5. மற்றவர்களைச் சிறந்தவர்களாகக் கருதுதல்
5. மற்றவர்களைச் சிறந்தவர்களாகக் கருதுதல்
(மற்றவர்களின் எண்ணங்களுக்கும்
உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்தல்)
1. மற்றவர்களின் சிறப்புகள்/ திறமைகளை
ஒப்புக்கொள்ளுதல்:
சுயத்தை
நிதானித்தல்:
பலங்களோடு
வரம்புகளை ஒரு நபர் ஏற்றுக்கொண்டு சுயத்தைப் பற்றி அறிந்திருக்கும்போது மட்டுமே, அந்த நபரால் மற்றவர்களைக் கருத்தில் கொள்ள முடியும். ஒரு நபர்
மற்றவர்களுக்கு நல்லது செய்ய விரும்பும்போதும், மற்றவரின்
நல்வாழ்வை விரும்பும்போதும் மட்டுமே, அந்த நபர் மற்றவர்களைத் தன்னிலும் சிறந்தவர்களாகக் கருத முடியும். தன்னை தானே அறிந்திருக்கும்
நபர் அவர் இருக்கும் நிலையைத் தாண்டி அதிகமாகச்
சிந்திக்காமல் இருக்க சுயத்தை பற்றி அடிக்கடி பிரதிபலிக்கிறார். ஒரு தலைவர்
எல்லாவற்றிலும் மற்றவர்களை ஈடுப்படுத்த சுயத்தை எளிமைப்படுத்தவோ பெருமிதப்படுத்தவோ
கூடாது.
வேற்றுமையில்
ஒற்றுமை:
நாம்
இருக்கும் விதம், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் பின்னணியின் வேறுபாடுகளின் அடிப்படையில் நமக்கு
மத்தியில் ஒரு பரந்த வேற்றுமை உள்ளது. எல்லா நேரங்களிலும் ஒருவரோடொருவர் இணங்கிப் போகாத பல ஆர்வங்களும் திறமைகளும் நமக்கு உள்ளன. பல வேற்றுமைகள்
இருந்தாலும், நம்மிடையே ஒற்றுமை இருக்கும்போது அதில் நிறைய ஆக்கபூர்வத்தன்மை இருக்கும்.
ஒற்றுமையானது ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும், ஒருவருக்கொருவர்
ஊக்கமளிக்கும் மற்றும் ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஏற்றவாறு மாறாமல் தாங்களே இருக்க
உதவுகிறது.
அனைவரின்
தனித்துவமான திறமைகள்:
எல்லா
மனிதர்களுக்கும் மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு ஒன்று உள்ளது, அவை ஒவ்வொருவரும் காரியங்களைச் செய்யும் விதம், ஒவ்வொருவரும்
இருக்கும் விதம் மற்றும் ஒவ்வொருவரும் சிந்திக்கும் விதம். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு
வழங்கச் சில திறமைகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களில் நிறைய நபர்கள் தங்கள்
திறமைகளைக் கண்டறியவோ அல்லது அதை மேம்படுத்தவோ முயற்சி செய்வதில்லை. தனித்துவமான
திறமைகள் நமது சுயத்திற்கு செல்வத்தை, அதிகாரத்தை அல்லது உடைமையைச் சம்பாதிக்க உதவுவது மட்டுமல்லாமல், ஒரு
பொதுவான நன்மைக்காக ஆக்கபூர்வமாக மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்கவும் உதவியாக
இருக்கும். மற்றவர்களை நம்மிலும் சிறப்பாகக் கருதவும் இது நம்மைத் தூண்டுகிறது.
திறமைகளை
அடையாளம் காண உதவுதல்:
திறன்களைக்
கொண்டிருப்பதாக நாம் நம்பிய ஒரு நபர், உண்மையில் எதிர்பார்த்தவாறு அத்திறன் இல்லாதவர் என்பதை அறிந்து அதிக ஏமாற்றம் அடையும் போது சில
நேரங்களில் மற்றவர்களை வழிகாட்டுவதும் வழிநடத்துவதும் கடினமாக இருக்கும். எப்படியாக
இருப்பினும், அந்த நபரை அவர் இருக்குமாறு அப்படியே விட்டுவிடுவது நியாயமில்லை, மேலும் ஒரு நபர் சிறந்த விதத்தில் மேம்படவும் அவரின் சுய
முன்னேற்றத்திற்காகவும் அவரிடத்தில் உள்ள சிறந்தவற்றை கருத்தில் கொள்ளச்செய்து, வரம்புகளைச் சுட்டிக்காட்டி, அவரின் திறமைகளையும் திறன்களையும் அடையாளம் காண அவருக்கு
உதவ வேண்டியது அவசியம்.
ஒவ்வொருவரும்
இயங்க அனுமதித்தல்:
எல்லோரும்
மற்றவர்களுக்குப் பங்களிக்க ஏதாவது காரியங்கள் இருந்தாலும், அவர்களிடத்தில்
உள்ளதைக் கண்டுபிடித்துச் செயல்படுத்த சில வாய்ப்புகள்
வழங்கப்படாவிட்டால் அது அவர்களுக்குப் பயனளிக்காது. ஒரு நல்ல தலைவர் எப்போதுமே
பொது நலனுக்காக மற்றவர்களிடத்தில் உள்ள சிறந்ததைப் அடையாளம் காணவும் அதைப் பயன்படுத்துவதற்காக
அவர்களின் மனப்பான்மையைக் கூர்மைப்படுத்தவும் மக்களுக்கு உதவ வேண்டும், அதே போல் அவர்களின் திறமைகளை அல்லது ஆர்வத்தை ஒப்புக்கொள்வதன் மூலமும், அவர்களை நம்புவதன் மூலமும்,
அவர்களைக் கருத்தில் கொள்வதன் மூலமும் அவர்களிடத்தில்
உள்ளச் சிறந்ததைச் செயல்படுத்த அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
செயல்பாடு:
ஒருவருரைப்
பற்றி இன்னொருவர் மற்றும் ஒருவருக்காக இன்னொருவர் ஒரு நல்ல விஷயத்தை எழுதுதல்:
பங்கேற்பாளர்கள்
அனைவருக்கும் A5 அளவிலான தாள் வழங்கப்படும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரைக் காகிதத்தின் மேல் எழுதி,
காகிதத்தை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும்.
மற்றொரு நபர் அந்த நபரைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தை அல்லது அந்த நபருக்காக ஒரு நல்ல
விஷயத்தை எழுத வேண்டும். அறையில் பங்கேற்கும் ஒவ்வொரு பங்கேற்பாளரைப் பற்றி
எல்லோரும் எழுதும் வரை அந்தத் தாள்களைச்
சுழற்சியில் மற்றவரிடத்தில் கொடுக்க வேண்டும். இறுதியாக, தன்
பெயரை மேலே எழுதிய நபரின் தாள் அவருக்கு மீண்டும் வழங்கப்படும்.
2. மற்றவர்களை ஊக்குவித்தல்:
ஒருவருக்கொருவர்
அறிவுரை கூறுதல்:
எல்லாவற்றையும்
ஏற்றுக்கொள்வதன் மூலமோ அல்லது மற்றவர்களிடமிருந்து எல்லாவற்றையும் புறக்கணிப்பதன் மூலமோ
மற்றவர்களுடன் உறவில் நிலைத்திருப்பது மிகவும் எளிதானது. ஆனால் ஒரு நபருக்கான உண்மையான
அக்கறை ஒரு நபரை உயர்த்துவது மட்டுமல்ல, சரியான மதிப்பீடுகள் மற்றும் நற்பண்புகளின்
அடிப்படையில் ஒரு நபரை நிலைநிறுத்துவதும் ஆகும், ஏனெனில் அது மட்டுமே ஒரு நபரை முழுமையானவராகவும்
சுதந்திரமானவராகவும் மாற்றும். எனவே, ஒருவர் தவறு செய்யும் போது, அது தவறு, அது பொது
நலனுக்கானது அல்ல என்று அறிவுரை கூறுவது அவசியம். அறிவுரை கூறுவது கடினம், ஆனால் ஒரு
நபரை மேம்படுத்துவதற்கு அது அவசியம்.
மதிப்புடன்
எச்சரித்தல்:
நாம்
உண்மையில் ஒரு நபரிடத்தில் அக்கரைக் கொள்ளும்போது, தேவையான நேரங்களில் சரியான யோசனைகளையும்
எண்ணங்களையும் பகிர்ந்து ஒரு நபருக்கு உதவ வேண்டும். ஒரு நபர் எதையாகிலும் அல்லது யாரையாகிலும்
பாதிக்கும் தவறான கோணத்தில் சிந்திக்கும் போதெல்லாம், அதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றி நாம் அவருக்குத் தெரியப்படுத்தவும் எச்சரிக்கவும் வேண்டும். அந்த
நபரைச் சாதக பாதகங்களைப் பற்றிச் சிந்திக்கச் செய்து, பொதுநலத்தைப் பற்றியும் சிந்திக்கச்
செய்து, சுயநலத்தைத் தகர்த்து அனைவரின் வாழ்வாதாரத்திற்காகவும் நன்மைக்காகவும் சிந்திக்க
செய்ய வேண்டும்.
ஒருவரையொருவர்
ஆதரித்தல்:
இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும்போது நிச்சயமாகக் கடினமான நேரங்கள் இருக்கும்.
பணியை ஒருவரிடம் ஒப்படைத்து செய்யச் சொல்வதை விட, தனியாக ஒரு பணியைச் செய்வது எளிது.
ஆனால் பணியை 10 மடங்கு வேகமாகச் செய்ய வேண்டும் என்றால், அது கடினமாகிவிடும். மேலும்
10 பேர் இருக்கும்போது, அதிக செயல்திறனுடனும் சிறிய ஆதரவுடனும் ஒரு பணி எளிதாகச்
செய்யப்படும். ஒரு நபர் ஒரு பணியில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கருதிய பின்னரே
அந்தப் பணியை அவரிடம் ஒப்படைக்க முடியும். ஒரு பணியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்
என்ற ஒருவரின் விருப்பம் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதன் மூலம் சாத்தியமாகும்.
பொறுமை
மற்றும் பணிவை பற்றிக்கொண்டிருத்தல்:
சில
சமயங்களில் ஒரு நபருக்குப் பயிற்சி அளிப்பது அல்லது ஒருவருக்கு சில விஷயங்களைப் புரிய
வைப்பது கொஞ்சம் சோர்வளிப்பதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும், ஆனால், ஒரு நபர்
திறன்வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு உண்மையான அக்கறை கொண்டிருந்தால்,
பொறுமையையும் பணிவையும் கடைப்பிடிப்போம். ஒரு நபர் எதையாவது தவறவிட்டால் ஒவ்வொரு முறையும்
அவருக்குக் கற்பிப்பதை சவாலாக எண்ண மாட்டோம், அதே போல் நமது சுயமரியாதை அல்லது திறனைப்
பற்றிப் பெருமையாகப் பேசமாட்டோம், ஆனால் விரும்பத்தக்கவராக இருப்போம்.
பதிலானவருக்கு
கைக் கொடுத்தல்:
காலம்
விரைவில் கடந்து போகும், உலகில் யாரும் அழியாமல் நிலைத்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும்
ஒரு கட்டத்தில் நிச்சயமற்றதான தங்கள் வருங்கால சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும். எப்பொழுதும்
எல்லோரையும் அல்லது ஒரு நபரையாகிலும் வழிநடத்தும் ஒரே ஒரு தலைவராக ஒரே ஒருவர் மாத்திரம்
இருக்க முடியாது. எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் அனைவருக்கும் பதிலானவர்கள்
இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவன் மற்றவரைக் கருத்தில் கொள்வார், தனக்கு பதிலானவர்
ஒரு சிறந்த நபர் எனவும் தன்னை விடச் சிறந்த மனிதராக இருப்பார் எனவும் கருதுகிறார்,
மற்றும் எப்போதும் மக்களும் தனக்கு பதிலானவரும் மேம்படுவதற்கும் கைக் கொடுப்பார்.
3. வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் வழங்குதல்:
பொறுப்புகளை
வழங்குதல்:
நிறைய
பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் திறமையான அல்லது தகுதியான நபர்களை உருவாக்க முடியும்,
ஆனால் அவர்கள் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்துவதற்கும், அவர்கள் தங்கள் திறமையை ஏதாவது
ஒன்றில் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு வாய்ப்பில்லை என்றால், அப்பயிற்சி அல்லது அத்தகுதி
முழுமையானதாக இருக்காது. ஒரு நல்ல தலைவர் தேவையிருக்கும்போது பொறுப்பேற்று செயல்படுவார்,
மிகவும் பயனுள்ளவராக இருப்பவரும் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியவருமான தனக்கடுத்த
ஒருவரைக் கண்டறிந்து ஒப்படைத்த பிறகே அப்பொறுப்பை விட்டுவிடுவார். மற்றவர்கள் தங்களுக்குத்
தெரிந்தவற்றைப் பயன்படுத்துவதற்கும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்குப்
பொறுப்பை வழங்குவது முக்கியம், அதனால் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவார்கள்.
பாத்திரத்தைத்
தெளிவாக வரையறுத்தல்:
சில
சமயங்களில் யாரிடமாவது சில பொறுப்புகள் கொடுக்கப்படும், ஏதோ ஒன்றைப் பொறுப்பேற்கசெய்து
அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக. ஆனால் மற்றவர் சிறப்பாகச் செயல்பட வேண்டும்
என்றும், மற்றவரைச் சிறப்பாகக் கருத வேண்டும் என்றும் நாம் விரும்பும்போது, அந்தப்
பொறுப்பை நிறைவேற்றுவதில் அவர்களின் குறிப்பிட்ட பங்கை நாம் தெளிவுபடுத்துவோம். கொடுக்கப்பட்ட
அல்லது எடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவும் மற்ற அனைவருடனும் ஒத்துப்போகவும், ஒரு
நபர் தனது பாத்திரத்தைக் குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.
பணிகளை
ஒப்படைத்தல்:
என்ன
செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒட்டுமொத்த யோசனை சில நேரங்களில் மிகவும் தெளிவாக இருக்கலாம்,
ஆனால் வெவ்வேறு நபருக்குப் பணியின் வெவ்வேறு பிரிவுகளைச் சரியான முறையில் ஒப்படைக்காத
வரை அவற்றைத் திறம்பட செயல்படுத்த முடியாது. சரியாக ஒப்படைக்கப்படாத ஒன்று நிறைய குழப்பங்களை
உருவாக்குகிறது மற்றும் சில நேரங்களில் செய்ய வேண்டியவற்றின் சில பகுதிகள் முழுமையடையாமல்
இருக்கும். ஒரு தலைவர் மற்ற நபருக்குப் பொறுப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின்
பங்கைத் தெளிவாக வரையறுத்து, அவர்களின் பணிகளை ஒப்படைப்பதன் மூலம் அவர்களிடமிருந்து
எதிர்பார்க்கப்படுவதை சரியாகத் தெரிவிக்கிறார்.
அனுபவம்
வாய்ந்தவர்களிடமிருந்து கேட்டறிதல்:
வெவ்வேறு
விஷயங்களைப் பற்றிய வெளிப்பாடும், வெவ்வேறு விஷயங்களைப் பற்றிக் கேள்விப்பட்டவரும்
மற்றும் வெவ்வேறு விஷயங்களில் அனுபவமுள்ளவரும் நிச்சயமாக ஒரு குழுவில் இருப்பார். எனவே,
விவாதிக்கப்பட்ட காரியங்களைப் பகுப்பாய்வு செய்தபின், துயரமான தவறுகளைத் தவிர்ப்பதற்கு
வீணான பரிசோதனையின்றி, அனைவரிடமிருந்தும் கேட்டு, அவர்களின் வெளிப்பாடுகள் அல்லது அனுபவங்களிலிருந்து
கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். ஒரு நல்ல தலைவர், விஷயங்களைக் கவனமாகக் கவனித்து,
கேட்டு, பகுப்பாய்வு செய்வதன் மூலம் குழுவினரின் திறனைப் பொது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்.
ஒட்டுமொத்த
பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுதல்:
திட்டமிடுவது,
பாத்திரங்களை வரையறுப்பது மற்றும் பொறுப்புகளை வழங்குவது எளிதாக இருக்கும். எல்லாவற்றிலும்
ஒரு மேற்பார்வையாளராக இருப்பதன் மூலம் பாத்திரங்கள் நன்கு உள்வாங்கப்பட்டுள்ளதா மற்றும்
பொறுப்புகள் சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.
ஒரு நல்ல தலைவர், ஏதாவது நன்மைகள் மற்றும் பலனளிக்கும் காரியங்கள் ஏற்படும் போது குழுவினருக்கு
நன்மதிப்பைக் கொடுக்கிறார், அதே நேரத்தில் அது இருக்க வேண்டிய வழியில் இல்லாதபோது குற்றத்தைத்
தானே சாட்டிக்கொள்கிறார். ஒரு நல்ல தலைவர் கட்டுப்படுத்துபவர் அல்ல, ஆனால் ஒரு பராமரிப்பாளர்,
கட்டளையிடுபவர் அல்ல ஆனால் வாய்ப்புகளை வழங்குபவர், மற்றவர்களைக் குற்றம் சாட்டுபவர்
அல்ல, ஆனால் பெருமைக்கொள்ள செய்பவர்.
செயல்பாடு:
கொடுக்கப்பட்ட
பொருட்களைப் பயன்படுத்தி ஒரு கோபுரத்தை உருவாக்குதல்:
பங்கேற்பாளர்கள்
அனைவரும் 5-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்துக்கொள்ளலாம். அனைத்து குழுக்களுக்கும்
உறிஞ்சிக்கோல் (ஸ்ட்ரா) பாக்கெட் அல்லது செய்தித்தாள் மற்றும் செலோ டேப் வழங்கப்படும்.
அவர்களுக்குச் சுமார் 10 நிமிட நேரம் வழங்கப்படும். ஒவ்வொரு குழுவும் ஒதுக்கப்பட்ட
நேரத்தில் பொருட்களைப் பயன்படுத்தி மிக உயர்ந்த கோபுரத்தை உருவாக்க வேண்டும். அப்போதுள்ள
சாதக பாதகங்கள் குறித்து பிறகு விவாதம் நடத்தலாம்.
4. வரம்புகளை ஏற்றுக்கொள்ளுதல்:
ஒன்றாக
இருப்பதன் நன்மை:
இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு நோக்கத்திற்காக ஒன்று கூடும் போது, நடைமுறைகள்
மற்றும் எண்ணங்களில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் எப்போதும் இருக்கும். வேறுபாடுகள்
இருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று சேரும்போது எப்போதும் நிறைய
நேர்மறையான விஷயங்கள் இருக்கும். உடல் ரீதியாகவோ, அறிவு ரீதியாகவோ அல்லது உணர்ச்சி
ரீதியாகவோ ஒருவருக்கொருவர் ஆதரவும் ஒருவரோடொருவர் பகிர்தலும் இருக்கும், அது நம்மை
அறியாமலேயே நம்மை அதிக ஆக்கப்பூர்வமானவர்களாகவும் திறமையானவர்களாகவும் மாற்றும். மேலும்,
ஒருவர் பலவீனமாக இருக்கும்போது, மற்றவர் பொறுப்பேற்பதால் எல்லாவற்றிலும் தொடர்ச்சி
இருக்கும்.
அனைவரிடத்தும்
ஏதோ ஒன்று உள்ளது:
குணாதிசயங்கள்,
அறிவு, சாதனைகள் அல்லது பதவியின் நிமித்தம் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்டவர்களை
நாம் எப்போதும் பாராட்டுகிறோம். நாம் எப்போதும் அந்த மக்களிடமிருந்து எதையாவது பெற
தேடுகிறோம். உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட மக்களால் நமக்கு ஏதாவது வழங்க முடியும். ஆனால்
அதே சமயம், பிரபலமோ, பதவியோ இல்லாமல் எளிமையாக வெளிப்படாமல் இருப்பவர்களும் கூட, நமக்குச்
சிலவற்றில் பங்களிக்க முடியும் என்பதும் சமமான உண்மை. உலகில் உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட
அறிவு அவர்களின் வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் பரவலாக மாறுபடுகிறது,
மேலும் அது அனைவரையும் மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.
மீண்டும்
மீண்டும் மன்னித்தல்:
எந்த
ஒரு பிழையும் இல்லாமல் எப்போதும் நேர்த்தியானவராக எவரும் இருப்பதில்லை. சில சமயங்களில்
ஒருவர் தவறு செய்யும் போது கோபம் வந்தாலும், அதைத் திரும்பப் பெற முடியாதபோது, நாம்
அவர்களை ஏற்றுக்கொண்டு, தவறைத் திருத்தவோ அல்லது அதைச் சமாளிக்கவோ அவர்களுக்கு உதவ
வேண்டும். ஒவ்வொரு மனிதரின் பலவீனமும் அவரவர் சூழ்நிலைகள் மற்றும் மனநிலையின் அடிப்படையில்
மாறுபடும். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் ஒப்புக்கொள்ள வேண்டும், மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட
விஷயத்தில் சிறந்து விளங்கும் வரை அவர்களின் வரம்புகளை ஏற்றுக்கொள்ளவும், ஒருவரையொருவர்
மன்னிக்கவும் வேண்டும்.
மோசமான
தவறுகளுக்கு விளைவுகளைக் கொடுத்தல்:
நாம்
ஒருவருக்கொருவர் வரம்புகளை ஏற்றுக்கொண்டு தவறுகளை மன்னிக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்கு
இடமின்றி உண்மை, ஆனால் அதே நேரத்தில், சில விஷயங்கள் நேர்மையாகக் கையாளப்பட, மேலும்
தவறு ஏற்படுவது தவிர்க்கப்பட அவற்றிற்கு விளைவுகள் அமைக்கப்பட வேண்டும். சில தவறுகள்
அறியாமலோ, சில தவறுகள் அறிந்தோ செய்யப்படலாம். அறிந்து செய்யப்படும் தவறுகளுக்கு மூல
காரணத்தைப் பகுப்பாய்வு செய்து, அத்தவறை உணர்ந்து மனப்பான்மையை சரிசெய்யும் வகையில்
அதற்கான விளைவுகள் இருக்க வேண்டும்.
சுய
வரம்புகளை நினைவில் கொள்ளுதல்:
சில
நேரங்களில் நாம் நம்முடைய சுய வரம்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க மாட்டோம், ஆனால்
எப்போதும் மற்றவர்களுடைய காரியங்களைச் சரிசெய்ய முயற்சிப்போம், இது சிறந்த முடிவுகளைத்
தராது. நாம் எப்பொழுதும் நேர்த்தியானவர்களாக இருப்பதில்லை, ஆனால் இருக்க வேண்டிய விதத்தில்
ஏதாவது இல்லாத போதெல்லாம் நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் திறந்த மனதுடன்
நம்மைப் பற்றி அறிய முயல வேண்டும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து வரும் திருத்தங்களைக்
கூட ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் மற்றவர்களின் வரம்புகளையும்
சுயத்தின் வரம்புகளையும் ஏற்றுக்கொள்கிறார் மற்றும் அதை மாற்றியமைக்க அல்லது சரிசெய்ய
ஒட்டுமொத்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
5.
ஒன்றுச்சேர்ந்து பணியாற்றுதல்:
ஒத்த
எண்ணம் கொண்டவர்களை அடையாளம் காணுதல்:
எல்லோராலும்
ஒருவரோடொருவர் பழகவோ அல்லது ஒன்றிணைந்து ஒரு பொதுவான நோக்கத்தை நிறைவேற்றவோ முடியாது.
குறிக்கோளையும், பொதுநலனையும் நோக்கி முன்னேற, குழுவில் ஒருவரோடொருவர் பழகக்கூடிய நபர்களை
அடையாளம் காண்பது அவசியம். எல்லாவற்றிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும்
வழங்கப்பட வேண்டும் என்றாலும், ஒருவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறன் ஆகியவற்றை சரிபார்க்க
வேண்டியது அவசியம், மற்றும் குழுவுடன் ஒரு நபரின் எண்ணம் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதும்
அவசியம்.
சுமையைப்
பகிர்தல்:
ஒன்றாக
வேலை செய்ய, ஒரு நபருக்கு வெகுமதி அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும் அல்லது சுற்றியுள்ள
தேவையைத் தனிக்குறியதாக ஆக்குவதன் மூலம் ஒரு பொறுப்பைக் குறித்த பாரம் இருக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைவர், குழுவினர்கள் அவர்களின் தேவைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்துகொள்ள,
அவர்களுடன் பாரங்கள், பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான சரியான தீர்வைப் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும், இதயத்திலிருந்து பாரத்தை பகிர்ந்து கொள்வது மற்றொரு நபரின் இதயத்தைத் தொடுகிறது
மற்றும் எதையாவது நோக்கிச் செயல்பட உள்ளார்ந்த உந்துதலை அளிக்கிறது.
வேறுபாடுகளை
அகற்றுதல்:
ஒரு
பொதுவான பணியை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறு நபர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக மாற்றுக்
கருத்துக்கள் இருக்கும். பொதுவாகக் குழுவில் பரவலாக வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்
வெவ்வேறு கலாச்சாரம், மதம், பாலினம், இனம், உடல் அமைப்பு, கல்வி போன்றவற்றைக் கொண்டவர்கள்
இருப்பார்கள். வேற்றுமைகள் களையப்பட்டு, குழுவில் ஒற்றுமையும், நல்லிணக்க உணர்வும்
ஏற்பட்டால் மட்டுமே, பணியைச் சீராக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மதிப்பீடுகள்
மற்றும் நோக்கத்தை வரையறுத்தல்:
மக்கள்
குழு ஒன்று கூடி ஒரு பொதுவான நோக்கத்துடன் ஏதாவது ஒன்றைத் தொடங்கும்போது அது தொடர்ந்து
சீராக இருக்காது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு யோசனைகள் உள்ளன, மேலும் ஒவ்வொருவரும் தங்கள்
யோசனைகள் செயல்படுத்தப்பட விரும்பலாம். ஒவ்வொருவரும் தங்கள் யோசனைகள் மட்டுமே கருத்தில்
கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தும்போது, குழுவில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்,
எனவே மதிப்பீடுகள் மற்றும் நோக்கம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். மேலும் பல
கருத்துக்கள் இருந்தால், எல்லாவற்றிலும் சிறந்ததைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கைகளைப்
பிடித்தல் மற்றும் முன்னேறுதல்:
நாம்
ஒன்றாக ஒரு பணியைச் செய்யும்போது ஒரு குழுவில் உள்ள அனைவரும் ஒரே வேகத்துடனும் ஒரே
பலத்துடனும் இருக்க மாட்டார்கள். ஆனால் அனைவரின் பங்களிப்புடன் காரியங்களை நிறைவேற்றுவது
அவசியமாகும். சில நேரங்களில் வேகமாகச் செயல்படுபவரும் வலிமையாக இருப்பவரும் மற்ற அனைவரும்
தங்கள் பங்கை நிறைவேற்றும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் அனைவருக்கும்
வழிகாட்டுகிறார் மற்றும் பொதுவான நோக்கத்தைத் திறமையான வழியில் நிறைவேற்றுவதற்கு ஒருவருக்கு
ஒருவர் ஆதரவாக இருக்குமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறார்.
செயல்பாடு:
மனித
இயந்திரம்
பங்கேற்பாளர்கள் அனைவரும் 5-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அனைத்து குழுக்களும் 2 நிமிடங்கள் விவாதித்து, வேலை செய்யும் இயந்திரத்தின் மாதிரியை உருவாக்குவது குறித்து பரிசீலித்து அதைச் செய்யத் தீர்மானிக்க வேண்டும். பின்னர் அவர்கள் 5 நிமிடங்களில் மனித இயந்திரத்தை உருவாக்க வேண்டும்.
Comments
Post a Comment