3. மக்கள் மீது இரக்கம்

 3. மக்கள் மீது இரக்கம்

(சுயத்தைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் மெய்யான அக்கறையும் பரிவும் கொண்டிருக்க)

1. வரம்புகளை அறிதல்

காரியங்களை அனுபவிக்க வலிமை:

ஒரு நபர் மிகவும் புத்திசாலியாகவோ, அதிக தகுதி உடையவராகவோ, மிக உயர்ந்த பதவியில் இருப்பவராகவோ, நிறைய செழிப்பை உடையவராகவோ இருக்கலாம், ஆனால் வலிமை இல்லாததால் அந்த நபர் காரியங்களை அனுபவிக்க முடியாவிட்டால், அது மிகவும் கொடூரமான காரியமாக இருக்கும். பணக்காரர் அல்லது ஏழை, இளவரசர் அல்லது தாழ்ந்தவர் என ஒரு நபர் எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் முழுமையாகச் செயல்படும் மனிதர்களாக இருப்பதற்கு ஏதோ ஒன்று தேவை. எனவே, ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு, ஒருவருக்கொருவர் பங்களிக்க வேண்டும், என்னவாக இருந்தாலும் தேவையில் உள்ளவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும்.

வாழ்க்கை நிச்சயமற்ற நிகழ்வுகளால் நிறைந்துள்ளது:

தங்களுக்கே உரிதான ஆர்வங்களும் விருப்பங்களும் அனைவருக்கும் உள்ளன, அவை மற்றவர்களின் செல்வாக்கு, மரபுகள் அல்லது சூழ்நிலைகளின் காரணமாக அடக்கப்படலாம். பலர் வாழ்க்கையின் எளிய காரியங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் தகுதியான காரியங்களை மதிப்பதில்லை. தற்காலிகமானதும் நிச்சயமற்றதுமான ஒரு காரியத்திற்காக மக்கள் மதிப்புமிக்க காரியங்களை வெறுக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள வரம்புகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எல்லோரும் அறிந்துக் கொள்ள வேண்டும், அதை உணர மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

நன்மையின் தேவை:

தேவையான அனைத்துடன் அதை அனுபவிக்க தேவையான எல்லா வலிமையையும் கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். சிலர் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள், அவர்கள் உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தாமல் இருப்பதால், அவை சில காலத்திற்குப் பிறகு அழிவை ஏற்படுத்தும் அல்லது அதிருப்தி உணர்வுக்கு வழிவகுக்கும். நம்மை நாமே பாராட்டவும் ஒப்புக்கொள்ளவும் அனைவருக்கும் சில தரநிலைகளும் நன்மைகளும் தேவை.

திருப்தியின் அவசியம்:

ஒரு நபர் செய்யும் அனைத்தும் திருப்திகரமாக இருப்பதில்லை, மற்றும் தனது வாழ்க்கையை உடைமைகளாலோ சிற்றின்பங்களாலோ அனுபவித்து வரும் ஒரு நபர், அதை எப்போதும் இன்பம் நிறைந்ததெனக் கருதுவதில்லை. சரியான மதிப்பீடுகள் மற்றும் சரியான அணுகுமுறை கொண்ட ஒரு நபர் எப்போதும் தனது வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறார், எல்லா நேரங்களிலும் திருப்திகரமாக உணருவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் நாம் செய்யும் பல விஷயங்களில் மகிழ்ச்சி பெற, திருப்தி மிகவும் அவசியம்.

அறிவைப் பெறுதல்:

எல்லாம் தெரியும் என்றும், தெரிந்துக் கொள்ள புதிதாக எதுவும் இல்லை என்றும் யாரும் சொல்ல முடியாது. உலகம் எப்போதுமே புதுமைகள் மற்றும் விஷயங்களை மேம்படுத்துதலால் மாறுகிறது. குறைந்தது, நமக்கு ஆர்வமுள்ளதும் நாம் ஈடுபாடு கொண்டுள்ளதுமான துறைகளிலாகிலும் ஒவ்வொரு நாளும் அறிவைப் பெறுதல் பயனுள்ளதாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள அறியாத மக்களைச் சில காரியங்களில் தெளிவுபடுத்துவது, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியம்.

2. சுற்றிலும் பார்த்தல்

தவறு செய்பவர்களிடம் பொறுமையாக இருத்தல்:

தவறு நிறைந்தவர்களை பொறுத்துக்கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் மிகவும் கடினம், குறிப்பாக அவர்கள் நமக்கு நேரடியாக ஏதாவது தவறு செய்திருக்கும் போது. ஒருவர் மற்றவர்களுக்கு எதிராக ஏதேனும் தவறு செய்யும் போது நாம் அலட்சியமாக இருப்போம், சில சமயங்களில் அந்தத் தவறால் மற்றவர்கள் கடுமையான உடல்ரீதியான தாக்குதலுக்கு உட்படும்பொழுது மட்டுமே அதற்கு எதிர்வினையாற்றுகிறோம். மறுபுறம், ஒரு நபர் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார், ஏன் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்கான உண்மையான காரணத்தை  நாம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் தவறு செய்பவரின் நல்வாழ்வு மற்றும் திருத்தம் காரணமாக நாம் பொறுமையாக இருக்க முடியும், இது பின்னர் ஏற்படக்கூடிய பல சிக்கல்களைச் சரிசெய்யும்.

தோல்விகளை ஏற்க திறந்த மனதோடிருத்தல்:

தங்களிடத்தில் ஒரு காரியம் தவறாக இருந்தாலும், அனைவரின் இயல்பான குணம் சுயத்தை பாதுகாப்பதாகும். அவ்வாறு இருந்தால் அது நேர்மறையான மாற்றங்களுக்கான வாய்ப்பினையும் தவறுகளிலிருந்து கற்பதற்கான மனப்பான்மையையும் பெறுவதிலிருந்து நம் சிந்தனையைத் தடைச்செய்கிறது. தோல்விகளை ஏற்றுக்கொள்வதற்கு திறந்த மனதோ இருப்பது முக்கியம், கீழே விழச் செய்யும் சூழ்நிலையும் விலகச் செய்யும் சூழ்நிலையும் இருக்கும்போது, ​​அதிலிருந்து கற்றுக்கொண்டு, அடுத்து சிறப்பாக முன்னேற வேண்டும். இது நம் குணத்தை நம்பகத்தன்மை உடையதாக்குகிறது, மற்றும் நம் பொறுப்பின் கீழுள்ள ஏதாகிலும் தவறாக ஆனாலும், அதைக் கவனித்து சரிசெய்தல் நல்லது, இது நாம் சிறந்தவர்களாக இருக்க உதவுகிறது.

கடினமான சூழ்நிலைகளுக்குத் தயாராகுதல்:

கடினமான சூழல்கள் எப்போதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். வாழ்க்கையின் சில சூழ்நிலைகளில், எதிர்பாராத விதத்தில் நடக்கும் காரியங்கள் கையாள மிகவும் கடினமானதாக இருக்கும். அதைத் தைரியத்துடனும் பலத்துடனும் எதிர்கொள்வது முக்கியம், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது. வாழ்க்கையின் வெவ்வேறு கடினமான சூழ்நிலைகளைத் தழுவுவது நிறைய காரியங்களைக் கற்றுக்கொள்ள உதவும், மேலும் எதையும் நிதானத்துடனும் அமைதியுடனும் பொறுமையுடன் சமாளிக்க அது நம்மைத் தயாராக்கும்.

அனைவரின் ஆரோக்கியத்தை விரும்புதல்:

ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தில் கொண்டு, காரியத்தைப் பிரித்துச் செய்வது நிறைய நேரங்களில் கடினம். ஆனால் வாழ்க்கையின் முன்னேற்றத்தின் போது நாம் மறுபரிசீலனை செய்வது முக்கியம், நாம் எதைச் செய்தாலும் அது ஒரு நம் நீடியக் கால திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளதா எனவும், அது நேர்மறையான மாற்றத்தை அல்லது எதிர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருகிறதா என எண்ணிப்பார்ப்பது முக்கியம். மக்களை எதிர்மறையாகப் பாதிக்கும் சில விஷயங்களைச் சரியாகச் செய்வது ஒரு பேரழிவாக இருக்கும், அதைத் திரும்பிப் பார்க்கும்போது அதைச் செய்பவரால் உண்மையில் அதைப் போற்ற முடியாது. நாம் செய்யும் சிறிய அல்லது பெரிய காரியங்கள் ஒவ்வொன்றிலும், ஆரோக்கியமானதை உறுதிசெய்து, அனைவரின் நலனையும் விரும்புதல் மிகவும் அவசியம்.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் 5-8 உறுப்பினர்களுடைய குழுக்களாகப் பிரிந்துக்கொள்ளலாம். எல்லா குழுக்களும் ஒரு வளையத்தில் ஒருவர் மற்ற இருவர் கைகளை விரிவான நிலையில் ஒன்றாகப் பிடித்துக் கொண்டு, உள்ளே திரும்பியவாறு ஒருவருக்கொருவர் எதிர்கொள்ள வேண்டும். குழுவில் உள்ள எவரும் கைகளை விடாமல், இறுதியில் கைகள் விரிந்த நிலையில் வெளியே நோக்கித் திரும்ப வேண்டும். செயல்பாட்டின் பொழுது ஒருவர் கைகளை விட்டால் கூட, குழுவினர் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.

3. மற்றவர்களின் நிலையிலிருந்து உணர்தல்

மற்றவர்களின் தேவையைப் புரிந்துக்கொள்ளுதல்:

பூமியில் உள்ள அனைத்து உயிரினத்தின் உயிர்வாழ்வும் சில அத்தியாவசியங்களாகிய தேவைகளைப் பொறுத்தது. தேவைகளைத் திருப்திகரமாக நிறைவேறுவது ஒரு நபரைத் தகுதியானவராகவும் மதிப்புமிக்கவராகவும் உணர செய்கிறது. அவர்கள் இருக்கும் நிலையைத் தவிர்த்து ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவித தேவை உள்ளது. மற்றவரின் தேவைகளைப் புரிந்துகொள்வதும், வாழ்க்கையில் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அடைய அவர்களுக்கு உதவுவதும் முக்கியம்.

பரிதவிப்பவர்களுக்கு ஊக்கம் அளித்தல்:

பரிதவிப்பது என்பது கடுமையான வறட்சி போன்ற சூழல் அல்லது சுற்றுப்புறத்தில் சாதகமற்ற சூழ்நிலைகளால் மாத்திரம் இருப்பதில்லை, அது ஒருவரின் பொறுப்பின்மை அல்லது சுய இயலாமை காரணமாகவும் இருக்கலாம். எல்லோரும் ஏதேனும் காரணத்தால், ஏதோ ஒரு கட்டத்தில், மிகவும் தேவைப்படும் ஒன்றிற்காகப் பரிதவிப்பது நேரிட்டிருக்கலாம். உண்மையிலேயே தேவையில் உள்ளவர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும்.

தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்:

சுயத்தை கவனித்துக்கொள்வதற்கான வலிமை கொண்ட சிலர் உள்ளனர், ஆனால் அவர்களின் சுய திறனைப் பயன்படுத்துவதற்கு தேவையான ஆதரவும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். மக்களின் தேவையைப் புரிந்துகொள்வதும், ஊக்கத்தை வழங்குவதும் அவசியம், ஆனால் அதே நேரத்தில், வழிகாட்டுதலையும் ஆதரவையும் அளிப்பதன் மூலம் மக்கள் தங்கள் சொந்தத் தேவைகளைத் தாங்களே கவனித்துக் கொள்ள உதவுவது நீண்டகாலம் தொடர்வதாகவும் நீடிப்பதாகவும் இருக்கிறது.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் அனைவருமே குழுவில் உள்ள ஒரு நபர் பிடிபடவும் சங்கடப்படவும் மிகவும் கடினமான பணியைச் செய்யும்படி எழுதலாம். அவர்கள் பணியை மட்டுமே எழுதலாம், அது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நபரின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இது எழுதப்பட்ட பிறகு, பங்கேற்பாளர்களில் தன்னார்வலர் சிலர் முன்னால் அழைக்கப்படலாம், மேலும் அவர்கள் தாளில் எழுதிய பணியை அவர்களே செய்யும்படி சொல்லலாம்.

4. கரிசனையோடிருத்தல்:

இன்னொருவருக்கு தீமை செய்யாதிருத்தல்:

அனைவரும் சுய நோக்குடையவர்களாக மாத்திரம் இல்லாமல் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடும், அமைதியோடும், இணக்கத்தோடும் வாழ, அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் மற்றவர்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவர் சரியானவர்களாக இல்லாவிட்டாலும், சுயநலதிற்காகவும் சுய லாபத்திற்காகவும் எந்த சூழ்நிலையிலும் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பது மிகவும் அவசியம்.

வெறுப்புணர்வு இல்லாதிருத்தல்:

ஒருவருக்கு உதவி செய்யாமலோ ஆதரிக்காமலோ இருப்பதற்கு நிறைய பகுத்தறிவு காரணங்கள் இருக்கலாம், ஆனால் அனுபவங்கள் மற்றும் வெளிப்பாடுகளின் காரணமாக ஒருவரை வெறுப்பதே அதற்கான முதன்மைக் காரணம். மற்ற நபரின் நல்வாழ்வையோ திருத்தத்தையோ பார்ப்பதிலிருந்து வெறுப்புணர்வு ஒரு நபரின் கண்களை மூடச்செய்கிறது, மேலும் அது ஒரு நபர் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருப்பதைத் தடுக்கிறது.

அன்பில் நிலைத்திருத்தல்:

அன்பு எல்லா தீமைகளையும் மறைய செய்கிறது, மற்ற நபர் அதைப் பெற தகுதியற்றவர் எனினும் அது நிச்சயமாக மற்றவர்கள் மீது கடினமான உணர்வுகள் இல்லாமல் இருக்க அனைவருக்கும் உதவும்,. அன்பில் நிலைத்திருப்பது மற்ற நபரை ஏற்றுக்கொள்ள உதவுகிறது, அந்த நபர் தவறாக இருந்தாலும், அது மற்ற நபரின் திருத்தத்தில் தொடர்ந்து அக்கரைக் கொண்டிருக்க செய்கிறது. அன்பு பொறுயை உள்ளடக்கியது, அது மற்றவர்களின் நலனில் அக்கறைக் கொள்ளச் செய்கிறது.

கைகளை நீட்டி உதவுதல்:

கைகளை நீட்டி உதவாமல், மற்றவரின் நலனில் யாரும் உண்மையான அக்கரையுள்ளவர்களாக இருக்க முடியாது. மிகக் குறைவான வருமானம் இருந்தாலும், மிகச் சிறந்ததைக் கொடுப்பதன் மூலம், மிகவும் தேவைப்படும் மற்ற நபருக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். சொற்கள் முக்கியம், ஆனால் செயல்கள் சொற்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும், அது மிகவும் பாராட்டத்தக்கது.

மனதின் உண்மைத்தன்மை:

ஒரு நபர் அதிக பொருள்களை வழங்கக்கூடும், அவரைப் பார்க்கும் அனைவருக்கும் அவர் தயவானவராகத் தோன்றலாம், ஆனால் அந்த நபருக்குள் சில மறைக்கப்பட்ட தவரான எண்ணங்கள் இருந்தால், அந்த நபர் தனது சேவையில் உண்மையானவராக இல்லாவிட்டால், அது அவருக்கு உண்மையில் திருப்திகரமானதாக இருக்காது, மேலும் அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மற்றவர்களுக்கு முன்பாக அவரது குணத்தால் தாழ்ச்சியடைவார். மனதின் உண்மைத்தன்மை சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்க உதவுகிறது.

5. எளிமையான ஒன்றைச் செய்யத் தொடங்குதல்

கையில் இருப்பதைக் கொடுத்தல்:

தேவையில் உள்ள மக்கள் மீதான இரக்கத்தை மென்மையாகருணையுள்ள வார்த்தைகளில் மட்டும் நிறுத்த முடியாது, ஆனால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில் உள்ள அனைத்திற்கும் நம்மால் செயல்பட முடியாது, ஆனால் நம் கையில் உள்ள விஷயங்களின் மூலம் எதையாவது செயல்படுத்துவது எப்போதும் சாத்தியமாகும். நம் கையில் இருப்பதைக் கொண்டு தேவையில் உள்ள மற்றவர்களுக்குக் கொடுப்பதை நாம் பழக வேண்டும்.

தெரிந்தவற்றிலிருந்து கற்றுக்கொடுத்தல்:

தேவையில் உள்ள மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லாத நேரங்களும் இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று நிச்சயமாக அது தெரியாத வேறு ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, கையில் எதுவும் இல்லை என்றாலும், அனைவருக்கும் தெரிந்தவற்றிலிருந்து கற்றுக்கொடுத்து ஆதரிக்க எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது.

எல்லாவற்றையும் நன்மைக்காக வழங்குதல்:

நம்மிடம் மிஞ்சி இருப்பதையும், நமக்குத் தெரிந்தவற்றையும் கொண்டு அனைவரையும் மேம்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் எல்லாவற்றையும் நன்மைக்காகக் கொடுக்க நாம் தயாராக இருக்கும்போது நாம் எப்போதும் பயனுள்ளவராக இருப்போம். சில முன்முயற்சிகள் மற்றவருக்கு நிச்சயமாகச் சாதகமாகப் பயனளிக்கும் என்பதை நாம் அறிந்தால், நம்மால் முடிந்தவரை நாமே பங்களிக்கலாம், அதேபோல் அந்த நன்மைக்குத் தேவையான அனைத்தையும் சேகரிக்க மற்றவர்களையும் ஈடுபடுத்தலாம்.

செயல்பாடு:   

பங்கேற்பாளர்கள் 5-8 உறுப்பினர்களின் குழுக்களாகப் பிரிந்துக்கொள்ளலாம். 15 நிமிடங்களில் மக்களுக்கு உதவும் ஒரு உள்கட்டமைப்பை குழுவாகச் சேர்ந்து உருவாக்க வேண்டும், அதற்காகச் சில பொருட்களை (ஸ்ட்ரா, காகிதங்கள், அட்டை, வண்ணங்கள், செலொடேப் போன்றவை) அவர்களுக்குக் கொடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை