6. இடைவெளிகளைக் நிரப்புதல்
(தன்னுடைய தவறு அல்லது குழுவின் தவறுக்கு பொறுப்பேற்று, இடைவெளிகளைச்
சீராக நிரப்புதல்)
1. மற்றவர்களை ஏற்றுக்கொள்ளுதல்
பாகுபாடுகளை நீக்குதல்:
ஒரு நபர் அல்லது ஒரு குழுவிற்கு மற்றொரு நபர் அல்லது ஒரு குழுவால் ஏற்படும்
பெரும்பாலான தீமைகள் சகிப்புத்தன்மை இல்லாமையால் இதயத்தில் உள்ள பாகுபாடு காரணமாக நிகழ்கின்றன.
மனிதனின் வாழ்க்கையை ஆரம்பம் முதலே ஆராய்ந்துப் பார்த்தால், மனிதர்கள் எந்த ஒரு விஷயத்திம்
நிமித்தமும் செய்யும் பாகுபாடுகள் தன்னிச்சையானவை, அது மதிப்புள்ளது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க
வேண்டும். ஒரு நல்ல தலைவர் பாகுபாட்டைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பாகுபாடுகளை இதயத்தின்
மையத்திலிருந்து முற்றிலுமாகத் துடைக்கிறார், மேலும் அனைவரையும் ஒரே மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்பதிலும் அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதிலும்
தனது உள்ளத்தைத் தெளிவுபடுத்துகிறார்.
சார்ந்திருத்தலை புரிதல்:
தங்கள் உடைமை, பதவி அல்லது அதிகாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படும்
சிலர் இருந்தாலும், மனிதர்களிடையே வலுவான சார்பு உள்ளது மற்றும் இந்த உலகில் யாரும்
தனியாக வாழ முடியாது என்பது தவிர்க்க முடியாத உண்மை. குறைந்தபட்சம் ஒவ்வொருவருக்கும்
அவர்களின் வாழ்க்கையின் தொடக்கத்திலும், அவர்களின் வாழ்க்கையின் கடைசியிலும் ஆதரவு
தேவை. தங்களுக்கான சில ஆதாயங்களை உள்ளடக்கி இருந்தாலும் சக மனிதர்கள் பொருட்களை உருவாக்கி,
மாற்றியமைத்து, பராமரிப்பதால் தான் வாழ்க்கை எளிதானது. ஒரு நல்ல தலைவர் சார்புநிலையை
புரிந்துக்கொண்டு அனைவரையும் ஏற்றுக்கொள்வதோடு, ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த திறனைப்
பயன்படுத்த உதவுகிறார்.
சிறுபான்மையானவர்களோடு இருத்தல்:
எல்லோரையும் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு நபர் தவறு செய்யும் போது, அந்த
நபர் செய்யும் அனைத்தையும் ஒப்புக்கொண்டு தாங்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு நபர்
தவறு செய்தாலும் அவரை ஏற்றுக்கொள்வது எப்போதும் இன்றியமையாதது, அதைத் தாண்டி ஒரு நபர்
தவறை உணர்ந்து அதைத் தொடராமல் இருக்க அந்தத் தவறு தன்னையும் மற்றவர்களையும் பாதிக்கிறது
என்பதை உணர வேண்டும். சில சமயங்களில் மேலாதிக்கம் உடையவர் சிறுபான்மையானவர்களுக்கு
எதிராகத் தவறிழைக்கும் போது அது பாராட்டப்படும். ஆனால் ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும்
நேராக முன்னோக்கி இருக்க வேண்டும், எது சரியானதோ அதற்காக நிலைநிற்க வேண்டும் மற்றும்
சிறுபான்மையானவரை கட்டியெழுப்ப தனது கையைக் கொடுத்து உதவ வேண்டும்.
எதிர்ப்பை எதிர்க்கவும், எதிர்ப்பவர்களை அல்ல:
சிலர் தனித்திருக்க விரும்புவதாலும் அங்கீகரிக்கப்பட விரும்புவதாலும்,
குழுவிற்குள்ளேயும் கூடப் பிரச்சனைகளின் நேரங்கள் நிச்சயமாக இருக்கும். பெருமையின்
காரணமாக, அவர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க மாட்டார்கள் அல்லது மற்றவர்களின் செயல்களை
ஆக்கபூர்வமானதாக இருக்க அனுமதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரியத்தின் முன்னேற்றத்தைத்
தடுக்கும் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நிச்சயம் இருக்கும். ஒரு நல்ல தலைவர்
எப்பொழுதும் விமர்சனங்களை வரவேற்பார், சுயத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டிய காரியம்
உள்ளதா என்பதை ஆராய்வார், எதுவும் இல்லாதபோது அதையே புறக்கணிப்பார். ஒரு நல்ல தலைவர்
எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதில்லை, அதனால் பாதிக்கப்படுவதுமில்லை,
மேலும் எதிர்ப்பாளர்கள் தங்கள் அணுகுமுறையையும் செயல்களையும் சரியாக அமைப்பதை விரும்புகிறார்.
செயல்பாடு
ஒரு குழுவாக ஒரு புதிரைச் சரிசெய்தல்
உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
தாள்களில் வெவ்வேறு படங்கள் இருக்கும். குழுக்களில் இருக்கும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைப்
பொறுத்து ஒவ்வொரு படமும் 3-5 துண்டுகளாக வெட்டப்படும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு
படத்தின் ஒரு பகுதியைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசாமல், படத்தின்
துண்டுகளை வைத்திருக்கும் மற்ற உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். பங்கேற்பாளர்கள்
அனைவரும் தங்கள் கூட்டாளிகளைக் கண்டறிந்த பிறகு, 3-5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை
உருவாக்கலாம்.
2. பொறுப்புக்கூறலுடனும் பொறுப்புடனும் இருத்தல்
எடுக்கப்பட்ட விஷயங்கள்:
ஒவ்வொருவரும் எப்போதும் ஈடுபாட்டுடன் இருக்க விரும்புகிறோம், மேலும் நமக்கு
ஆர்வமுள்ள விஷயங்களில் அல்லது நமக்குப் பயனளிக்கும் மற்றும் நமது தேவைகளில் சிலவற்றை
நிறைவேற்றும் விஷயங்களில் நாம் தானாக முன்வந்து ஈடுபடுகிறோம். சில கடமைகள் அல்லது பொறுப்புகளை
ஏற்றுக்கொள்வதற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், அதை நாம் கவனித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருப்பதால்,
நாம் ஏற்றுக்கொண்ட சில விஷயங்களுக்குப் பொறுப்புக்கூறலுடனும் பொறுப்புடனும் இருப்பது
முற்றிலும் அவசியமாகும். ஒரு நல்ல தலைவர் சில பொறுப்பை ஏற்கும் முன் நிறைய யோசிப்பார்
ஆனால் அதை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டார்.
வழங்கப்பட்ட விஷயங்கள்:
நாங்கள் மிகவும் ஒருங்கிணைந்த உலகில் வாழ்கிறோம், மற்றவர்களைக் கருத்தில்
கொள்ளாமல் நாம் திட்டமிட்டதைச் செயல்படுத்துவதில் அதிக கவனம் நாம் செலுத்தினால், சில
உறவுகளை நாம் இழக்க நேரிடலாம் அல்லது மற்றவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்கலாம். நமக்கும் வரம்புகள் இருப்பதால், மற்றவர்கள் நாம் செய்ய விரும்பும் அனைத்தையும்
நாம் எடுக்க முடியாது, ஆனால் நாம் செய்யக்கூடிய சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்,
அது நம்முடையது எனப் பொறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் அதை நிறைவேற்றுவதில் பொறுப்புக்கூறலோடு
இருக்க வேண்டும்.
நாம் பயன்பெறும் விஷயங்கள்:
நாம் எடுத்துக் கொள்ளாத அல்லது பிறரால் கொடுக்கப்படாத சில விஷயங்கள் உள்ளன,
ஆனால் பொதுவாக நாம் அதிலிருந்து பயனடைவோம். உதாரணமாக மரங்களிலிருந்து நாம் சுவாசிக்கும்
காற்று, நிலத்திலிருந்து நாம் உட்கொள்ளும் நீர், நாம் பயன்படுத்தும் பொது இடங்கள் போன்றவற்றால்
நாம் பலனடைகிறோம். நமக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் அல்லது யாரும் நம்மைக் கட்டாயப்படுத்தாவிட்டாலும்
அல்லது கவனித்துக்கொள்ள விரும்பாவிட்டாலும் நாம் பயன்பெறும் விஷயங்களில் நமக்குப் பொறுப்பு
உள்ளது. ஒரு நல்ல தலைவர் எப்போதும் மற்ற மனிதருக்கு நன்மை பயக்கும் விஷயங்களில் பொறுப்பாக
இருப்பார், அதற்குப் பொறுப்புக்கூறுவதிலும் கவனமாக இருப்பார்.
நாம் கடந்துவரும் விஷயங்கள்:
நாம் வாழும் உலகத்தைப் பற்றிப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவவோ அல்லது அட்டூழியங்களுக்கு எதிராகச் செயல்படவோ விரும்பினாலும், எல்லா இடங்களிலும்
இருந்து அனைவருக்கும் உதவுவதும் தேவைப்படும் அனைத்தையும் கவனித்துக்கொள்வதும் சாத்தியமற்றது.
குறைந்த பட்சம் நாம் கடந்துவரும் நபர்களுக்கும் காரியங்களுக்கும் எதிரான அட்டூழியங்களுக்கு
எதிராக நாம் செயல்பட வேண்டும் அல்லது உண்மையான தேவையில் உள்ள யாரையாவது ஆதரிக்க வேண்டும்.
மறைந்திருக்கும் விஷயங்கள்:
பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் என்பது, ஏதோ ஒரு வகையில் நாம் பலனடைகிறோம்
என்பதற்காக, பின்னால் உள்ள நோக்கங்களைப் பகுப்பாய்வு செய்யாமல், சில உயர்ந்த அல்லது
பிரபலமான நபருக்குச் செவிசாய்ப்பது மட்டுமல்ல. நாம் என்ன செய்கிறோம், அது எப்படிப்
பங்களிக்கிறது என்பதில் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு காரியம் யாரோ ஒருவரின்
அறிவுறுத்தலின் படி செய்யப்பட்டது, நாங்கள் எங்கள் பங்கைச் செய்தோம் என்று யாரும் சொல்ல
முடியாது. எதிர்மறையான ஒன்றுக்கு யாரோ ஒரு சிலர் பங்களித்திருந்தாலும், அதற்காகப் பொறுப்பேற்று
ஒட்டுமொத்தமாகச் செயல்பட ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
3. தவறுகளுக்குப் பழியை ஏற்றுக்கொள்ளுதல்:
நன்மை செய்வதில் உறுதியாக இருத்தல்:
நன்மை என்பது பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒன்று அல்ல, ஆனால் நன்மையானது
யாரையும் எதையும் சுயநலத்திற்காச்க சுரண்டாது, மற்றும் பல சமயங்களில் ஒருசிலரின் ஏதோவொன்றின்
மற்றும் பலரின் நலனைக் கருத்தில் கொள்வது. சில சமயங்களில் சுயலாபத்தின் காரணமாகப் பொது
நலனுக்காக முயற்சிக்கும் நன்மையை எதிர்க்கும் ஒருவரோ அல்லது சில குழுவினரோ இருப்பார்கள்,
சிலரிடமிருந்து சிரமங்கள் மற்றும் சவால்கள் இருந்தாலும் ஒரு நல்ல தலைவர் எப்போதும்
பொது ஆதாயத்திற்காக நன்மையை முயற்சி செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.
தவறை நன்மையால் மறைத்தல்:
ஒரு சிலர் அல்லது ஒரு சில குழுவினர் அவர்களின் சார்பினாலும் சுய கருத்துக்களினாலும்
எண்ணங்களினாலும் எப்போதும் தவறான செயல்களைச் செய்வார்கள், மேலும் சரியான புரிதல் இல்லாததால்
கூட அவ்வாறு இருக்கலாம். ஒரு நல்ல தலைவர் சுற்றியுள்ள மக்களைப் புரிந்துகொண்டு, தன்
அணுகுமுறையைச் சரியாக அமைத்துச் சுயத்தை நிர்வகிக்கிறார், மற்றும் மக்களை அவர்களின்
நோக்கங்களுக்கு ஏற்பக் கையாளுகிறார். ஒரு தலைவர் தன் எந்தவொரு எண்ணத்திலும் செயலிலும்
தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களுக்குத் தீமையை நினைப்பதில்லை, ஆனால் அதற்குப் பதிலாக
நன்மை செய்வதன் மூலம் எல்லாத் தவறுகளையும் மறைக்கிறார்.
பாதுகாப்பிற்கான பாதைகளை உருவாக்குதல்:
நன்மைச் செய்ய முயற்சிக்கும் பொழுது, எதிர்ப்பாளர்கள் தொடங்கக்கூடிய சில
கடுமையான அச்சுறுத்தல்களும் துன்பங்களும் இருக்கலாம். ஒரு நல்ல தலைவர் என்பவர் தீங்கு
விளைவித்து எதிர்த்துப் போராட முன்வர விரும்பவில்லை என்றாலும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளைக்
கொண்டிருப்பது அவசியம். ஒரு நன்மையான செயலைச் செய்யும் போது ஏற்படும் எதிர்ப்பை எதிர்த்துப்
போராடுவதற்கு தெளிவான செயல்திட்டமும் நியாயமானவர்களிடமிருந்து ஆதரவும் இருக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைவர் வெளிப்படைத்தன்மையுடன், எல்லாவற்றின் விளைவுகளையும் கணக்கிட்டு, சார்ந்திருக்கும்
மக்களுக்குக் கேடயமாக இருப்பார்.
பின்வாங்காமல் முன்னோக்கித் தொடர்தல்:
நமக்கு முன்னால் நிறைய தடைகள் இருந்தாலும், எல்லா நேரங்களிலும் தொடர்ந்து
முன்னோக்கி நடத்தல் நமது முன்னேற்றத்திற்கு அவசியம். ஒரு நல்ல தலைவர் சில இடையூறுகள்
அல்லது சிரமங்களைப் பார்த்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை, ஆனால் சிரமங்களைச் சமாளிக்கவும்
அதை எதிர்கொள்ளும் சவாலாகக் கருதவும் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார். சில நேரங்களில்
நாம் ஒரு சிறந்த விதத்தில் முன்னேற விஷயங்களை மறுபரிசீலனை செய்யவும், பிரதிபலிக்கவும்
மீண்டும் கற்றுக்கொள்ளவும் வேண்டும், நாம் ஒருபோதும் எதையும் செய்யாமல் இருந்துவிட்டு பின்வாங்கக்கூடாது. சில தடைகள் இருப்பினும் ஒரு
நல்ல தலைவர் முன்னோக்கி நகர்வதை நிறுத்த மாட்டார், இன்னும் தொடர்ந்து முன்னேறத் தடைகளை
ஓய்வு எடுக்க உதவும் காரியங்களாகப் பார்ப்பார்.
4. தீர்வுகளைக் கண்டறிதல்
மற்றவர்களுடன் சேர்ந்திருத்தல்:
மற்றவர்களுடன் பழகாமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள
முயற்சிக்காமல், சுற்றியுள்ள மக்களின் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வை வழங்க முடியாது.
ஒரு நபர் பிரச்சனையை மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு ஒரு தீர்வை வழங்க முயற்சித்தால்,
அது அதிக ஏற்புடையதாக இருக்காது மற்றும் பிரச்சினையின் மூல காரணம் உண்மையில் தீர்க்கப்படாது.
ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும் மக்களுடன் இருப்பார், உண்மையில் உள்ளத்தின் தேவைகளை அறிந்து,
அதிகபட்ச பிழையைத் தவிர்த்து, விஷயங்களை மிகவும் திறமையான முறையில் தீர்ப்பார்.
பங்கேற்று நெருக்கத்தை அதிகரித்தல்:
மக்கள் தங்களின் நலனுக்காக ஏதாவது செய்ய முன்னோக்கி வழிநடத்தி வழிகாட்டுபவர்
எப்போதும் இருக்க வேண்டியதில்லை. நம் அடிப்படை தரநிலைகள் அல்லது மதிப்பீடுகளுக்கு முரண்படாது,
மற்ற மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக அவர்களின் நடைமுறைகள் மற்றும் நலன் சார்ந்த சில விஷயங்களில்
நாம் பங்குகொள்ள வேண்டிய நேரங்களும் இருக்கும். மக்களுடன் சேர்ந்து சரியான விஷயங்களில்
பங்கேற்பது சிறந்த இணைப்புகளை உருவாக்க உதவுகிறது மற்றும் பங்களிப்பதற்கு அல்லது பயனடைவதற்கான
நெருக்கத்தை அதிகரிக்கின்றது.
ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:
காரியங்களைச் செய்யத் தகுதியானவர்கள் இருக்கும்போது, அவர்கள் பொறுப்பை
ஏற்று எந்தத் தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு, அதை அவர்கள் கையில் கொடுப்பது
எப்போதும் அவசியம். ஒரு நல்ல தலைவர் எப்பொழுதும் சுற்றியுள்ள மக்களின் திறனையும் வலிமையையும்
கருத்தில் கொள்வதில் கவனமாக இருப்பார், மேலும் அவர்களின் சிறப்புகளையும் திறமைகளையும்
பயன்படுத்த அவர்களுக்கு உதவுகிறார், மேலும் யாராவது ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால்,
குறுக்கிடாமல், மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.
சரியான மாற்றுகளைத் தேர்ந்தெடுத்தல்:
ஆரம்பத்தில் திட்டமிட்டு யோசித்தது போல எல்லாமே சீராகவும் சரியாகவும்
இல்லாமல் போகலாம். மேலும், ஒரே விஷயங்களைச் செய்வதற்கு வெவ்வேறு வழிகள் இருக்கலாம்.
ஒரு நல்ல தலைவர் பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்வார் மற்றும் மற்றவர்களிடமிருந்து பரிந்துரைகளை
வரவேற்கிறார், மேலும் யார் பகிர்ந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாற்றுகளிலிருந்தும்
எது சிறந்தது என்பதை கவனமாகப் பகுப்பாய்வு செய்கிறார். ஒரு நல்ல தலைவர் எப்போதுமே நன்மை
தீமைகளைக் கணக்கிட்டு, அதிக நன்மைகள் மற்றும் குறைவான தீமைகளைக் கொண்ட விருப்பத்தைத்
தேர்வுசெய்ய குழுவினருக்கு உதவுகிறார்.
சரியான வாய்ப்பைப் பயன்படுத்துதல்:
பொருத்தமான வாய்ப்புகள் இருக்கும்போது சில விஷயங்களை மாற்றுவதற்கு நாம்
கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கலாம். சில விஷயங்கள் மிகவும் தெளிவாக இருப்பதில்லை
மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகுதான் விஷயங்கள் தெளிவானதாக மாறும். மேலும்,
வேறு சில திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் ஏற்கனவே நம் மனதில் இருக்கக்கூடும். ஆனால்
நாம் விஷயங்களைச் சமநிலைப்படுத்தவும், சில விஷயங்களைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளைப்
பயன்படுத்தவும், மேலும் சில விஷயங்களையும் இழக்கவும் கூட நேரிடலாம்.
உயரிய தரநிலைகளால் வழிநடத்தப்படுதல்:
எதுவுமே நம்மை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடாது, லாபம் இருக்கிறது என்பதற்காக
நாம் எதையாவது செய்து கொண்டிருக்கக்கூடாது. எப்பொழுதும் நாமாகவோ அல்லது மற்றவர்களின்
வழிகாட்டுதலின் காரணத்தினாலோ, ஏன் என்று யோசிக்க வேண்டும். மேலும், நம்மிடம் இருக்க
வேண்டிய மதிப்பீடுகளைப் பற்றி நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது மற்றும் அதில் சமரசம்
செய்யக்கூடாது. ஒரு நல்ல தலைவர் மற்றவர்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வழிநடத்துவது
மட்டுமல்ல, சுயத்தில் கொண்டிருக்கும் உயர்ந்த தரநிலைகள் மற்றும் கொள்கைகளின்படி வழிநடத்துவது
மட்டுமல்லாமல், சரியானதை மறுபரிசீலனை செய்து தன் மனப்பான்மையை மறுசீரமைப்பார்
5. விஷயங்களைச் சரியான முறையில் சரிசெய்தல்
தேவையில் உள்ளவர்கள் அணுகக்கூடிய விதத்தில் இருத்தல்:
மற்றவர்களைவிடக் குறைவுள்ளவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஒரு நபருக்கு
அடிப்படைத் தேவைகள் இருந்து சில விஷயங்கள் குறைவாக இருந்தால் அவர்கள் தங்கள் தேவைகளை
நிர்வகித்துக்கொள்வது எப்போதும் சாத்தியமாகும். ஆனால், தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக்
கூடப் பெற்றிராதவர்கள், தங்களுடைய தேவையைச் சொல்லி நம்மை அணுகுவார்கள் என்று காத்திருப்பதற்குப்
பதிலாக, அவர்களுக்கு நாம் எப்போதும் அணுகக்கூடிய விதத்தில் இருப்பது பாராட்டத்தக்கது.
ஒரு நல்ல தலைவர் எப்போதும் அணுகக்கூடியவர் மற்றும் உண்மையாகத் தேவையில் உள்ளவர்களை
எப்போதும் அணுகுவார்.
காயப்பட்டவர்களுடன் இணைந்திருந்து ஆறுதலளித்தல்:
மகிழ்ச்சியுள்ளவர்களுடன் இருந்து மகிழ்ச்சியாக இருப்பது நல்லது, ஆனால்
ஒருவித ஆறுதல் தேவைப்படுபவர்களாகிய புண்பட்டவர்களுடன் இருப்பது மதிப்பிற்குரியது. ஒரு
நல்ல தலைவர் வசதியும் மகிழ்ச்சியும் உள்ளவர்களை விட, எப்பொழுதும் தேவையில் உள்ளவர்கள்
மற்றும் ஊக்கமும் ஆதரவும் தேவைப்படும் மக்கள் மத்தியில் தனது இருப்பைத் தேர்ந்தெடுப்பார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துக்கத்தில் இருக்கும் மக்களுக்குமே அவர்களை உயர்த்த யாராவது
தேவைப்படுகிறார்கள், ஆனால் மகிழ்ச்சியில் இருக்கும் மக்கள், மேலும் மகிழ்ச்சியாக இருக்க
தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
பலவீனமானவர்களை உயர்த்த ஆதரவளித்தல்:
ஒரு வித தேவையில் உள்ளவர்களே பலவீனமானவர்கள், அவர்கள் உயர ஒருவரின் ஆதரவு
தேவை. பலவீனமாக இருப்பது என்பது ஒரு நபர் குறைந்த திறனைக் கொண்டிருக்கிறார் என்றோ இயலாமையில்
உள்ளார் என்றோ இல்லை. திறமைகள் மற்றும் அனைத்து திறன்களைக் கொண்ட ஒரு நபர், உடல் அல்லது
மன ஆரோக்கியம் இல்லாமல், தன்னைச் சுற்றி எல்லைகளை வரைந்தவராக, சில காரியங்களைப் பற்றிய
வெளிப்படுத்துதல் அடையாததால் எதையாவது தொடர முடியாமல் இருப்பவராகவும் இருக்கலாம். பலவீனமான
நபர் தன் தன்னம்பிக்கையை வளர்க்கவும் சில விஷயங்களைத் தொடங்கவும் ஒரு சிறிய ஆதரவும்
ஊக்கமும் போதுமானதாகும்.
என்ன நேர்ந்தாலும் சரியானதை பின்பற்றுதல்:
மதிப்பீடுகளையும் சரியான காரியங்களையும் சமரசம் செய்வது எப்போதும் எளிதாக
நிகழலாம் மற்றும் வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் அதை எதிர்பார்க்கலாம்.
சில சமயங்களில், சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் சுயத்தை மட்டும் உள்ளடக்காது,
மற்றவர்களையும் பயனாளிகளையும் உள்ளடக்கி இருக்கும், அது போன்ற சூழ்நிலைகளில் சரியானதிற்காக
நிலை நிற்பது மிகவும் கடினம், ஏனெனில் ஒரு பணி முழுமையடையாது. இருப்பினும், என்ன விலை
கொடுக்க நேரிட்டாலும் மற்றவரின் தவறை சுட்டிக் காட்டாமல், எல்லா சந்தர்ப்பங்களிலும்
சூழ்நிலைகளிலும் சரியாக இல்லாததை எதிர்த்துப் போராடுவது அவசியம். மற்ற நபர் குழப்பிப்
போய்க் கோபத்தையோ வெறுப்பையோ அதிகரித்து கொண்டாலும், ஒரு நல்ல தலைவர் அவர்கள் செய்த
தவறை கண்ணியமான முறையில் உணர்த்துகிறார்.
நற்செயல்களை நினைவு கூர்தல்:
பல விஷயங்கள் சரியாக இல்லாவிட்டாலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்கில்
ஏதாவது சரியான விதத்தில் இருக்கும். ஒரு நல்ல தலைவர் ஒரு நபர் செய்யும் நற்செயல்களையும்,
ஒருவரிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு, அந்த நபர்
வளர உதவுவதோடு, மற்ற செயல்களையோ அல்லது தவறான எண்ணங்களையோ உணர வைக்கிறார். மேலும்,
ஒரு நபர் அவர் இருப்பது போலவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், மேலும் அவர்களின் செயல்களின்
அடிப்படையில் ஒருபோதும் கணிக்கப்படக்கூடாது. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத அவர்களின்
செயல்கள் அல்லது எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
ஒரு நபர் செய்யும் தவறை மட்டுமே நாம் நினைவில் வைத்திருக்கும் பல சமயங்கள் உள்ளன, ஆனால்
அது அந்த நபர் நிராகரிக்கபட்டவராக உணரச்செய்யும், மற்றும் அவரைத் தவறான திசையில் தொடரச்
செய்யும்.
மூல காரணத்தைச் சரியாகச் சரிசெய்தல்:
பிரச்சனைகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அவை நாம் வளர்ச்சியடையவும்,
நம் வாழ்க்கைக்கான புதிய தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது. பிரச்சனைகள் நம்மை ஒருபோதும்
உடைக்கக்கூடாது, ஆனால் எப்போதும் நம்மை உருவாக்க வேண்டும், அப்போதுதான் நம் வாழ்க்கை
மகிழ்ச்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். சுய-உணர்தல் மற்றும் சுய-இயல்பாக்குதல்
ஆகியவை நமக்குள்ளேயும் நமக்கு வெளியேயும் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண
உதவுகிறது. மேலும் இது நமக்குள் இருக்கும் பிரச்சனைகளின் மூல காரணத்தைச் சரி செய்ய
உதவுகிறது, நமக்கு வெளியே உள்ள பிரச்சனைகளின் மூல காரணத்தைச் சரியாக அமைக்க முழு பலத்துடனும்
நம்பிக்கையுடனும் போராட உதவுகிறது.
செயல்பாடு
மனிதனை வரைதல்:
அனைத்து பங்கேற்பாளர்களும் 5-8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகப் பிரிந்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு குழுவிற்கும் காகிதம் மற்றும் பேனா கொடுக்கப்பட்டிருக்கும். குழுவில் உள்ள
உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பின்னால் வரிசையில் நிற்க வேண்டும், 10 மீட்டர் தொலைவில்.
பயிற்றுவிப்பாளர் உடலின் பாகங்களை ஒவ்வொன்றாக வரைய அறிவுறுத்துவார், மேலும் ஒவ்வொரு
உறுப்பினரும் ஓடி வந்து, தங்களுக்குச் சொல்லப்பட்ட பகுதியை வரைந்து, தங்கள் குழுவின்
கடைசி நபருக்குப் பின்னால் செல்ல வேண்டும். வழிமுறைகள் அனைத்தும் முடிந்ததும், பயிற்றுவிப்பாளர்
ஒவ்வொரு குழுவாக வரைந்த மனிதனின் படத்தைக் காண்பிக்கலாம், மற்றும் சரியாகக் மற்றவர்களைக்
கருத்தில் கொள்வது மற்றும் அவர்களால் ஏற்பட்ட இடைவெளிகளைக் சரிசெய்வது பற்றி விளக்கலாம்.
Comments
Post a Comment