பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள்

பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள்

நாம் அனைவரும் குடும்பம், நண்பர்கள் குழு, விளையாட்டுக் குழு, வகுப்பு, பள்ளி, சமூகம் போன்ற சில குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் நமக்குச் சில குறிப்பிட்ட பாத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் நமது பொறுப்புகளை நாம் உணராததால் பாத்திரங்களையும் உணருவதில்லை. எனவே பொறுப்புகளை அறிந்து கொள்வதும், நமக்கு இருக்கும் பாத்திரங்களில் திறம்பட செயல்படுவதும் முக்கியம்.

உரிமைகளும் பொறுப்பும்

எல்லோரும் வீட்டில், பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் உரிமைகளை அனுபவிக்கிறோம்.

உரிமைகளோடு கூடப் பொறுப்புகளும் சேர்ந்து வருகிறது, ஆனால் பொறுப்புகள் பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.

பொறுப்பு என்பது சில காரியங்களைக் குறித்த கடமையை நிறைவேற்றுவதோ அல்லது யாரையாவது கட்டுப்பாடுடன் வைக்கும் நிலையாகும்.

ஒரு காரியத்தின் பொறுப்பாளியாகப் பழி கூறுதல் அல்லது பழியை எடுத்துக்கொள்ளுதல் போன்ற நிலை அல்லது மெய்மையாகும்.

அனைத்து மூன்றாவது நபர்/ பொருள் அல்லது உலகில் உள்ள அனைத்திற்கும் பொறுப்பாக இருக்கலாம்.

 

நம்மைச் சுற்றியுள்ள உலகம்

நம்மைச் சுற்றியுள்ள உலகில் உயிருள்ள காரியங்களும் உயிரற்ற காரியங்களும் உள்ளன. உயிருள்ளவை பிற உயிரினங்களையோ உயிரற்ற காரியங்களையோ சார்ந்திருக்கின்றன.

மனிதர்களே சிறந்த வழியில் தொடர்புக்கொள்ளவும், உறவுக்கொள்ளவும் உகந்தவர்கள், உலகில் எல்லாவற்றையும் நிர்வகிக்கவும் வல்லவர்கள்.

ஆனால் இன்றைய உலகில் உள்ள மக்கள் சுயநலம் உள்ளவர்களாய், வளங்களைப் பொருத்தமற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர்.

நிறைய மக்கள் பொருட்களைக் குவித்து சில புதிய காரியங்களைத் தேடுகின்றனர், மற்றும் அவர்கள் திருப்தியான சந்தோஷத்தையும், கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தையும் கண்டறிவதில்லை.

சமூக பொறுப்புணர்வு என்றால் என்ன?

சமூக பொறுப்புணர்வு என்பது ஒரு அமைப்பிற்கோ தனிப்பட்ட நபருக்கோ உள்ளார்ந்த ஒழுக்கவியல் பணிச்சட்டம் ஆகும். பெருமளவில் சமூகத்தின் நலனிற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செயலாகும்.

சமூக பொறுப்புணர்வு என்பது ஒவ்வொரு நபரும் பொருளாதாரம் மற்றும் சூழலுக்கு இடையில் சமநிலையோடு பராமரிக்க உதவும் கடமையாகும்.

அறநெறிகளை கொண்டு ஒன்று சேர்த்து, ஒவ்வொரு நபரும் சரியான விதத்தில் செயல்படுவதால் அது சுற்றி இருப்பவர்களுக்கு எதிரான விளைவுகளைக் குறைக்கிறது.

சமூக பொறுப்புணர்வு சமூகத்தைக் குறித்து அனைவருக்கும் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு. அது சமூகம், கலாச்சாரம், சுற்றுப்புற சூழல் முதலியவற்றிற்கு பங்களிப்பு அளிக்கிறது.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் 3-5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு உறுப்பினர் முன்வர வேண்டும் மற்றும் முன்வருபவர் கோட்டின் பின்னால் தனக்கு ஏற்ற வசதியான நிற்கலாம். பணி என்னவென்றால், அவர்கள் தங்கள் கால்களை நகர்த்தாமல், கோட்டைக் கடக்காமல் கோட்டின் முன் ஒரு எல்லையை உருவாக்க வேண்டும். எல்லைகள் அவர்களின் அடுத்த வரம்பாக இருக்கும். அடுத்த சுற்றில், அவர்கள் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரிடம் உதவி கேட்கலாம், அந்த உறுப்பினர் முதல் இருந்தவரின் கைகளைப் பிடித்தவாறு, முதல் நபர் வரைந்த எல்லைக்குள் நிற்க வேண்டும். இரண்டு உறுப்பினர்களும் எல்லைகளுக்குள் நகர்ந்து அதை நீளமாக்க வேண்டும், ஆனால் தங்கள் கைகளைப் பிடித்திருக்க வேண்டும். இதைப் பல முறை தொடரலாம் (உதாரணத்திற்கு 5 முறை). எல்லைகளுக்கு வெளியே செல்லும் நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். நீள வாட்டில் உயர்ந்த எல்லையை அடைந்த குழுவினர் வெற்றியாளராக இருப்பார்.

ஏன் நமக்குச் சமூக பொறுப்புணர்வு அவசியம்?  

மனிதர்கள் சமூக உயிரிகளாக வாழ்க்கை, உணர்வுகள் போன்ற பொருளல்லாத காரியங்களுக்குச் சார்ந்திருக்கின்றனர்.

மனிதர்கள் பொருள் சார்ந்த காரியங்களான உணவு, உடை, நிலம் முதலியவற்றை எளிதாகப் பெறுவதற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றனர்.

நாம் ஒருவரோடொருவர் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறோம், முழுமையான வாழ்விற்கு நாம் வெவ்வேறு தருணங்களில் நாம் பெற்றதை திரும்பவும் கொடுப்பது அவசியமாகும்.

யாருக்கு நாம் சமூக பொறுப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

நமக்குச் சொந்தமான சூழலில் நாம் அனைவருக்கும் அனைத்துக்கும் சமூக பொறுப்பாளிகளாய் உள்ளோம்.

முதலில் நமது குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள், உடன் பயிலுபவர்கள்/ பணிபுரிபவர்கள் என நம்முடைய வாழ்வில் நேரடியாக ஈடுபடுபவர்கள்.

தொடர்ந்து நம்முடைய உணவைத் தயாரிக்கின்ற விவசாயிக்கு, நம்முடைய துணியை நெய்கிற நெசவாலருக்கு, காற்று தருகின்ற மரத்திற்கு, நீர் தருகின்ற நீர்நிலைகளுக்கு மற்றும் மறைமுகமாக நம்மோடு ஈடுபடுகின்ற அனைவருக்கும்.

எங்கு நாம் சமூக பொறுப்புணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?         

நாம் நமது குடும்பத்திலும் வீட்டிலும் பொறுப்புள்ளவர்கள்

நாம் நமது பள்ளியில்/ கல்லூரியில்/ வேலையிடத்தில் பொறுப்புள்ளவர்கள்.

நாம் சமூகத்தில் பொறுப்புள்ளவர்கள்.

நாம் நம்முடைய தெருவில்/ நகரில்/ மாநிலத்தில்/ நாட்டில் பொறுப்புள்ளவர்கள்.

நாம் சுற்றுபுறத்திலும் முழு உலகிலும் பொறுப்புள்ளவர்கள்

நாம் எப்பொழுது சமூகத்திற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்?

நாம் நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்தில் உள்ளவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நம்முடைய சமூகத்திற்கு/ தெருவிற்கு/ நாட்டிற்கு, சூழலுக்கு, மூன்றாம் நபர்களுக்கு எப்பொழுதும் பொறுப்புடன் இருக்க முடியாவிட்டாலும் ஏதவாவது தீவிர நெருக்கடி/ இயற்கை பேரழிவு ஏற்படும் பொழுதாவது பொறுப்பாக இருக்கலாம்.

நாம் எப்படி சமூகத்திற்கு பொறுப்புடன் இருக்கலாம்?

குடும்பம்/ நண்பர்கள்/ உறவினர்கள்:

Ø  நம்முடைய பெற்றோருக்கும்/ உறவினருக்கும் நாம் வீட்டு வேளைகளில் உதவலாம், சகோதரருக்கு/ நண்பருக்குப் படிப்பில் அல்லது வேளை முதலிய காரியங்களில் உதவலாம்.

Ø  நாம் அன்பு, அக்கறை, ஊக்கம், யோசனைகள் முதலியவற்றை வேண்டிய நேரத்தில் பகிர்ந்து உணர்வு ரீதியாக உதவலாம்.

Ø  நமக்குப் பிரியமானவர்களுக்கு தேவைப்படும் பொழுது நம்முடைய உடைமைகளைப் பகிர்வது அவசியமாகும்.

Ø  நம்முடைய பெற்றோர்/ நண்பர்கள்/ உறவினர்கள் சரியில்லாத ஏற்க முடியாத காரியங்களைச் செய்யும் போது சரியான அறநெறிகளை கொண்டு சரி செய்ய வேண்டும்.

பள்ளி/ கல்லூரி/ வேலையிடம், சமூகம், நாடு:

Ø  நாம் நம்முடைய பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்திற்கு நேரத்திற்கு செல்ல வேண்டும், அங்கிருந்து நேரத்திற்கு புறப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள சட்ட திட்டங்களை அவர்களுக்கு உதவும் வகையில் பின்பற்ற வேண்டும், மற்றும் அங்குச் செல்வதற்கு முன்பு அதற்கு ஒற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாமல் இருக்க வேண்டும்.

Ø  நாம் அனைவரையும் ஏற்க வேண்டும், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க வேண்டும், மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

Ø  அறநெறிகளை கொண்ட மதிப்பீடுகளை நாம் பின்பற்ற  வேண்டும்.

Ø  தனிப்பட்ட பொருட்களை நாம் அக்கறையோடு கையாள்வது போல நாம் பொதுவான பொருட்களையும் கையாள வேண்டும்.

Ø  நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

Ø  நாம் புதுமைத்துவம் உள்ளவர்களாய் நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்.

Ø  தேவையுள்ள மக்கள் அவர்கள் தேவையைத் தாங்களே கண்டடையும் வகையில் உதவ வேண்டும். நாம் மற்றவருக்கு உதவவில்லை என்றாலும், இடையூறாக இருத்தலாகாது.

Ø  நாம் நம்முடைய நேரத்தை வீணாக்கக் கூடாது மற்றும் நம்முடைய உடை அலங்காரத்தில், சிந்தையில் நடத்தையில் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 சுற்றுப்புற சூழல்/ சூழ்நிலை/ இயற்கை:

Ø  நாம் மருத்துவ கழிவுகள், மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் போன்றவற்றிற்கு ஏற்றச் சரியான முறைமைகளைக் கொண்டு கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

Ø  நம்மைச் சுற்றியுள்ள நிலத்தினை சரியாக உபயோகித்து, இயற்க்கை இயற்றிகளை கொண்டு பாதுகாக்க வேண்டும்.

Ø  காற்று மாசுப்படுவதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

Ø  நாம் புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலத்தைப் பெருமளவில்  குறைத்து, புதுபிக்க கூடிய ஆற்றல் மூலத்தை உபயோகிக்க வேண்டும்.

Ø  நாம் மரங்கள் வெட்டுவதை தவிர்த்து, நிறைய மரங்களை நட்ட வேண்டும்.

Ø  நீர்நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் சுய நோக்கத்திற்காகத் தேவையில்லாத கட்டிடங்கள் கட்டுவதையும் நிலத்தை நிரப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

Ø  நம்மைச் சுற்றியுள்ள சுற்றுசூழலுக்கு இடையூறு செய்யக் கூடாது, மற்றும் இயற்க்கை தன்னுடைய சமநிலையில் தொடர்ந்து இருக்க உதவ வேண்டும்.

பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் விளைவுகள்

மற்ற நபர்களுக்கும், சுற்றியுள்ள உயிருள்ள/ உயிரற்ற உயிரினத்திற்கும் நமக்கிருக்கும் பொறுப்பினை நாம் அனைவரும் உணரும் பொழுது முழு உலகமே இன்பமான இடமாகும்.

நம்முடைய பொறுப்பினை நாம் உணரும் போது, இயற்க்கை சமநிலையுடன் இருக்கும். அனைவரும் திறனை/ அறிவை/ அனுபவத்தைப் பொதுவான காரியத்தின் நன்மைக்குப் பயன்படுத்துவோம், பெறுவதற்காக அல்ல.

நம்முடைய பொறுப்பினை நாம் கண்டுணரும் பொழுது, விளைவாக நம்முடைய சிந்தையும் நம்முடைய நடத்தையும் நேர்மறையாக மாறும், மற்றும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான நம்முடைய சுயநலத்தை நாம் அகற்ற முடியும்.

நம்முடைய பொறுப்பினை நாம் கண்டுணரும் பொழுது, எல்லா வேறுபாடுகள் நிமித்தமும் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.

யுத்தங்கள் முடிவடையும், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் நறுமணம் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அனைவரிடத்தும் இருக்கும்.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் 4-6 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். ஒவ்வொரு குழுவிற்கும் சில ஸ்ட்ராக்கள் மற்றும் செலோ டேப் வழங்கப்படும். தாங்காமல் நிற்கும் உயரமான கோபுரத்தை 10 நிமிடங்களில் உருவாக்குவது நோக்கம். குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மேற்பார்வையாளர் & நேரக் கண்காணிப்பாளர், அடித்தளம் கட்டுபவர், மேலுள்ள வடிவத்தைக் கட்டுபவர், உதவியாளர்கள் போன்ற பொறுப்பும் பாத்திரங்களும் வழங்கப்பட வேண்டும். அனைத்து குழுக்களும் வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த குழு அங்கீகரிக்கப்படலாம்.

Comments

Popular posts from this blog

1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை