4. தொடர்ந்துக் கற்றல்
4.
தொடர்ந்துக் கற்றல்
(சுயத்தைப்
பற்றியும், புதிய
காரியங்களையும் உலகத்தைப் பற்றிய தகவல்களையும் அறிய)
1.
சுயத்தை அறிதல்
இயற்கையில்
சிறந்தவர்கள்:
உயிரினங்களில்
மனிதன் மிகவும் தனித்துவமானவன், பூமியின்
முகத்தில் மற்ற எல்லா உயிருள்ள உயிரற்ற காரியங்களைவிட மனிதன் உயர்ந்தவன். மனிதன்
நிறைய சாதனைகளைப் புரிந்து,
பல புதிய விஷயங்களைச் செய்துள்ளான். அறிவார்ந்த ஆற்றலும்,
விஷயங்களைக்
கண்டறிந்து கட்டமைக்கும் திறனும் மனிதனின் சிறப்பு. மனிதர்கள் செய்யும் விஷயங்கள்,
சுற்றுச்சூழலை
நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பெருமளவில் பாதிக்கின்றன. உறுதியாக மனிதன் தான்
பூமியின் முகத்தில் உள்ள அனைத்து காரியங்களுக்கும் உயிரினங்களுக்கும் பொறுப்பானவன்.
அணுகுமுறையில்
வேறுபாடுகள்:
மனிதனின் ஆற்றல்
மிகவும் சிறந்தது, ஆனால்
உடல் வலிமையுடன் அறிவு மற்றும் உணர்வுகளின் பயன்பாடு பரவலாக வேறுபடுகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் திறனை ஆக்கபூர்வமாகவும் பொது நலனுக்காகவும் பயன்படுத்துவதில்லை.
சிலர் தங்களையும் தங்கள் சூழலையும் கட்டியெழுப்புவதில் அதிக அக்கறை
காட்டுகிறார்கள், மற்றவர்களைக்
குறித்து கவனம் செலுத்துவதில்லை, இது
அதிக அழிவையும் ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலான அனைவரும்
மற்றவரிடத்திலும் அனைத்து காரியங்களிடத்திலும் உள்ள பொறுப்பை உணர்ந்து,
அணுகுமுறையை
நேர்மறையாக அமைக்க வேண்டும்.
மற்ற
உயிரினங்களைவிட உயர்ந்தவர்கள்:
அறிந்தோ
அறியாமலே மனிதர்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள மற்ற எல்லா உயிரினங்களின் மீதும்
ஆதிக்கம் செலுத்துபவர்கள். உள்நாட்டு சூழலிலிருந்து காட்டு சூழல் வரை அனைத்திலும் மனிதர்களின்
செல்வாக்கும் கட்டுப்பாடும் உள்ளன. மனிதர்களுக்கு உடல்,
அறிவு
மற்றும் உணர்வு சார்ந்த அதிக திறன் உள்ளது,
அது
வேறு உயிரினங்களுடன் ஒப்பிடும்போது அளவிட முடியாதது. பூமியில் மிகப் பெரிய மற்றும்
வலிமையான உயிரினங்களின் செயல்திறனைக் கூடப் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தவும்
மனிதர்களுக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது.
செயல்பாடு
சுயத்தை அறிதல்:
பங்கேற்பாளர்கள்
அனைவருமே ஒரு துண்டுத் தாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காரியங்களின் அடிப்படையில்,
தங்களைப்
பற்றிய சில விஷயங்களைச் சிந்திக்க வேண்டும்,
இது
அவர்களின் சுயத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும்,
·
என்னில் நான்
விரும்பும் 2
குணங்கள்
·
என்னில் 2
குறைபாடுகள்
·
மற்றவர்கள் என்னில்
காணும் 2
குணங்கள்
·
மற்றவர்கள் என்னில்
காணும் 2
குறைபாடுகள்
·
எனது நண்பர்களும்
பெற்றோர்களும் என்னை எவ்வாறு விவரிப்பார்கள்?
·
மிக
முக்கியமானதாக நான் கருதும் 2
மதிப்பீடுகள் மற்றும் உயரிய காரியங்கள்
·
எனது வளர்ச்சிக்கு
உதவிய 2
உறவுகள்.
·
எனது வளர்ச்சியைத்
தடுத்த 2
உறவுகள்.
·
எனது சின்னம்.
2.
அறிவு / ஞானத்தை அதிகரித்தல்
வாழ்வதன் அவசியம்:
பூமியின்
முகத்தில் நகரக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் அறிவு மிகவும் அவசியம். அறிவு
இல்லாமல் உயிர்வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. என்ன சாப்பிட வேண்டும்,
எதைப்
பின்பற்ற வேண்டும், எப்படிக்
காரியங்களைச் செய்ய
வேண்டும் என்பது பற்றிய அறிவு, போன்ற
காரியங்கள் அடிப்படையானவை மற்றும் அது ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப மாறுபடும். அறிவு
என்பது மிக அடிப்படையானதும் முதன்மையானதுமாக இருந்தாலும்,
முன்னோக்கி
நகரவும் எதையாவது முயற்சிக்கவும் உதவும் முதல் படியாகும்.
ஞானத்தைத்
தேடுவது அவசியமாகும்:
ஞானம் என்பது
அறிவின் பயன்பாடு மற்றும் அது காரியங்களைப்
பகுத்தறியவும்
காரியங்களைச்
சரியாகப்
புரிந்துகொள்ளவும் உதவுகிறது. உணர்வுகள் மற்றும் எண்ணங்களுடன் மட்டுமல்லாமல்
நுண்ணறிவுடனும் மனசாட்சியுடனும் சேர்ந்து ஞானம் செயல்படுகிறது. ஞானத்தைத் தேடுவது நிச்சயமான
தேவை, இது
சுயாதீனமான மற்றும் திறமை வாய்ந்த வாழ்க்கை முறைக்கு ஒரு அற்புதமான காரியம்.
அறிவும்
ஞானமும் அதிகாரப்படுத்தும்:
வெவ்வேறு காரியங்களைப்
பற்றி அறிந்துகொள்வது, அந்தக்
காரியங்களைப்
புரிந்துகொள்வதற்கும் சரியானவிதத்தில் அதைப்
பயன்படுத்துவதற்கும்
உதவுகிறது. ஞானம் காரியங்களைப்
பயன்படுத்துவதில் மட்டுமல்லாமல், காரியங்களில்
உள்ள நன்மை தீமைகளைப்
பகுத்தாராய்ந்து, பின்
தொடரும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளைச்
சிந்தித்துப் பார்த்தபின் அதற்கேற்ப காரியங்களைப் பயன்படுத்துவதில் உதவுகிறது.
இதன்மூலம் வெவ்வேறு காரியங்களைப் பற்றிய அறிவும்,
வெவ்வேறு
காரியங்களைப் சரியாகப்
பயன்படுத்துவதும், திறனுள்ளவர்களாக
இருக்க உதவுகிறது.
நலமான வாழ்விற்கான
வழிகாட்டி:
அறிவு
என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் இன்றியமையாத தேவை என்பது மறுக்கமுடியாதது,
மேலும்
உயரிய உயிரினங்களுக்கு,
குறிப்பாக மனிதர்களுக்கு ஞானம் தேவையானதாகும். நேர்மறையான அணுகுமுறையும் சரியான
நல்லொழுக்கங்களும் இல்லாமல் சுய-நோக்குடன் ஞானம் இருக்கும்போது மற்றவர்களுக்குப்
பேரழிவை
ஏற்படுத்தும். எனவே நலமான வாழ்விற்கு சுயநலம் இல்லாமல் சரியான குணத்துடன் இருப்பது
அவசியம்.
தீர்க்கப்படாததற்கு
தீர்வைக் கண்டறிதல்:
அறிவு மற்றும்
ஞானத்தின் வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க
வேண்டும், அது
விரிவானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அறிவும் ஞானமும் பலனளிப்பதும் அவசியம்.
தீர்க்கப்படாத பல சிக்கல்களும் சூழ்நிலைகளும் நம்மைச் சுற்றிலும் உள்ளன,
அதற்குப்
பொருத்தமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருக்கலாம். நாம் நம்மை மேம்படுத்திக்
கொள்ளும் காரியங்களில் நமது அறிவையும் ஞானத்தையும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்
மற்றும் தீர்க்கப்படாத காரியங்களுக்குச்
சரியான தீர்வுகளைக் காண வேண்டும்.
நன்மை
பயக்கும் காரியங்களை நம்புதல்:
நம்மைச்
சுற்றியுள்ள அனைத்தும் நம் விருப்பங்களுக்கும் தேடல்களுக்கும் ஏற்ப ஒருவிதத்தில்
நமக்குக் காரியங்களைக் கற்றுத் தருகின்றன. சில நேரங்களில் நாம் செய்யும்
விஷயங்களைப் குறித்து நாம் அதிகம் அக்கறை கொள்ள மாட்டோம்,
மேலும்
அது எந்த வகையிலும் ஆக்கபூர்வமாகப்
பங்களிக்கவில்லை என்பதை உணராமல் தொடர்ந்து செய்வோம். நாம் தெரிந்துகொள்ளவும்
பயன்படுத்தவும் விரும்பும் காரியங்கள், சுயத்திற்கும்
மற்றவர்களுக்கும் எவ்வாறு பயனளிக்கின்றன என்பதைப் பற்றி நாம் எப்போதும் சிந்திக்க
வேண்டும்.
செயல்பாடு
வெவ்வேறு
வடிவங்களை உருவாக்குதல் - ஒன்றன் பின் ஒன்றாக (டாங்கிராமை பயன்படுத்தி):
டாங்கிராம்
என்பது ஒரு சதுரத்திலிருந்து பெறப்பட்ட ஏழு வடிவங்களைக் கொண்ட ஒரு சீன புதிர்
ஆகும், இதன்
மூலம் ஏராளமான பிற வடிவங்கள் உருவாக்கப்படலாம். பங்கேற்பாளர்கள் அனைவரும் 5-8
உறுப்பினர்கள் கொண்ட குழுவாகப்
பிரிந்துக்கொள்ளலாம். அனைத்து குழுக்களுக்கும் ஏழு வடிவங்கள் (டாங்கிராம்) வழங்கலாம்,
மேலும்
முழுமையான டாங்கிராமைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் / வடிவத்தை ஒன்றன்பின்
ஒன்றாகக் காண்பிப்பதன்
மூலம் ஒரு வடிவத்தை உருவாக்கும்படி கூறலாம்.
தொடர்ச்சியான
வெளிப்பாடு மற்றும் புரிதலை அதிகரித்தல்:
பங்கேற்பாளர்கள்
அனைவரும் 5-8
உறுப்பினர்கள் கொண்ட குழுவாகப்
பிரிந்துக்கொள்ளலாம். அனைத்து குழுக்களுக்கும் செய்தித்தாள் வழங்கப்படலாம்,
அது
ஒருவார காலமாவது பேசப்படும் ஒன்றாகவும் தொடர்ச்சியான ஒரு செய்தி தலைப்பைக்
கொண்டுள்ளதாகவும் இருக்கும். பங்கேற்பாளர்களிடம் அதைப் படித்துப்
புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம். அவர்கள் அதைப் புரிந்துகொண்ட பிறகு,
செய்திகளின்
தொடர்ச்சியைக் கொண்டிருக்கும் மற்றொரு செய்தித்தாளையோ,
செய்தியை
வேறு கோணத்தில் தெரிவிக்கும் மற்றொரு செய்தித்தாளையோ வழங்கலாம். இது இன்னும் ஒரு
முறை செய்யப்படலாம். பங்கேற்பாளர்கள் பின்னர் செய்திகளை முதன்முதலில்
படிக்கும்போது அது எவ்வாறு உணரப்பட்டது என்பதையும்,
அதைப்
பற்றிய கூடுதல் தகவல்களைத் தொடர்ந்து பெறும் போது எப்படி உணரப்பட்டது என்பதையும் தெரிவிக்கலாம்.
3.
நன்மை பயக்கும்
உயரிய
மதிப்பீடுகளைக் கொண்டிருத்தல்:
நிறைய
போட்டிகளுடன் பரபரப்பான உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்,
சிறந்த
வாழ்க்கையைத் தேடுகிறோம். கடினமாக நாம் உழைக்கிறோம் மற்றும் மற்றவர்களின்
மரியாதையைப் பெற உடைமை, அதிகாரம்
அல்லது செழிப்பு அனைத்தையும் பெற நம்மால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.
இதற்கிடையில், நாம்
மற்றவர்களுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும்
வாழ்கிறோம் என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம். வாழ்க்கையின் உயரிய மதிப்பீடுகளை
நாம் மறந்துவிட்டு, மற்றவர்களைப்
பிரியப்படுத்த முயற்சிக்கும்போது, காலப்போக்கில்
உண்மையிலேயே நம்மை ஏற்றுக் கொள்ளவும் பாராட்டவும் முடியாது.
கீழானவற்றை
விட்டுவிடுதல்:
ஒரு நபர்
வாழ்வின் உயரிய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தால்
மட்டுமே, சுயத்துக்காகவும்
மற்றவர்களுக்காகவும் தனது தரத்தை அதிகரித்து உயர்ந்த நிலையில் இருப்பார். ஒரு
நபரின் சுய மதிப்பையும் மற்றவர்களையும் இழிவுபடுத்தும் கீழான காரியங்களை விட்டுவிட
உயரிய மதிப்பீடுகள் உதவுகிறது. சுயத்தை மாசுபடுத்தாமல் மற்றவர்களுக்கு ஒரு நல்ல
தலைவராக இருக்க விரும்பும் ஒருவர், மரணத்தின் விளிம்பாயினும் கீழானவற்றை தொடரமாட்டார்.
பாகுபாடுகளை
அகற்றுதல்:
நம் சொந்த
நலன்கள் மற்றும் கரிசனைகளின் அடிப்படையில் நாம் அனைவரும் காரியங்களைத் தொடர
எப்போதும் வாய்ப்புகள் உள்ளன. நமக்குத் தெரியாத நபர்களைக் காட்டிலும்,
தெரிந்தவர்களைக்
கவனித்துக்கொள்ள பொதுவாக நாம் அதிகம் முயல்வோம். எல்லா நேரங்களிலும் பயனுள்ளவராக இருக்க
விரும்பும் ஒரு நபர், முதலில்
தனது இதயத்திலும் மனதிலும் உள்ள பாகுபாடுகளைத் அகற்ற வேண்டும்,
தேவைகளைச்
சரியான முறையில் கவனிப்பதன் மூலம் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும்.
தகுதியான காரியங்களைப்
பின்பற்றுதல்:
பயனுள்ளவராக
இருக்க, ஒரு
நபர் வெவ்வேறு வழிகளைத் தேர்வு
செய்யலாம், ஆனால்
மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும்,
எல்லாம்
சரியான வழி அல்ல. ஒரு நபர் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்,
ஆனால்
அவர் ஒருபோதும் தந்திரமாக இருக்கக் கூடாது. ஒரு நபர் நல்ல செயல்களை உருவாக்குபவராக
இருக்க வேண்டும், ஆனால்
சொந்த எண்ணங்களைக்
கட்டாயமாக உட்புகுத்துபவராக இருக்க்க் கூடாது. ஒரு நபர் எப்போதுமே சரியானதைத் வைத்திருக்க
வேண்டும், மேலும்
அக்கிரமக்காரர்களை குற்றம் சாட்டுபவராக இருக்க வேண்டியதில்லை,
அதற்குப்
பதிலாகத்
தவறுகளைச் சுட்டிக்காட்ட முயற்சித்து, அதை
எவ்வாறு சிறப்பாகக் கையாள முடியும் என்று பரிந்துரைக்கலாம்.
மதிப்புமிக்க
சொற்கள் மற்றும் செயல்கள்:
நன்மை
பயக்கும் விதத்தில் தேவையில் உள்ள மக்களிடம் பேசுவதும் வாக்குறுதிகளை வழங்குவதும்
எளிதானது, ஆனால்
அதை உண்மையிலேயே ஒரு செயலாக மாற்ற மிகப்பெரிய முயற்சி எடுக்க வேண்டும். நடைமுறையில்
சாத்தியமானவற்றையும் திறன்களையும் மனதில் கொண்டு,
சொற்கள்
உண்மையானதாகவும் உண்மையான அக்கறையுடனும் இருக்க வேண்டும்,
அப்பொழுது
செயல்கள் மதிப்புள்ளதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கும். நம்பிக்கையைப்
பெறுவதற்கும் பயனளிப்பதற்கும் நமது செயல்கள் நம் வார்த்தைகளுக்கு ஏற்ப இருப்பது மிக
முக்கியம்.
பொறுப்புகளை
நிறைவேற்றுதல்:
நாம்
ஒவ்வொருவரும் நம் குடும்பம், சமூகம்
அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பங்காளிகளாக இருப்பதால் சில காரியங்களைக்
கையாள
வேண்டியதுள்ளது. எடுத்துக்கொண்டதாலோ வழங்கப்பட்டதாலோ,
நமக்குக்
கீழுள்ள
பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் நாம் நல்ல பொறுப்பாளிகளாக இருக்க வேண்டும்.
நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள சிறிய விஷயங்களில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கத்
தவறினால், நாம்
எடுத்துக் கொள்ளும் அல்லது நமக்கு வழங்கப்படும் பெரிய விஷயங்களில் நாம் பரிதாபமாகத்
தோல்வியடைவோம். நாம் பொறுப்புகளை நிறைவேற்றும்போது மட்டுமே,
நாம்
எங்கிருந்தாலும், எதைச்
செய்தாலும் நன்மை செய்ய முடியும் மற்றும் ஆக்கபூர்வமாக இருக்க முடியும்.
4.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்தல்:
நன்மை செய்வதில்
வலிமையாக இருத்தல்:
நம்
அனைவருக்கும் வாழ்வில் கடினமான
சூழ்நிலைகள் உள்ளன, அது
ஒரு புதிய சூழ்நிலையாகவோ
சவாலான சூழ்நிலையாகவோ
இருக்கலாம். சில நேரங்களில் நாம் கடினமான சூழ்நிலையைத் தவிர்க்கலாம்,
ஆனால்
அதற்கு எதிராகத்
தைரியமாகச்
சரியான மதிப்பீடுகளுடன்
போராடுவது சூழ்நிலையைச்
சமாளிக்க எப்போதும் உதவியாக இருக்கும். சில நேரங்களில் மதிப்பீடுகள்
மற்றும் நல்லொழுக்கங்களை சமரசம் செய்வதன் மூலம் எதையாவது மாற்றியமைப்பது எளிதாக
இருக்கும், மேலும்
மக்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப இணங்குவோம்,
ஆனால்
நாம் எப்போதும் நல்லவற்றிற்காக உறுதியாக நிலைநிற்க
வேண்டும், அதைத்
தொடரவும்
வலிமையாக இருக்க
வேண்டும்.
மற்றவர்களிடம்
பொறுப்பை ஒப்படைத்தல்:
பெரும்பாலான
காரியங்களை நம்பிக்கையோடு
எதிர்த்துப் போராடி வெல்லும் போக்கு உடையவராய் சிலர்
உள்ளனர்,
மற்றவர்களைக்
கருத்தில் கொள்ளாமல் எப்போதும் முன்னணியில் இருக்க அவர்கள்
விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முனைகிறார்கள்,
ஆனால்
அவர்களின் சுயநல மகிமைக்காக மட்டுமே அதைச் செய்கிறார்கள்.
அவர்கள் மற்றவர்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்வதில்லை.
மக்கள் தங்கன்
திறமைகள், உடமைகள்
மற்றும் நேரத்தை மற்றவரின்
நலனுக்காகவும் பொதுவான நன்மைக்காகவும் செலவழிக்க ஒரு நல்ல தலைவர் எப்போதும்
இடம்
கொடுக்க வேண்டும்.
உடனுள்ளவர்களால்
அங்கீகரிக்கப்படுதல்:
புதிய
சூழ்நிலைக்கும் சவாலான
ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப மாற முயற்சிக்கும் பொழுது,
தீர்மானம்
எடுப்பதற்காகப் பரிசீலிக்கப்படவும்
செயல்படவும்
வேண்டிய பல காரியங்கள்
இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது கூட
ஒரு தீர்மானத்தை
உள்ளடக்கியுள்ளது.
நிறைய நபர்களை ஈடுப்பட்டிருக்கு
போது, தீர்மானங்கள்
அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும், அதில்
ஒற்றுமையும் ஒருமைப்பாடும்
இருக்க வேண்டும், ஒரு
நல்ல தலைவர் அதைக்
கவனித்துக்கொள்வார்.
பகுத்தாராய்ந்து
உண்மையைப்
பற்றிக்கொள்ளுதல்:
ஒரு
மாற்றம் இருக்கும் போது, அதைத் தூண்டிய
ஒரு காரணம் அல்லது ஒரு ஆதாரம் அதற்குப்
பின்னால் இருக்கும்.
மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மாற நாம்
தயாராக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவர் மாற்றத்தின் காரணத்தையும்
ஆதாரத்தையும் பகுத்தாராய்வது
மிகவும்
முக்கியம். ஒரு நல்ல தலைவர் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்
நியாயமான காரணங்களைக்
கொண்டிருக்க வேண்டும்,
ஒருபோதும்
உண்மையிலிருந்து விலகக் கூடாது.
அனைத்து நற்கிரியைகளையும்
செய்யத் தயாராக இருத்தல்:
கடுமையான
சூழ்நிலைகளும் புதியசூழ்நிலைகளும்
இருந்தாலும், ஒரு
தலைவர் நல்ல செயல்களைச் செய்வதில் ஒருபோதும் சோர்வடையக் கூடாது. வாழ்க்கையின்
மாறிவரும் சூழ்நிலைகளை எதிர்கொள்வது சிறிது
கடினமாகவும் நேரத்தைத் கடத்துவதாகவும்
இருக்கும். ஆனால் ஒரு தலைவர் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும்,
அதைத்
தாண்டி முன்னேற வேண்டும், மற்றும் நற்கிரியைச் செய்வது பற்றித்
தனது மனதை தெளிவுபடுத்த வேண்டும்.
எப்போதும்
தாழ்மையுடன் இருத்தல்:
சில
நேரங்களில் சில
சூழ்நிலைகள் நம்மைப்
பெருமையடையச் செய்யும், குறிப்பாகச்
சாதகமான சூழ்நிலைகள் நமக்கு அதிகாரத்தையும், பதவியையும்
அல்லது செல்வத்தையும்
தருகின்றன. ஒரு நல்ல தலைவர்
ஒருபோதும் உயர்வினாலும் தாழ்வினாலும்
ஈர்க்கப்படவோ பாதிக்கப்படவோ கூடாது,
இரண்டுமே
வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் ஒரு நல்ல தலைவர் எப்போதும் தாழ்மையுடன் இருக்க
வேண்டும்.
செயல்பாடு
குழுவாக்ச்
சேர்ந்து ஒரு படத்தை முடித்தல்- ஒவ்வொன்றாக
வரைதல்:
பங்கேற்பாளர்கள்
அனைவரும் 5-8
உறுப்பினர்கள் கொண்ட குழுவாகப்
பிரிந்துக்கொள்ளலாம்.
அனைத்து குழுக்களுக்கும் ஒரு சார்ட்/ பெரிய தாள்
மற்றும் மார்க்கர் வழங்கப்படும்.
சார்ட்/ பெரிய தாள் மற்றும்
மார்க்கர் சுமார் 5
மீ தொலைவில் வைக்கப்படும்.
குழுவிலிருந்து
ஒவ்வொரு பங்கேற்பாளரும், ஒருவர்
பின்
ஒருவராக விரைவாக
ஓடி, கட்டளைக் கொடுப்பவரால்
சொல்லப்படும் முழு பொருளின் ஒரு பகுதியை விரைவாகத்
தோராயமாக
வரைய வேண்டும். எல்லா கட்டளைகளும்
முடிந்ததும், பயிற்றுவிப்பாளர்
வெவ்வேறு குழுக்களால் வரையப்பட்ட
படத்தை முன்வைத்து, அது
ஏன் முழுமையானது அல்ல
அல்லது சரியானது அல்ல என்று அவர்களிடம் கேட்கலாம்,
மேலும்
அது எவ்வாறு சிறப்பாகச்
செய்யப்பட்டு இருக்கலாம்
என்றும்
அவர்களிடம் கேட்கலாம்.
5.
தாக்கத்தை ஏற்படுத்துதல்
வரவேற்ப்பவராக
இருத்தல்:
ஒரு நபர்
அல்லது அவரது
யோசனை நன்மை பயக்க வேண்டுமெனில், முதலாவது
நிலை அதை வரவேற்பதாகும்.
ஏற்றுக்கொள்ளாமல், வெற்றி
அல்லது செயல்படுத்தல் சாத்தியமில்லை. வரவேற்கத்தக்கதாக
ஒரு காரியம் இருக்க,
பெரும்பான்மையான
மக்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட
வேண்டும், அது
சரியான மதிப்பீடுகள்
மற்றும் நல்லொழுக்கங்களுடன் இருக்க வேண்டும்,
சில
சுயநல ஆதாயங்களுடனும் மறைக்கப்பட்ட
தவரான எண்ணங்களுடனும் ஒரு நபரையோ காரியங்களையோ பாதிப்பதாக
இருக்கக் கூடாது. ஒரு நபர் அல்லது அவரது
யோசனை வரவேற்கும் பொழுது, நிச்சயமாகத்
தாக்கம் ஏற்படும்.
சிறந்த
முயற்சிகளுடன் முன்னேறுதல்:
அனைத்தையும்
கருத்தில் கொண்டு திட்டமிட்டாலும்,
ஏற்பாடுகள்
செய்தாலும், எப்போதும்
தடைகள் மற்றும் சிக்கித் தவிக்கும் நேரங்கள்
இருக்கும். நாமோ
தடைகளுக்குத்
காத்திருக்க வேண்டும், அதனால் தடைப்படக் கூடாது, மாறாக அதைக் கடந்தோ
உடைத்தோ,
சிறந்த
முயற்சிகளுடன் முன்னேற வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை நோக்கி முன்னேறி
நகரும்போதுதான்,
மற்றவர்களின்
வாழ்க்கையில் நாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
தவறுகளிலிருந்து
கற்றல்:
நம்
அனைவருக்கும் நம்முடைய சொந்த வரம்புகள் இருப்பதால்,
யாரும்
நேர்த்தியானவர்கள்
அல்ல, யாரும்
நேர்த்தியானவர்களாக
இருக்கவும்
முடியாது. ஒரு நபர், ஏதேனும்
ஒரு துறையில் அல்லது காரியத்தில்
சிறந்தவராயினும், அதே
துறையில் அல்லது காரியத்தில் அவர்
சரிச் செய்ய சில
பலவீனங்களும் இருக்கும். முன்னோக்கி நகர்வதற்கு
மட்டுமல்லாமல், மீண்டும்
மீண்டும் செய்யாமல் இருக்கவும், அதற்காகச்
செலவிடப்பட்ட நிறைய நேரத்தையும் வளங்களையும் சேமிக்கவும்,
கவனம்
செலுத்த வேண்டிய நேரங்களும் உள்ளன.
நிச்சயமாக, அது
தோல்வி அல்ல, ஆனால்
தவறிலிருந்து கற்றுக்கொள்ளுதல், அதே நேரம் ஒரு
தவறை மீண்டும் செய்வது ஒரு கட்டத்தில் தோல்வியாக மாறக்கூடும்,
மேலும்
அது தாக்கத்தை ஏற்படுத்த
விடாது.
செயல்திறனை
மீட்டெடுத்தல்:
சில நேரங்களில் திட்டமிட்டதையும் ஆயத்தப்படுத்தியதையும் பின்பற்றுவதன் மூலம் சில காரியங்களில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும். ஆனால் அது ஆக்கப்பூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்காது, மேலும் அதைக் குறித்து சிறிதும் சிந்தித்திருக்க மாட்டோம். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த, எல்லாவற்றிலும் செயல்திறன் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வது மட்டுமல்ல, செயல்திறனின் தரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கோ எல்லா மட்டங்களிலும் செயல்திறனைத் திரும்பப் பெறுவதற்கோ ஒவ்வொருவரும் தாங்களாகவே காரியங்களைச் செய்ய ஒரு நல்ல தலைமைத்துவமானது உதவுகிறது.
Comments
Post a Comment