9. விட்டுக்கொடுக்கக் கூடாத நம்பிக்கைகள்
9. விட்டுக்கொடுக்கக் கூடாத நம்பிக்கைகள்
(எல்லாவற்றையும்
கருத்தில் கொண்டு, உண்மையை
விட்டுக்கொடுக்காமல்
சில நேர்மையான நிலைப்பாடுகளை எடுக்க)
1. தரநிலைகளை
வரையறுத்தல்
நித்தியமான
மகிழ்ச்சியை பெற்றிருத்தல்:
நமக்கு விருப்பமான ஒருவருடன்
இருப்பதன் மூலமோ, விருப்பமான சூழ்நிலையில்
இருப்பதன் மூலமோ மகிழ்ச்சியைப் பெறுவது எளிது. ஆனால் மிகவும் சுவாரசியம்
இல்லாத அல்லது நமக்கு
விருப்பமில்லாத காரியங்கள்
இருக்கும்போது, மகிழ்ச்சியுடன்
இருப்பதில் ஒருவித தொந்தரவு
இருக்கும். எல்லா நேரங்களிலும்,
எல்லா இடங்களிலும் எல்லா மனிதரிடத்திலும்
நாம் எப்பொழுதும் நல்ல செயல்களைக்
கடைப்பிடித்தால், நிலையான
மகிழ்ச்சி இருக்கும். மேலும், தற்காலிக
திருப்திக்கான முயற்சியாக இருக்கும்
முட்டாள்தனமான கேள்விகள் மற்றும் முயற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம்,
நம் உணர்வுகளிலும்
சிந்தனைகளிலும் நிலையான
மகிழ்ச்சியைப் பெற முடியும்.
சிறந்த
சாந்தத்தை கொண்டிருத்தல்:
நம்மைச் சுற்றி
இருக்கும் ஒருவரின் தவறுகளைக் கண்டறிந்தால்,
அவர்களை எளிதாகக் குற்றம்
சாட்டுவோம், அவர்களைச்
சங்கடப்படுத்துவோம் அல்லது உண்மையான கரிசனையோடு
திருத்துவோம். ஆனால் முதலில் நாம் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான
திருத்தங்களைச் செய்யும்
பொழுதுதான், பிறரைத் திருத்துவது
சரியாக இருக்கும்,
அப்போதுதான் குற்றஞ்சாட்டாமல் அல்லது சங்கடப்படுத்தாமல்
பிறரைத் திருத்த முடியும். நாம் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து,
காரியங்களை வெளிப்படுத்துவதில்
தாழ்மையுடன் இருக்க வேண்டும், அவர்கள்
தங்கள் அறிவிலும்
ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் போதுமானவராக
இல்லாவிட்டாலும், இன்னும்
நாம் அவர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம்.
கசப்புத்தன்மை
இல்லாமல் உதவுதல்:
ஒருவருடன் ஏதேனும் கருத்து
வேறுபாடு இருந்தால்,
ஒரு நபர் நன்மையையோ
பெரிய காரியத்தையோ
செய்வதற்கு முன் முதலில் அதைத் தீர்க்க வேண்டும்,
இல்லையெனில் அச்செய்கையில்
மற்றவருக்கு எந்த அர்த்தமும் இருக்காது.
பொறுப்புகளை நிறைவேற்றுவது மனப்பூர்வமாகப் பயனளிப்பதற்காக
இல்லாமல் பணியை முடிப்பதற்காக மட்டுமே
இருக்கும் போது, அது
திறம்பட ஒரு
தாக்கத்தை ஏற்படுத்தாது. நமக்கு எதிராளியானவரிடமிருந்து
ஒரு காரியம் வரும் பொழுதும் கூட அக்காரியம்
சரியாக இருக்கும் போது அதை
ஒப்புக் கொள்ள வேண்டும்.
நம்மிடம் கேட்பவர்களுக்கு, இயன்றதைக்
கொடுத்துப் பழக வேண்டும். மேலும், நம்மைத்
துன்புறுத்தி, சபிக்கிறவர்களையும்
நேசிக்க வேண்டும்.
மேலும் பாராட்டப்படுவதற்காக அல்லாமல் மற்றவரின்
நலனுக்காக மாத்திரம் நாம்
மற்றவர்களுக்கு உதவுவதைப் பழக வேண்டும். நமது சுய
அனுபவங்கள் அல்லது ஒரு
நபருடனான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களை நாம் மதிப்பிடக் கூடாது.
கவலையினால்
கல்ங்காதீர்கள்:
முழுமையாகப்
பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களை நாம் கவனிக்கும்போது நம் வாழ்க்கைக்கு பெரிய
பாடங்கள் கிடைக்கின்றன.
சில உயிரினங்கள் எழுந்திருக்கும்போது தெளிவான யோசனை என்பது
இல்லாமல்
இருந்தாலும் அல்லது தங்கள் நாளைத்
தொடங்கும்போது அனைத்தும் வெறுமையாகத் தோன்றினாலும்,
அவை முன்னேறத் தொடங்கும் போது,
காணாத விஷயங்களில் நம்பிக்கை
வைத்து, அவை
தங்கள் வாழ்க்கையின் அழகைக் கண்டுபிடிக்க முடிகின்றது
மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் சரியான திட்டங்களைக்
கொண்ட மனிதனால்
கூட அவ்வளவு திருப்தி அடைய முடிவதில்லை.
காக்கைகளிலிருந்து
சேவல்கள் வரையிலும், மரங்களிலிருந்து
புல் வரையிலும், யானையிலிருந்து
எறும்புகள் வரையிலும் நாம்
அதை கவனித்துப் பார்க்க
முடியும், அவை
அதிகம் பாடுபடாது, திட்டமிடாது,
ஆனால் அவைக்
கவலையின்றி அன்றைய
தேவையைப்
பூர்த்தி செய்து கொள்கிறது.
பொய்யான வாக்குறுதிகளை
வெறுத்தல்:
ஒரு சிறு குழந்தையினிடத்தில்
சொன்னாலோ அல்லது மிகவும்
மதிப்பிற்குரிய நபரிடம் சொன்னாலோ
நாம் எப்போதும் நம் வார்த்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் ஒருவரிடம் ஆம்
என்று கூறும்போது அது எப்போதும் ஆம் என்று இருக்க வேண்டும்,
நாம் ஒருவரிடம் இல்லை என்று
கூறும்போது, அது
எப்போதும் இல்லை என்று இருக்க வேண்டும்,
மேலும் நாம் நேர்மையாகச்
சரியான விதத்தில் முன்னோக்கிச்
செல்லும்போது நாம்
உறுதியளிக்க வேண்டிய அவசியமில்லை, நாம்
சரியானவர்
என்று நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை.
பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கக்கூடாது,
குறிப்பாகத்
தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எதையாவது பெறுவதற்காகவோ அல்லது ஏதாவது
முன்னேற்றத்தை அடைவதற்காகவோ அவ்வாறு வழங்கக்கூடாது.
பொய்யான வாக்குறுதிகள் உடைந்து பல குழப்பங்களை ஏற்படுத்தும்.
செயல்பாடு: வெவ்வேறு
நிறுவனங்கள் / சிப்ஸ்களின்
சுவைகளை மதிப்பீடு செய்தல்
அனைத்து
பங்கேற்பாளர்களும் 5-8
உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உருவாக்கலாம். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் ஒரு
தலைவரைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு நிறுவனங்களின் சிப்ஸ்கள்
/ மாத்திரைகள் / வேறு சில பொருட்கள் வழங்கப்படலாம்.
குழுக்கள் வெவ்வேறு அளவீடுகளின்
அடிப்படையில் கவனமாகப்
பகுப்பாய்வு செய்வதன் மூலம் தங்களுக்கு வழங்கப்படும் பொருளை மதிப்பீடு செய்ய
வேண்டும் மற்றும் தயாரிப்புகளை எல்லா வகையிலும் சிறந்ததாக்குவதற்கான சிறந்த
தரநிலைகளை உருவாக்க வேண்டும்.
2. உண்மைக்காக
நிலைத்திருத்தல்:
வெளிச்சத்தில் நடத்தல்:
ஒருவரின் தவறுகளில்
நாம் பங்கு கொள்ளாமல் இருளில் இருப்பவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்களாய்
அவர்கள் ஒளியை அறிந்து நடக்க உதவ
வேண்டும். மேலும் கேள்விகள்
கேட்கப்படும்போதும்,
நாம் எதையாவது சிறந்த
முறையில் கையாண்டிருக்கலாம் அல்லது
அணுகியிருக்கலாம்
என்பதை உணரும்போதும், நம்முடைய
வரம்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் நமக்கு நாமே
உண்மையாகவும்
மற்றவர்களுக்கு உண்மையாகவும்
இருக்க வேண்டும். பலர் இருளில்
நடக்கிறார்கள் என்பதற்காக நாம் ஒளியினை ஒருபோதும்
சமரசம் செய்யக்கூடாது.
சத்தியத்தில் நடத்தல்:
ஒரு நல்ல தலைவர்
எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் அவரது எல்லா வார்த்தைகளையும்
நிறைவேற்ற வேண்டும். அவர் ஒரு நியாயமான
காரணமின்றி, சூழ்நிலை
அல்லது நபர்களுக்கு ஏற்பத்
தனது வார்த்தைகளை அல்லது செயல்களை மாற்றக்கூடாது. தலைவர் தனது நம்பிக்கைகள்,
எண்ணங்கள் மற்றும் செயல்களில்
எப்போதும் நியாயமானவராக இருக்க வேண்டும்,
அவை சத்தியத்தின் வலுவான
அடிப்படையைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய
வேண்டும். ஒரு நல்ல தலைவர், குழுவின்
நல்வாழ்வுக்காக உண்மையைப் புரிந்துகொள்ளவும்,
சரியானதையும்
நியாயமானதையும்
பின்பற்றவும் குழுவினருக்கு உதவ வேண்டும்.
பொய்களின்றி
சரியாக நடத்தல்:
நாம் வாழும் உலகில்
பெரும் விலகல்கள்
உள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும்,
நாடுகளின் சட்டங்கள் கூட ஒரே மாதிரியாக இருக்கவில்லை,
ஏனென்றால் எல்லாவற்றையும் தரமாகப்
பரிசீலிக்காமல் பகுத்தறிவு அடிப்படையில் ஒரு பக்கச்சார்பான முடிவுகளும்
சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன.
ஒரு காரியம் தவறு
அல்ல என்றாலும், எல்லாவற்றிலிருந்தும்
சில தவறுகளைக் கண்டுபிடிப்பது சாத்தியம் என்பதால்,
நேர்மையாக இருப்பது கடினம். சரியாக
நடப்பது என்பது மிகவும் அதிக
இன்னல்களை ஏற்படுத்தலாம், மற்றும் ஒரு
கட்டத்தில் சரியாக நடப்பதற்கான
நிதானத்தையும் ஆர்வத்தையும் நாம் இழக்க நேரிடலாம்,
ஆனால் அது ஒரு தருணத்தில் வித்தியாசத்தை
ஏற்படுத்துவதால், அது
மிகவும் மதிப்புமிக்கது.
அன்போடு
நடத்தல்:
எல்லாவற்றிற்கும்
மேலாக, ஒரு
நபரை மாற்றக்கூடியதாகவும் சிறந்த தன்மையுடையவராக
ஆக்ககூடியதாகவும் இருக்கும் ஒன்று,
வழங்கப்படும் உண்மையான
அன்பாகும். அன்பு சத்தியத்தில் நிலைத்திருக்கும்,
உண்மையைப் பின்பற்றாதவர்கள்,
மற்றவரை உண்மையான இதயத்துடனும்
நிபந்தனையின்றியும் நேசிக்க முடியாது,
ஆனால் சில எதிர்பார்ப்புகளுடன்
அன்பு செலுத்துவர்.
ஒரு நல்ல தலைவர் அன்பில் நடக்க வேண்டும்,
எப்போதும் உண்மைக்காக நிலைநிற்க
வேண்டும், மற்றவர்களின்
நல்வாழ்விற்காக அவர்கள் அதைப்
புரிந்துகொள்ளச் சாத்தியமான
வழியில் உதவ வேண்டும்.
செயல்பாடு: உண்மை
அல்லது பொய்
பங்கேற்பாளர்களில்
ஒருவர் அழைக்கப்படுவார் அல்லது தன்னார்வளராக
இருப்பார். இரண்டு அறிக்கைகள்
உண்மையாகவும் ஒரு அறிக்கை பொய்யாகவும் இருக்கும்
விதத்தில் 3 அறிக்கைகளை அவர்கள் சொல்ல வேண்டும்.
குழுவில் உள்ள மற்ற அனைவரும் தவறான அறிக்கையைக் கண்டறிய வேண்டும். பங்கேற்பாளர்கள்
அனைவரோ அல்லது
சிலரோ இதைத்
தொடரலாம்.
3. மதிப்புமிக்க
நம்பிக்கைகளைக் கொண்டிருத்தல்
சோதனைகளிலிருந்து
தப்பித்தல்:
நாம் ஒவ்வொருவரும்
வீழ்ச்சியடைந்ததும்
சீரழிந்ததுமான ஒரு சூழலால்
சூழப்பட்டுள்ளோம், அதில்
வெளிப்படையானதல்லாமலும் காணக்கூடாததாகவும்
உள்ள அதிக ஏமாற்றங்களும்
வழி விலகல்களும் உள்ளன. ஏனென்றால்,
நாமே நூறு சதவீதம்
உண்மையானவர்களாக இருப்பதில்லை, மேலும்
மேம்படுத்துவதற்கு ஏதுவான
தடுமாற்றமான பகுதிகள் நம்மிடத்தில்
உள்ளன. நாம் உறுதியாக நின்று எதிர்த்துப் போராடக்கூடிய சில விஷயங்கள் உள்ளன,
மற்றும் சில காரியங்களை மேற்க்கொள்ள முயற்சித்தால் அவை
நம்மைப் பெரிதும் பாதிக்கக்கூடும், அத்தகைய
விஷயங்களுக்கு எதிராக நாம் தப்பி ஓட வேண்டும்,
அதில் வீழ்ந்துவிடாமல்
கவனமாக இருக்க வேண்டும்.
வெறுப்பவர்களை
மன்னித்து வேண்டியதை அளித்தல்:
ஒரு தலைவர் தன்னுடன்
நல்லுறவு வைத்துள்ள மக்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கக்கூடாது. ஆனால் ஒரு நல்ல
தலைவர் அறியாமையால் அல்லது பொறாமையால் அல்லது வேறு எந்தக்
காரணத்திற்காகவும் தனக்கு எதிராகச்
செயல்படுபவர்களுக்கு கூட நன்மைச்
செய்ய தயாராக இருக்க வேண்டும். மேலும் ஒரு நல்ல தலைவர் மற்றவரின்
அடிப்படைத் தேவைகளையும்
பூர்த்தி செய்ய வேண்டும், தன்னை
வெறுப்பவர்களுக்கு கூட உணவளிக்கத் தயங்கக் கூடாது. அது அவரை உயர்ந்தவராக்குகிறது
மற்றும் தவறு செய்பவர்களும்
அவரை வெறுப்பவர்களும்
கூடத் தங்கள் தவறுகளிலிருந்து
வருந்துவதற்கு உதவுகிறது.
சரியான நம்பிக்கைகளில்
உறுதியாயிருத்தல்:
முன்னோக்குதலின்
மாற்றம் மற்றும் புதுமைகளின் காரணமாகத்
தலைமுறைகளாக இருந்த விதிகள் மற்றும் சட்டங்களில் கூட நம்மைச் சுற்றி எப்போதும் தொடர்ச்சியான
மாற்றங்கள் உள்ளன. ஆனால் ஒரு நல்ல தலைவர்,
முக்கிய மதிப்பீடுகளும்
கொள்கைகளுமான
நம்பிக்கைகளில் வலுவாக இருக்க
வேண்டும், இவற்றிலிருந்து
விலகுவது
ஒரு பெரிய குழுவைத்
தற்காலிகமாகத்
திருப்திப்படுத்தினாலும்,
நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பேரழிவை
ஏற்படுத்தும்.
கற்பதிலும்
பயனுள்ளவரகளாக இருப்பதிலும் வளைந்துக்கொடுத்தல்:
திட்டங்கள் மற்றும்
எதிர்பார்ப்புகளின்படி எல்லாம் நடப்பதில்லை,
சுற்றுச்சூழலினாலோ
நம்மைச் சுற்றியுள்ள மக்களினாலோ
நிச்சயமாக மாறும் சூழ்நிலைகள் இருக்கும். ஒரு நல்ல தலைவர் தோல்விகள் அல்லது
தவறுகளிலிருந்து
கற்றுக்கொள்வதற்கு ஏதுவானவராக
இருக்க வேண்டும், மேலும்
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர் தயங்காமல்
இருக்க வேண்டும், அதுவும்
மற்றவர்களுக்குப்
பயனுள்ள விதத்தில்
இருப்பதற்காகத்
தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆர்வம் இல்லையெனினும்,
அதைக் கற்கலாம். ஒரு நல்ல தலைவர்
எல்லாவற்றையும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கலாம்,
தடையாக அல்ல.
செயல்பாடு: வழக்கு
ஆய்வு
டானி ஒரு இளமையான
ஆற்றல் மிக்க நபர். அவர்
மிகவும் திறமையான மற்றும் மிகவும் அன்பான நபர்,
அனைவரிடமும் மரியாதையுடன்
நடந்துகொள்வார்.
ஒருமுறை டானியின் முதலாளி ஒரு விருந்தின்
போது அவரை ஒரு
சில போதை பொருட்களை
உட்கொண்டு தவறு
செய்யும்படி கட்டளையிட்டார்.
டானி மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் இருந்தார்,
ஆனால் அதே நேரத்தில் அவர் தனது
முதலாளியின் தவறான அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று ஒரு வலுவான
முடிவை எடுத்தார். டானியின் முதலாளி மிரட்டி,
அவர் கட்டளையிட்டதைச்
செய்யும்படி வற்புறுத்தினார். டானி குழப்பமடைந்தார்.
அ. டானியின் இயல்பு
என்ன? அவர்
ஏன் குழப்பமடைகிறார்?
ஆ.
டானியின் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்ய முடிவெடுப்பீர்கள்?
4. ஒப்புக்கொண்டதை
நிறைவேற்றுதல்:
செயல்களில் சாந்தம்
மற்றும் மென்மை:
நம்மிடம் நிறைய
திறமைகள் இருக்கும்போதும், நமக்கு
நிறைய பொறுப்புகள் இருக்கும்போதும் நாம் பெருமிதம்
அடைவதற்கான வாய்ப்புகள் எப்போதும்
உண்டு. ஒரு நல்ல தலைவர் பெருமையைச் சரியாகக் கைக்கொண்டு,
சாந்தமாகவும்
மென்மையாகவும்
இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
மனப்பான்மை சரியாக இருந்தால், நாம்
பேசும் வார்த்தைகளில் மட்டுமல்ல, நாம்
செய்யும் எல்லா செயல்களிலும் எல்லோருடனும் நட்புப்பாராட்ட
ஏதுவாகத் தாழ்மையாகவும் மென்மையாகவும்
இருக்க வேண்டும் என்ற வலுவான அர்ப்பணிப்பு இருக்கும்.
ஒரு நோக்கத்திற்காகத்
துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல்:
ஒவ்வொருவரும் தாங்கள்
செய்யும் நல்ல காரியங்களுக்குப்
பாராட்டும் ஊக்கமும் பெற மாட்டார்கள். சில நேரங்களில் பாராட்டும் ஊக்கமும்,
அது சரியா தவறா என்பதைப்
பொருட்படுத்தாமல், சில விஷயங்களுக்கோ
அல்லது நம்மில் பெரும்பாலோர் செய்யும்
செயல்களுக்கோ
மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு நல்ல தலைவர் எப்போதும் மதிப்பீடுகளில்
வலுவாக இருக்க வேண்டும்
மற்றும் சரியானதைத் தொடர வேண்டும். ஒரு நல்ல தலைவர் பெரும்பாலான மக்கள் என்ன
செய்கிறார்கள் என்பதைப் பற்றிக்
கவலைப்படமாட்டார், ஆனால்
மற்றவர்களைப் பாதிக்காமல் இருக்கவும்,
எல்லோரும் மகிழ்ச்சியாக
இருக்கவும் பெரும்பாலான மக்களுக்கு என்ன தேவை என்பதில்
கவனம் செலுத்துவார்.
நல்ல போராட்டத்தைப்
போராடி இலக்கை அடைதல்:
ஒரு காரியத்திற்காக
உழைக்காமல் நம் இலக்கை அடைவது எளிதல்ல,
அதற்காக உழைக்காமல் அல்லது
குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி
நம் இலக்கை அடைந்தால், அது
மதிப்பிற்குரியதாக
இருக்காது, நேரம் செல்லச் செல்ல நம்
மகிழ்ச்சியை இழக்கச்செய்யும். ஒரு நல்ல தலைவர்
தனக்கும், தன்னோடிருக்கும்
குழுவினருக்கும் இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும்,
ஒரு நல்ல தலைவர்,
துன்பங்கள் மற்றும் தடைகள் இருக்கும்
போதும், நல்ல நம்பிக்கையை
விட்டுக்கொடுக்காமல், உயரங்களை
அடைய அந்த
நம்பிக்கையுடன் போராடுவதன் மூலம், இலக்குகளை
அடைய கடினமாக முயற்சி செய்கிறார்.
காரியங்களை நிறைவேற்றி
மகிழ்ச்சியின் கிரீடத்தைப் பெறுதல்:
நாம் எதையாவது செய்யும்போது,
அதற்கு ஈடாக நாம் வெகுமதியைப்
பெற வேண்டும். ஒரு நல்ல தலைவர் எப்போதும் சுற்றியுள்ள மக்களின் நலனுக்காக எதையாவது
நோக்கிச் செயல்படுகிறார், வெகுமதிக்காக
அல்ல, ஆனால்
அவர் எப்போதும் அதற்குத் தகுதியானவர். ஒரு நல்ல தலைவர் தனது அணுகுமுறையைச்
சரியாக அமைத்துக்கொள்கிறார், மேலும்
அவர் ஒரு பல கோடி ரூபாய்
வெகுமதியைப் பெறுவதை விட, ஒரு
நபடரித்தில் ஏற்படும்
நிறைவு
மற்றும் தாக்கத்தில் மகிழ்ச்சியின் கிரீடத்தைப் பெறுவார்.
5. விலைமதிப்பற்ற
கொள்கைகளை மற்றவருக்குப் பகிர்தல்:
எது சரியானது என்பதை
அறிவுறுத்துதல்:
ஒரு நல்ல தலைவர்,
குழுவினர் தங்களைச் சரியாக
அமைத்துக் கொள்ளவும், சரியானதைப்
பின்பற்றவும் அறிவுறுத்தல்களையும் விதிமுறைகளையும் எப்போதும் வழங்க வேண்டும். சில
நேரங்களில் இறுதியான
முடிவு மிகவும் மகிழ்ச்சிகரமாக
இருக்கலாம்
மற்றும் சரியானதாகத் தோன்றலாம் ஆனால்
பின்பற்றப்படும் பாதையும் எடுக்கப்படும் முடிவுகளும் யாரோ
ஒருவரை ஏதோ ஒரு வகையில்
பாதித்திருக்கும். தலைவர் எப்பொழுதும் தன்னை
பின்பற்றும் மற்றவர்களுக்குப்
பொருத்தமானதையும்
சரியானதையும்
அறிவுறுத்துவது அவசியம்.
வாக்களித்த
காரியங்களை விரைவாகச் செயல்படுத்துங்கள்:
வாக்குறுதிகளை
வழங்குவதும் ஒருவரின்
விருப்பத்தை அல்லது ஆதரவைப் பெறுவதும்
எளிதானது, ஆனால்
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால்,
அந்த ஆதரவு நீடித்ததாகவும் மதிப்பிற்குரியதாகவும்
இருக்காது. மேலும், காலப்போக்கில்
நாம் அதிக பொறுப்புகளைப் பெறுவோம், மேலும்
வாக்குறுதிகளை மறந்துவிட்டு வேறொன்றில் கவனம் செலுத்தத் தொடங்குகிறோம். ஒரு நல்ல
தலைவர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றிச்
சிந்திக்க வேண்டும், மேலும்
வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
பொறுமை மற்றும்
விடாமுயற்சி:
சில சமயங்களில் நாம்
எதிர்பார்த்தபடியோ அல்லது
திட்டமிட்டபடியோ சில காரியங்கள் அமைவதில்லை.
சில மாற்று வழிகளைச்
சிந்தித்து செயல்பட கொஞ்சம் பொறுமை தேவை. ஆயிரம் முறை முயற்சிக்கும் போது
விரும்பத்தகாத பலன்கள் இருந்தாலும், விரும்பத்தக்க
முடிவை அடைவதற்கு, அதை
நோக்கி நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கும். ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும்
பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்,
மற்றவர்களும்
பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்த வேண்டும்.
தனக்கடுத்துள்ளவர் இருமடங்கு
பயனுள்ளவராக இருக்க
உதவுதல்:
மற்றவர் குறிப்பாக நமக்கு
மிகவும் நெருக்கமான ஒருவர்,
நம்மைவிடச் சிறந்த விதத்திலும்
திறமையுடனும் செயல்பட்டால்
பொறாமை கொள்ளும் போக்கு உள்ளது. ஒரு நல்ல தலைவர் உணர்வுள்ளவராகத்
தீய நோக்கங்களையும் பொறாமையையும் எதிர்த்துப் போராடுகிறார்,
மேலும் அவர்
அறிந்த மற்றும் அறியாத மற்றவர்கள்
தொடர்ந்து அவர்கள்
சிறந்தவராகவும் மேம்படுகிறவர்களாகவும்
மாறுவதற்கு
உதவ முயற்சிக்கிறார். ஒரு நல்ல தலைவர்,
தான் பெற்ற
அனைத்தையும் பாரபட்சமும் சுயநல ஆதாயமும்
இல்லாமல், மற்றவரின்
ஒரு பொது நலனுக்காகச்
சித்தப்படுத்துகிறார், அதிகாரமளிக்கிறார்
மற்றும் ஒப்படைக்கிறார்.
Comments
Post a Comment