7. வளங்களை நிர்வகித்தல்
(நெறிமுறைகளுடனும் அறநெறிகளுடனும் பல்வேறு வளங்களைத் திறமையாக நிர்வகிக்க)
1. பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத வளங்கள்
செல்வத்தில் உள்ள எச்சரிக்கைகள்:
செல்வம் பெற்றிருக்கும் அனைவருக்கும் அது ஆறுதலையும் மகிழ்ச்சியையும்
அளிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
ஏனெனில் இது தேவையில் மற்றவர்களுக்கு நம்மைக் குருடாக்கி, நம்மைச் சுயநலமாக மாற்றும்.
தகுதியானவர்களுக்குக் கொடுப்பதையும் செல்வம் தடைசெய்யலாம், மற்றும் வலுவிழந்தவனிடமிருந்து
கூடக் கொள்ளையடித்து பெற்று மேலும் செல்வத்தைப் பெற தூண்டும். இது, ஒரு நபர் சில தவறுகள்
செய்தாலும் அவரைப் பாதுகாக்கவும், எதிர்மறையான விளைவுகளிலிருந்து தப்பிக்க பண்ணவும்,
நியாயமானவர்களை நியாயமற்ற வழிகளில் சுரண்டவும் செய்யலாம்.
மக்களின் மதிப்பு:
இயல்பாகக் கிடைப்பவையும், புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது
மாற்றியமைக்கப்பட்ட அனைத்தும் மனிதர்களிடத்து ஒரு பெரிய பங்கு வகிக்கின்றன. வாழ்வின்
கடைசி கட்டத்தை எதிர்கொள்ளும் போது எவரும் அவர்களுடன் எதையும் எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
தனது எல்லா வித உழைப்பாலும் மனிதன் சேமிப்பவை மற்றொரு தலைமுறைக்குக் கடந்துப்போகும்.
எனவே, மக்கள் அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் மதிப்புமிக்க வளங்கள், மற்றும் சுயநலம்
இல்லாதிருப்பின், நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து
அடுத்த தலைமுறையினருக்கு இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றிக் கொடுக்க முடியும்.
உள்வாங்க வேண்டிய குணநலங்கள்:
நம் சுய முயற்சியினாலோ அல்லது நம் முன்னோர்கள் சேர்த்து வைத்ததினாலோ
நம் கைகளில் இருக்கும் உடைமைகளுக்கு நாம் அனைவரும் பொறுப்பாளர்களாக நம் பொறுப்பை உணர
வேண்டும். நம் பெற்றிருக்கும் பொருட்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைக் காட்டிலும்
நன்மையான வழியில் அதைப் பயன்படுத்தும் மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும். நாம்
பெற்றிருக்கும் எல்லா விஷயங்களையும் சில சமயங்களில் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து
கொள்ள வேண்டும், இனி நாம் பயன்படத்தமாட்டோம் என்பவற்றை பிறருக்கு கொடுக்க வேண்டும்.
மேலும், பொருள் சார்ந்த வளங்கள் மற்றும் உணர்வுகள் போன்ற பொருள் சாரா வளங்களைச் சரியான
விதத்தில், சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்த ஏதுவாகப் பொறுமையாய் இருக்க
வேண்டும்.
எல்லாவற்றிற்கும் பின்னால் நோக்கத்தைப் பெற்றிருத்தல்:
நம்மைச் சுற்றியிருப்பதும், நமக்குள் இருப்பதுமான அனைத்திற்கும்
ஒரு மதிப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள நோக்கத்தை நாம் அடையாளம் கண்டு
அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். காரியங்கள் சரிபார்க்கப்பட்டு அது சரியான விதத்தில்
பயன்படுத்தப்படுகிறதா, அதன் நோக்கத்தின்படி செயலாக்கப்படுகிறதா என்பதை நாம் உறுதிசெய்ய
வேண்டும். காரியங்களின் பின்னுள்ள அதன் பயன் தெரிந்தால் எதையும் அவ்வளவு எளிதில் நிராகரித்து
விட முடியாது.
செயல்பாடு
பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாரா வளங்களைக் கண்டறிதல்:
அனைத்து பங்கேற்பாளர்களும் 5-8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகப்
பிரிந்துக் கொள்ளலாம். பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாரா வளங்கள் சில சீட்டுகளில்
எழுதப்பட்டு ஒரு உறையினில் இருக்கும். மேலும் 'பொருள் சார்ந்த வளம்' மற்றும் ‘பொருள்
சாரா வளம்' ஆகிய இரண்டு தலைப்புகளும் கொஞ்சம் பெரியதாக எழுதப்பட்டிருக்கும். குழுக்கள்
தலைப்புகளின் கீழுள்ள சீட்டுகளைக் கண்டறிந்து வகைப்படுத்த வேண்டும் மற்றும் அது பற்றிய
கலந்துரையாடல் செய்யலாம்.
|
வ.எண் |
பொருள் சார்ந்த வளங்கள் |
பொருள் சாரா
வளம் |
|
1 |
நிலம் |
அன்பு |
|
2 |
தங்கம் |
சாந்தம் |
|
3 |
தண்ணீர் |
விடாமுயற்சி |
|
4 |
செல்வம் |
படைப்பாற்றல் |
|
5 |
ஆடை |
அக்கரை |
|
7 |
பணம் |
மகிழ்ச்சி |
|
8 |
உடைமைகள் |
சமாதானம் |
|
9 |
சாமாங்கள் |
உண்மைத்தன்மை |
|
10 |
உபகரணம் |
ஒழுக்கம் |
|
11 |
விலைமதிப்பற்ற
கல் |
மதிப்பீடுகள் |
|
12 |
வீடு |
சுய கட்டுப்பாடு |
2. பொறுப்புக்கூறல்
மற்றவர்களுடைய காரியங்களுக்கு ஆசைப்படாமல் இருத்தல்:
வெவ்வேறு காரணங்களுக்காக ஏதாவது ஒன்றைப் ஈட்ட வேண்டும் அல்லது
சில அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசைகளும் விருப்பங்களும் உள்ளன.
ஆனால் அது எவரையாவது எதையாவது பாதித்தாலும், எப்படியாவது அதைப் பெற வேண்டும் என்ற மனப்பான்மையை
நாம் ஒருபோதும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றிலும் பொறுப்புடன் இருந்து நாம்
எப்போதும் சரியான மதிப்பீடுகளுடனும் நற்பண்புகளுடனும் காரியங்களைச் செய்ய வேண்டும்.
நாம் ஒருபோதும் பிறருடையவற்றிற்கு ஆசைப்படக்கூடாது, நமக்குச் சொந்தமில்லாததைக் கையாள்வதில்
எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். யாருக்கும் சொந்தமில்லாத காரியங்களை நாம் சுயநலம் இல்லாமல் கையாள வேண்டும்.
உரிமைக்கொள்பவரிடம் ஒப்படைத்தல்:
அறியாமை மற்றும் கவனக்குறைவு காரணமாக யாரேனும் ஒருவர் தான்
ஒரு காரியத்திற்கு உரிமையாளர் என்று தெரியாமல் அது சரியாகக் கவனிக்கப்படாமல் விடப்பட்டாலோ
அல்லது அதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளாவிட்டாலோ, நாம் அதைக் குறித்து தெரிந்திருக்கும்
போது, அந்த நபருக்கு நாம் உதவ வேண்டும். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் நமக்குச்
சொந்தமான விஷயங்களில் மட்டுமல்ல, உண்மையான தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவதன் மூலமும்
நமது பொறுப்புணர்வைச் செயல்படுத்துவது முக்கியம்.
வழங்கப்பட்ட விஷயங்கள்:
சில நேரங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் மற்றும் நாம் ஆர்வத்துடன்
செய்யும் விஷயங்களுக்குப் பொறுப்பாகவும் பொறுப்புகூறலோடும் இருப்பது எளிதாக இருக்கும்.
ஆனால் நாம் செய்ய விரும்பும் விஷயங்களை மாத்திரம் செய்வதில்லை, பல்வேறு நோக்கங்களுக்காக
ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக இருப்பதால் மற்றவர்கள் நாம் செய்ய விரும்பும் விஷயங்களையும்
செய்கிறோம். நாம் பொறுப்புகூறலோடு இருக்க நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட விஷயங்களுக்கும்,
நமக்கு விருப்பமில்லை என்றாலும் நாம் ஒப்புக்கொண்ட விஷயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்
பலவீனமானவர்களுக்கு பொறுப்பாக இருத்தல்:
ஒற்றுமைகள் மற்றும் பொதுவான ஆர்வங்கள் இருக்கும் பொழுது நாம்
சுதந்திரமாகவும் இயல்பாகவும் தொடர்பு கொள்ளக்கூடியவர்களுடன் தொடர்புகொள்வதும் அக்கறை
காட்டுவதும் எளிதானது. பெரும்பாலான நேரங்களில், நாம் யாருக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறோமோ,
அவர்கள் தாங்களாகவே நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமூகத்தில் உள்ள நலிந்த
பிரிவினருக்குத் தங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு யாரோ ஒருவரின் உதவி தேவை. நம்மைச்
சுற்றி உண்மையில் நமது உதவி தேவைப்படும் பலவீனமான
மக்களுக்குப் பொறுப்பாக இருக்க முயற்சிக்கலாம்.
பொறுப்புணர்வை கவனமாகச் செயல்படுத்துதல்:
மற்றவர்களை நேசிப்பது மற்றும் பிறருக்கு ஆதரவளிப்பது பற்றியும்
சுயலாபத்திற்காக எதையும் சுயநலத்துடன் வைத்திருக்கக்கூடாது என்பதை பற்றியும் எளிதாகப்
பேசலாம். நமது வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் சுய பரிசோதனைச் செய்வதன் மூலம் நமது
எண்ணங்களையும் செயல்களையும் நாம் கண்டறிய வேண்டும், நமது பொறுப்புணர்வை சரியான முறையில்
செயல்படுத்த வேண்டும். பணக்காரராகவோ ஏழையாகவோ இருந்தாலும், புத்திசாலியாகவோ முட்டாளாகவோ
இருந்தாலும், மகிழ்ச்சியானவராகவோ துக்கப்படுபவராகவோ இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள
அனைவரிடமும் நாம் அணுகக்கூடியவர்களாக இருக்கின்றோமா என்பதை எப்போதும் எங்கேயும் பகுப்பாய்வு
செய்ய வேண்டும். மேலும், நாம் எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்கிறோமா, நம்மால் முடிந்த
உதவி செய்கின்றோமா, தேவையில் உள்ள ஒருவருக்கு உதவ மனம் இணங்குகின்றோமா, ஒருவரைக் காப்பாற்றுவதற்காக
எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றோமா என்பதை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
செயல்பாடு: வழக்கு ஆய்வுகள்
வழக்கு 1- பொருட்களைப் ஏற்ற விதத்தில் பயன்படுத்துதல்:
லியோ ஒரு பிரபலமான நிறுவனத்தில் மாணவராக இருந்தார். அந்நிறுவனம்
நடத்தும் செயல்பாடுகளில் அவர் உதவுவார். ஒருமுறை அந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட
ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றது, அவர் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சமூகத்தில் உள்ளவர்களிடம்
பணம் வசூலிக்க வேண்டியிருந்தது. லியோ பலரைச் சென்றடைய முடிந்தது மற்றும் திட்டத்திற்காக
அதிக பணம் திரட்டினார். லியோவின் நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியதால் லியோ அவரை மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றார். லியோ தனக்குறியதான பணத்தையும் திட்டத்திற்காக மக்களிடமிருந்து
சேகரித்த பணத்தையும் கைகளில் வைத்திருந்தார். லியோ தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவழிக்காமல்,
மக்களிடம் வசூலித்த பணத்தை செலவழிக்க நினைத்தார்.
பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
அ. லியோவின் குணாதிசயங்கள் என்ன?
ஆ. லியோவை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியது என்ன?
இ. லியோ என்ன நினைத்துக் கொண்டிருந்தார்? அது சிறந்த செயலாக
இருக்குமா?
வழக்கு 2- தனிப்பட்ட மற்றும் பொதுவான உடைமைகளைச் சமமாகக்
கையாளுதல்
மனோ நல்லொழுக்கம் உள்ளவர். அவர் தனது ஆடைகள், பொருட்கள் மற்றும்
புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைப்பார், அது குறித்து யாரும் அவரைக் குறை
சொல்ல முடியாது. தன் விஷயங்களை மிகவும் கவனமாகவும் முறையாகவும் கையாளாத நண்பர்களையும்
உறவினர்களையும் பார்த்தால் மனோவால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரு மர மேசையில் தண்ணீரைக்
கொட்டி, தனது விஷயங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதற்காக ஒரு நாள் மனோ தன்
அறை தோழனிடம் கத்தி சண்டையிட்டார். அதே நாளில், அவர்களின் வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி
நடைப்பெற்றது, அவர்கள் குளிர்பானம் மற்றும் காபி கொடுத்தனர். மனோ தவறுதலாகக் காபியைக்
கொட்டிவிட்டு, டேபிளில் இருந்த தின்பண்டங்களைச் சிதறடித்தான், ஆனால் யாரும் கவனிக்காததைக்
கண்டு வேறு டேபிளுக்கு நகர்ந்தான்.
பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
அ. மனோவின் பண்புகள் என்ன?
ஆ. மனோ ஏன் தன் தவறுக்காக எந்தச் செயலும் செய்யவில்லை?
இ. மனோவால் என்ன செய்திருக்க முடியும்?
வழக்கு 3 - கெட்டதைத் தவிர்த்தல் மற்றும் நல்லதைப் பின்தொடர்தல்
ஹானி ஒரு கிராமப்புற பின்னணியை சார்ந்த ஒரு பழமைவாத பெண்.
குழந்தைப் பருவத்திலிருந்தே மிகவும் ஒதுங்கியிருந்த அவள், வளர்ந்த பிறகு திறம்படச்
செயல்பட, மற்றவர்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்ததால், அவளால் தனித்து இருக்க
முடியவில்லை. ஹானி மெதுவாக மற்றவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள், எனினும் மற்றவர்களுடன்
ஒத்துப்போக அவள் போராடினாள். அவளுடைய சில நண்பர்களுக்கு ஏழைகள் மற்றும் தேவையில் உள்ளவர்கள்
மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் கேலி மற்றும் கிண்டல் மாத்திரம் செய்தார்கள்.
மேலும், சில போதைப்பொருட்களையும் ஆடம்பர பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஹானியும் அப்படியே இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். தவறில் ஈடுபடாமல், சரியானதைச்
செய்ய வேண்டுமென்ற சிக்கலான சூழ்நிலையில் ஹானி இருந்தாள்.
பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
அ. ஹானியின் பண்புகள் என்ன?
ஆ. ஹானியின் நண்பர்கள் அவளிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்கள்?
இ. ஹானி ஏன் சிக்கலாக உணர்ந்தாள்? சரியானதை கடைப்பிடிக்க
ஹானி என்ன செய்ய முடியும்?
வழக்கு 4- கலாச்சாரத்தையும் மனசாட்சியையும் சமநிலைப்படுத்துதல்
யாகேல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவள், அவர்கள்
தங்கள் முன்னோர் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி நிறைய பெருமை கொள்வார்கள். அவர்கள்
நிறைய விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர், மேலும் அவர்கள் தங்கள் சமூகத் தேவைகளைப்
பூர்த்தி செய்த பிறகு பொருட்களை மற்ற சமூகங்களுக்கும் வழங்கினார்கள். அவர்கள் தங்கள்
நலனுக்காக மட்டுமே சில பொருட்களைக் கொடுக்கவும் வாங்கவும் மற்றவர்களுடன் பழகி வந்தனர்.
வேறொருவருடன் சாப்பிடுவது கூடத் தங்களை இழிவுபடுத்துவதாக அவர்கள் கருதினர். யாகேல்
ஒரு நடுநிலையான நபர், ஆனால் கலாச்சார வித்தியாசமும் அவர்களின் கலாச்சாரத்திலிருந்து
அகற்றப்படுவோமோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது. அவளுடைய மக்கள் அவளின் நண்பர்களைத்
தவிர்க்கச் சொல்லும் அதே நேரத்தில், அவளுடைய நண்பர்களுடன் ஒன்றாக இருக்க விரும்பினாள்
அவர்களுடன் ஒன்றாகச் சாப்பிடவும் விரும்பினாள்.
பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:
அ. யாகேலின் பண்புகள் என்ன?
பி. யாகேலின் பழங்குடியினர் என்ன செய்து வந்தார்கள் மற்றும்
ஏன் அதைக் குறித்து பெருமைக் கொண்டனர்?
c. யாகேல் அவளது கலாச்சாரத்தையும் மனசாட்சியையும் சமநிலைப்படுத்த
என்ன செய்ய முடியும்?
3. நெறிமுறைகளும் ஒழுக்கமும்
சார்பின்றி கருத்தில் கொள்பவராக இருத்தல்:
வெவ்வேறு நபர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் சட்டங்களில்
எப்போதும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மனிதர்களின் எண்ணங்கள் அவர்கள் பின்னணிக்கு ஏற்பத்
தொடர்ந்து மாறுபடுவதால். மதிப்பீடுகள் அல்லது கொள்கைகளின் உலகளாவிய தரநிலை எதுவும்
நம்மிடையே இல்லை. சில விஷயங்கள் முழுமையானவையாக உள்ளன, அவற்றை எந்தக் காரணத்திற்காகவும்
மாற்றவோ திருத்தவோ கூடாது, மேலும் அவற்றில் மாற்றங்கள் செய்தால், அது சுயத்திற்கோ பிறருக்குக்கோ
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேரழிவை ஏற்படுத்தும். யாரையும் எந்த வகையிலும் பாதிக்காத
விதத்தில் உள்ள, சாதாரணமாகக் கையாளக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
தவறை உணர்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் வெளிப்படுத்துதல்:
நெறிமுறைகளும் அறநெறிகளும் சமூகத்தில் தனிப்பட்ட நபரின் நடத்தைக்கு
வழிகாட்டுகின்றன. சரி மற்றும் தவறு பற்றிய சிந்தனையை இவை தூண்டுகின்றன. மற்றும் இவை
பாகுபாடும் வேறுபாடும் இல்லாத ஒரு நிலையான நெறிமுறை. பொறுப்பையும் பொறுப்புணர்வையும்
இவை ஊக்குவிக்கின்றன. ஒரு நேர்மறையான வழியில் ஒருவரையொருவர் இவை ஒருங்கிணைக்கிறது.
ஒவ்வொருவரும் உறுதியான உயர் தரநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஏராளமான மக்கள்
தவறான விஷயங்களைப் பின்பற்றினாலும் நாம் அந்தத் தவறை உணர வேண்டும். ஒரு பெரிய கூட்டத்தைப்
பின்தொடர்ந்து ஒரு நபர் தவறு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு வெளிப்படுத்துவதன்
மூலம் அந்த நபரைத் திருத்துவது முக்கியம்.
சரியானதை பின்பற்றுதல்:
ஒரு அமைப்பு சரியானதாகவும் அணுகக்கூடியதாகவும் இல்லாதபோது
எல்லா நேரங்களிலும் சரியானதைப் பின்பற்றுவது எளிதானது அல்ல. நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத
வக்கிரமான அந்நியரைக் கூட ஒரு நல்ல தலைவர் உபசரித்து அவரிடம் சகோதர அன்பை எப்போதும்
காண்பிக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் நன்மைக்கு ஏதுவான உரையாடலைக் கொண்டிருப்பார்,
அதே நேரத்தில் நம்பத்தகாத கதைகளைப் பின்பற்ற மாட்டார், ஒரு நல்ல தலைவர் பல விஷயங்களைத்
தொடர்புபடுத்துவதன் மூலம் எது சரியானது மற்றும் பொருத்தமானது என்பதை பகுப்பாய்வு செய்து
கண்டுபிடிப்பார். நாம் முடிந்தவரை எப்போதும் நன்மை செய்யக் கடினமாக முயற்சிக்க வேண்டும்.
நல்ல பண்புகளைப் பின்பற்றுதல்:
நன்நெறிமுறைகளையும் அறநெறிகளையும் கொண்ட ஒரு நபர் அல்லது
சமூகம் வளங்களைச் சுரண்டாமல் அனைத்தையும் சிறந்த விதத்தில் பயன்படுத்துவர். உரிமைகள்
அனைத்தும் அனைவராலும் அனுபவிக்கப்படும், மேலும் பொறுப்புகள் அனைத்தும் அனைவராலும் நிறைவேற்றப்படும்.
வெவ்வேறு விஷயங்களுக்கு இடையே ஒரு நல்ல சமநிலை உள்ளது; நிர்பந்தத்துவமும் தாராளமயமும்
தவிர்க்கப்படலாம். நன்நெறிமுறைகளையும் அறநெறிகளையும் கொண்ட ஒரு நபர் அல்லது சமூகம்
எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இருப்பதன் மூலம் நீதியுடனும் நேர்மையுடனும் இருப்பர். நன்நெறிமுறைகளையும்
அறநெறிகளையும் கொண்ட ஒரு தலைவர் சொல்வதை செய்வார், மேலும் அவரது குழுவினரையும் சொல்வதை
செய்ய வழியுறுத்துவார்.
மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்தல்:
ஒவ்வொருவரும் நன்மையானதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதையும் பின்பற்றுவதற்கு
தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகள் மிகவும் முக்கியம். இது நம் தரத்தை மேம்படுத்துகிறது
மற்றும் சரியான முன்னுரிமைகளை கொண்டிருந்து திறம்பட செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது.
உணர்வுகள் மற்றும் அறிவில் நாம் சமநிலையுடன் இருப்பதன் மூலம் எப்போதும் உண்மையைத் தெரிந்துக்கொண்டு
அதைச் சார்ந்து காரியங்களைச் செய்ய வேண்டும். நெறிமுறையற்றவர்களாகவோ ஒழுக்கக்கேடானவர்களாகவோ
நம்மை வழிநடத்தும் சூழ்நிலைகளையும் சந்தர்பங்களையும் நாம் மாற்ற வேண்டும். நாம் சுயத்திற்கும்,
பிறருக்கும், சுற்றுச்சூழலுக்கும் உண்மையானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும், பொறுப்புகூறலோடும்
இருக்க வேண்டும். மதிப்பீகளின் அடிப்படையில் சரியான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க
நாம் தவறான நம்பிக்கைகள் அல்லது கருத்துக்கள், சுயநலம், மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல்
தற்காலிக திருப்தி கொள்ளுதல், நோக்கமற்று இருத்தல், பெருமையோடு இருத்தல், நேர்மையின்மை,
நிர்பந்தங்களோடு இருத்தல், சுயக்கட்டுப்பாடு இல்லாமை, போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.
4. பொதுவானதா அல்லது தனிநபருடையதா
ஒற்றுமையின் ஆற்றல்:
ஒற்றுமையும் ஒற்றுச்சேர்ந்திருத்தலும் இருந்தால், ஒவ்வொருவரும்
குற்ற உணர்வும் கடினமான உணர்வுகளும் இல்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியடையலாம். பொருளாதாரம்
மற்றும் சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம் ஆகியவற்றில் சமநிலை இருக்கும். உரிமைகள்
சமமாகக் கிடைக்கப்படும், மற்றும் பொறுப்புகள் அனைவராலும் மேற்கொள்ளப்படும். சுயநல எண்ணங்கள்
தணிந்து கட்டுப்படுத்தப்படும், சமூக நலன்கள் வளர்க்கப்படும். போர்கள் முடிவடைந்து,
அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றின் நறுமணம் உலகம் முழுவதும் பரவும்.
பொறுப்புகளை உணர்தல்:
உலகில் உள்ள எவராலும் தங்கள் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில்
அவர்களுக்குச் சொந்தமானதையும், அவர்கள் கடினமாகப் பிரயாசப்பட்டதையும், தங்கள் கைகளில்
எடுத்துச் செல்ல முடியாது. நாம் யாராக இருந்தாலும், நம் கைகளில் எது இருந்தாலும், பூமியில்
நமக்கு இருக்கும் குறுகிய வாழ்க்கை விரைவில் மறைந்துவிடும் என்பதை நாம் அனைவரும் உணர
வேண்டும். எதுவுமே நிரந்தரமில்லை, எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்ற மிக முக்கியமான
உண்மையை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நாம் சம்பாதிக்கும் அல்லது யாரோ ஒருவர்
நம்மிடம் ஒப்படைக்கும் காரியங்களை நிர்வகிக்கவே நாம் இவ்வுலகில் இருக்கிறோம்.
பொதுவானதை சரியாகப் பராமரித்தல்:
பல நேரங்களில், நமக்குரியதும் தனிப்பட்ட முறையில் நாம் பொறுப்பேற்க
வேண்டியதுமான விஷயங்களை நாம் நன்றாகக் கவனித்துக்கொள்கிறோம். நமக்குச் சொந்தமில்லாததும்
தனிப்பட்ட முறையில் நாம் பொறுப்பேற்க வேண்டியதுமாக இல்லாததுமான விஷயங்களிடத்து நாம்
அக்கறை காட்டுவதில்லை அல்லது குறைவான அக்கறையே காட்டுகிறோம். தனிப்பட்ட காரியமாக இருந்தாலும்
சரி, பொதுவான காரியமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் கவனமாகவும் அக்கறையுடனும் எப்போதும்
கையாள வேண்டும். நம் சொந்த காரியங்களைவிட அவை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், பொதுவான
காரியங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதைப் பழக வேண்டும்.
பிறர் உடைமைகளை மதித்தல்:
மற்றவர்களின் உடைமைகள், அதிகாரம், பதவி அல்லது படைப்பாற்றலை
நாம் மதிக்க வேண்டும். இதயத்தில் பொறாமையோ கசப்போ இல்லாமல் கவனித்துக்கொள்ள அது நமக்கு
உதவும். எல்லாரும் பின்பற்றி, பொருத்தமற்றதை கொண்டிருந்தாலும், எப்பொழுதும் நமது தரநிலைகளை
நாம் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா காரியங்களும்
ஒரு கட்டத்தில் யாருடையதாக இருந்தாலும், அவை நிலையானவை அல்ல என்பதை குறித்து நம் மனதிலும்
இதயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் மற்றவர்களின் உடைமைகளை
மதிக்கிறார், மேலும் அந்த உடைமை பயனற்று இருப்பதை விடப் பொது நன்மைக்காகப் பயன்படுத்தப்பட
வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆக்கபூர்வமாக, அழிவுகரமாக அல்ல:
நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் அனைவரும் ஒருவருக்கொருவர்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறார்கள், அது ஆக்கபூர்வமாகவோ அல்லது அழிவுகரமாகவோ
இருக்கலாம். அழிவுகரமான சில விஷயங்கள் அல்லது சில நபர்கள் இருந்தாலும், சிறந்த முறையில்
பங்களிக்க உதவும் நேர்மறையானவற்றைக் அவர்களிடத்தில் கண்டறிய முயற்சிக்க வேண்டும். ஒருவருக்கொருவர்
நன்மை செய்வதன் மூலம் நமது எண்ணங்கள், செயல்கள் மற்றும் உடைமைகள் ஆகியவற்றில் ஆக்கபூர்வமானதாக
இருக்க வேண்டும்.
5. நிர்வகித்தல், உடைமையாகக் கொள்ளுதல் அல்ல
மற்ற உயிரினங்கள் மீது ஆதிகாரம்:
பூமியின் முகத்தில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து
உயிரினங்களிலும் மனிதர்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் மனிதர்கள்தான்
ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மனிதர்கள் நீர், காற்று மற்றும் நிலத்தை நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ ஆள்கின்றனர். அறிந்தோ அறியாமலோ பூமியில் உள்ள மற்ற அனைத்து உயிரினங்களின்
மீதும் உள்ள அதிகாரமும் ஆதிக்கமும் மனிதர்களிடம் உள்ளது. ‘அதிகாரம் இருக்கும் இடத்தில்
பொறுப்பும் இருக்கும்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும் ஆட்சி
செய்வதை விட அதிகாரத்தை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொள்கிறார்.
பாதிப்படையச்செய்யாமல் நன்மையை அனுபவித்தல்:
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நன்மையானது, மேலும் அவை சில
தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது, அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். சரியான வரம்புகள்
அல்லது எல்லைகளுடன் ஒரு காரியம் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது, எதுவும்
நிராகரிக்கப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான நேரங்களில், மனிதர்கள் முடிந்தவரை தங்களை
திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் உண்மையில் நிரைய நபர்களால் அதை அடைய
முடியாது, கைகளில் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும்.
எதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை கவனமாக அறிந்து, சரியான எல்லைகளைக் கவனமாக
வரையறை செய்து எல்லாவற்றையும் அனுபவிக்க முயல வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்றுதல்:
நடத்தை நெறிமுறைகள் இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய வழியில்
சில விஷயங்களைச் செய்யத் தொடங்கினால் பெரும் சிதைவு மற்றும் பேரழிவு ஏற்படும். நல்லிணக்கம்
மற்றும் ஒழுங்குமுறையுடன் பயனுள்ளவர்களாக இருக்க, விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தவறான நடத்தை அல்லது சிறிய கவனக்குறைவு கூடச் சுயத்தை அல்லது மற்ற நபரைப் பாதிக்கலாம்.
ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும் பொது நலனுக்காகச் சரியான மதிப்புகளுடனும் பிற மக்களை மதிக்கும்
விதத்திலுமான அவர் வாழும் இடத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவார்.
நமது நிலையற்ற தன்மையைப் புரிந்துகொள்ளுதல்:
உலகில் எதுவும் நிரந்தரமானதல்ல. மனிதர்கள் தொடர்ந்து காரியங்களை
மாற்றியமைப்பதாலும், பொருட்களை உருவாக்குவதாலும் மாற்றங்கள் தொடர்கின்றன. மேலும், ஒரு
தலைமுறை கடந்து செல்கிறது, மற்றொரு தலைமுறை வருகிறது, இது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும்
செயல்களில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாமோ நம்மைச் சுற்றியுள்ள பொருட்களோ நிரந்தரமானவை
அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல தலைவர், எதிர்கால சந்ததியினருக்காகச்
சேமிப்பதில் கவனம் செலுத்தாமல், தற்போதைய தலைமுறை மகிழ்ச்சியாகவும், ஒருங்கிணைந்தும்
இருக்க உதவுவதன் மூலம், தன்னை சுற்றியுள்ள உள்ள அனைத்து வளங்களையும் கொண்டு சிறப்பாக
வாழ முயற்சிக்கிறார்.
பொறுப்புணர்வை செயல்படுத்துதல்:
குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடுவது என்பது வல்ல இறைவனின்
மிகப் பெரிய பரிசாகும், இது எப்போதும் இதயத்தில் மகிழ்ச்சியின் எல்லைகளைக் விரிவாக்குகிறது.
எல்லாவற்றின் சமநிலையினாலும் நமது உடைமைகள் மற்றும் மற்றவர்களின் உடைமையிகளின் மீது
பொறுப்புடனும் பொறுப்புகூறுதலுடனும் இருப்பதனாலும் உறவுகளை வலுப்படுத்த முடியும், மேலும்
அது மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. ஒருவரோடொருவர் அமைதியான முறையில் வாழப் பொறுப்புணர்வு
உதவியாக இருக்கும், மேலும் அது மோதல்களைத் தவிர்க்கவும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும்
உதவுகிறது.
செயல்பாடு: மேலாண்மை செய்ய, வைத்திருக்க இல்லை
அனைத்து பங்கேற்பாளர்களும் 5-8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை
உருவாக்கலாம். ஒவ்வொரு குழுவிற்கும் சில உருவாக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்படும், அவர்கள்
அதைப் பற்றிய நேர்மறையான காரியங்களையும் அது எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கடந்துச்
செல்லக்கூடும் என்பதையும் அடையாளம் காண வேண்டும் (சாத்தியமான ஆக்கபூர்வமான தன்மை மற்றும்
அழிவுகரமான தன்மை).
Comments
Post a Comment