குழுக்களின் முக்கியத்துவம்
குழுக்களின் முக்கியத்துவம்
தனித்தன்மை
இந்த உலகில் உள்ள எந்தவொரு பொருளையும் விட அனைவரும்
தனித்துவமானவர்கள்,
சிறப்பு வாய்ந்தவர்கள்
மற்றும் தகுதியானவர்கள்
செயல்பாடு:
அனைவருக்கும் A4 அளவு அல்லது ஒத்த ஒரு சிறிய துண்டு
காகிதத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் அனைத்து அறிவுறுத்தல்களையும் மிகவும் கவனமாகப்
பின்பற்றும்படி சொல்ல வேண்டும்,
பின்பற்றாதவர்கள்
செயல்பாட்டிலிருந்து வெளியேறுவார்கள். கண்களை மூடுவதே முதல் அறிவுறுத்தல். பின்னர்
அவர்கள் அனைவரையும் சமமான பாதியாகக் காகிதத்தை மடிக்கும்படி சொல்ல வேண்டும், பின்னர் வலதுபுற கீழ் மூலையில்
தோராயமாக 1 செமீ சுற்றளவில் ஒரு துண்டு காகிதத்தைக் கிழிக்க சொல்ல வேண்டும்; பின்னர் காகிதத்தைப் பாதியாக
மடிக்கும்படி சொல்ல வேண்டும்,
பின்னர் இடதுபுற
மூலையில் தோராயமாக 1/2 செமீ சுற்றளவில் ஒரு சிறிய துண்டு காகிதத்தைக் கிழிக்க சொல்ல வேண்டும்; பின்னர் அவர்கள் வலதுபுற
கீழ் மூலையில்,
சுமார்
1/2 செமீ சுற்றளவில் ஒரு சிறிய காகித துண்டைகிழிக்கும்படி சொல்ல வேண்டும். கடைசியாக, அவர்கள் கண்களைத் திறந்து
தங்கள் கைகளில் உள்ள காகிதத்தை விரித்துப் பார்க்கும்படி கேட்கப்படுவார்கள். பின்னர் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களில்
உள்ள தனித்தன்மை பற்றி விவாதிக்கப்படலாம்.
கண்ணியத்தை பெறுதல்
சுயத்தையும் தனித்துவத்தையும் காத்துக்கொள்வதற்கு கண்ணியத்தை
பெறுவது முக்கியம். பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதன்
மூலம் நாம்
கண்ணியத்தை பெறலாம்.
·
பகுத்தறியுங்கள்
·
தன்னம்பிக்கையோடிருங்கள்
·
பொருப்போடிருங்கள்
·
முயற்சி
செய்யுங்கள்
·
கவனத்துடன்
இருங்கள்
·
தவறுகளை
ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளுங்கள்
·
சரியானதிற்காக
நிமிர்த்து நில்லுங்கள்
·
சுய
மதிப்பீடுகளை அமைத்துக்கொள்ளுங்கள்
·
உங்கள்
நேரத்தை நிர்வகியுங்கள்
·
உங்கள்
திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
·
ஆக்கபூர்வமான
மனப்பான்மையோடிருங்கள்
·
உங்கள்
இலக்குகளில் கவனம் செலுத்துங்கள்
நம்மைச் சுற்றியுள்ள உறவுகள்
நம்மைச் சுற்றி நிறைய அழகான உறவுகள் உள்ளன.
உறவுகளில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் யோசனையும் இல்லாமல்
பொருளியல் மற்றும் கருத்தியல் சார்ந்த காரியங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம்.
உணர்வு சார்ந்த காரியங்களாவன அன்பு, அக்கறை, பாசம், ஊக்கம், மற்றும் சில நேரங்களில்
கோபம்,
வெறுப்பு
முதலியன.
பொருள் சார்ந்த காரியங்களாவன வீடு, பணம் மற்றும் அணைத்து உருவமுடைய
விஷயங்கள்
நாம் மனிதர்களாக ஒரு சமூகமாக இருக்கிறோம். நாம் தனியாக
இருக்க உட்பட்டால் அதில் அர்த்தம் ஒன்றும் இல்லை.
எல்லோரும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் மக்களைக்
கடந்து வருகிறோம்.
வீடாயினும், கல்வி/ வேலையிடமாயினும், சந்தைகளாயினும், நம்மைச் சுற்றி மக்கள்
இருக்கிறார்கள்.
நம்முடைய உணவும், பொருட்களும், கல்வியியும், மருத்துவமும் எளிதாகக்
கிடைப்பதற்கு,
நாம் ஒருவரை
ஒருவர் சார்ந்திருக்கின்றோம்.
எப்பொழுது நேர்த்தியான தொடர்பும், ஒருவரோடொருவர் ஒற்றுப்போகுதலும், ஒரு மனநிலைப்பாடும், இருக்குமோ அப்பொழுதுதான்
உறவுகள் நிலைத்திருக்கும்.
குழுக்களின் முக்கியத்துவம்
மக்களே உலகில் மிகப் பெரிய வளங்களாயும், பேரிடர்களாயும் உள்ளனர்.
மற்றவர்களுடன் பணிபுரியும் திறன் கொண்டவர்கள் பொதுவாகத்
தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமானவர்கள்.
மக்கள் இல்லையெனில் ஆக்கப்பூர்வ காரியங்களோ ஆக்கக்
கேடான காரியங்களோ இல்லை.
ஆட்களுக்கிடையிலான உறவுகள் நல்ல முறையில் இருக்கும்
பொழுது,
சுயநலத்தை
துறந்து அணைத்து ஆக்ககேடான காரியங்களையும் ஆக்கபூர்வ காரியங்களாக மாற்றியமைக்க முடியும்.
சரியான மதிப்பீடுகளுளோடு ஆட்களுக்கிடையிலான திறன்கள், இந்தப் பூமியை சமாதானமும்
சந்தோஷமும் நிறைந்த இடமாக மாற்ற முடியும்.
பயனுள்ள குழு இயக்கவியல்
ஆட்களுக்கிடையேயான உறவுகளுக்குச் சிறந்த தொடர்புக்கொள்ளுதல்
(சொற்கள் சார்ந்த,
சொற்கள் சார்ந்திராத)
அவசியமாகும்.
மற்றவர்களின் நிலையிலிருந்து காரியங்களைப் புரிந்து, சாமர்த்தியமாகக் கையாள வேண்டும்.
அறம் மற்றும் நெறிமுறைகளின் படி சரியான மதிப்பீடுகளுக்காக
நின்று,
மற்ற காரியங்களைப்
பொறுத்துக்கொண்டு வழி விடலாம்.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், மற்றவரை உங்களைப் போல் நேசியுங்கள்.
வேறுபாடுகளின் நிமித்தம் ஒருவரை ஒருவர் மதியுங்கள்.
உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதிருங்கள், பொறாமை கொள்ளாதேயுங்கள, மற்றவரின் சிறந்த காரியங்களை
ஊக்குவியுங்கள்.
செயல்பாடு:
அனைத்து பங்கேற்பாளர்களும் 5-8 உறுப்பினர்களைக் கொண்ட
ஒரு குழவாக இணையலாம். ஒவ்வொரு குழுவும் தங்கள் இரண்டு கைகளையும் விரிந்த நிலையில் மற்ற
இரண்டு நபர்களுடன் பிடித்து,
ஒருவருக்கொருவர்
வெளியே எதிர்கொண்டு நோக்கியவாறு ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் உள் நோக்கியவாறு
கைகள் விரிந்த நிலையில் ஏற்கனவே கைகள் பிடித்திருந்த நபர்களுடன் ஒரு வட்டத்தை உருவாக்க ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் மற்றும்
கைகளை எந்த நேரத்திலும் விடக் கூடாது. ஒருவருக்கொருவர்
ஆதரவளிப்பதன் முக்கியத்துவமும்,
நிலைப்பாட்டை
மாற்றுவதற்கு தாழ்மையோடிருத்தல்,
ஒருவரோடொருவர்
சேர்ந்து பணியாற்றுதல் போன்றவை விவாதிக்கப்படலாம்.
குழுப்பணி
ஒரு உடலின் வெவ்வேறு பாபங்கள் ஒரு நோக்கத்திற்காக வித்தியாசமாகச்
செயல்படுகின்றன. அதேபோல்,
பயனுள்ள செயல்பாட்டிற்காக
வெவ்வேறு உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.
சுய வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் சிறிய குழுக்கள்
முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒன்றாக நாம் உலகை மேம்படுத்தலாம்.
செயல்பாடு:
Comments
Post a Comment