல்லா மனிதர்களுக்கும் அணுகக்கூடியவராகவும் இருத்தல்:
ஒரு நல்ல
தலைவர் என்பவர்
பின்பற்றப்படுபவர், போற்றப்படுபவர்,
ஊக்கமளிப்பவர்
மற்றும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஏதுவானவர்.
மக்கள் மத்தியில் அவரின்
புகழ் மற்றும் பிரபலத்தின்
காரணத்தாலும், சிலரின்
குறுக்குவழிகள் அல்லது நியாயமற்ற செயல்கள் ஒரு நல்ல தலைவரால் ஆதரிக்கப்படாது
என்பதாலும், அவர்களையும்
வெறுக்கும் சிலர் இருப்பர்.
அந்த மக்கள் தலைவர்
ஏதோவொன்றில் விழுந்துவிட வேண்டும் என்று எப்பொழுதும் விரும்புவார்கள்,
அவர்கள்
குற்றப்படுத்தவோ குற்றம்
சாட்டவோ தயாராக இருப்பார்கள்.
மேலும், ஒரு
நல்ல தலைவர் எல்லோரும்
அணுகுவதற்கு எளிமையாகவும் பணிவாகவும் இருப்பார்,
ஏனெனில்
அவர் அனைவரையும் அனைத்து மரியாதையுடன்
கருதுகிறார், வாய்ப்புகள்
வழங்கப்பட்டால் அவர்கள் பெரிய விஷயங்களைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்குள்ளது.
செயல்பாடு:
சுய பிரதிபலிப்பு
முன்மாதிரி:
அவர்
உங்களுக்கு ஏதாவது நன்மை செய்தாரா?
அவர் சிறந்த
நபரா?
எந்த
வரம்பும் இல்லாத நல்ல மனிதரா?
உங்களை
ஈர்க்கக்கூடியதும் முக்கியமானதுமான
சில திறன் (கள்) அவரிடம் உள்ளதா?
அவர் சமூகத்திற்கு
ஏதாவது நன்மையான
பங்களிப்பை அளித்தாரா?
Comments
Post a Comment