2. ஊக்குவிக்கும் பெரிய தலைவர்கள்

2. ஊக்குவிக்கும் பெருந்தலைவர்கள்:

(வாழ்க்கையில் நல்ல முன்மாதிரிகளை வைத்துக்கொள்வதற்கு தூண்டவும் ஊக்குவிக்கவும்)

1. மகத்துவம்

மிகுந்த தாழ்மையுடன் இருத்தல்:

ஒரு சிறந்த தலைவர், கற்றுக்கொள்வதையும், தான் முன்னேறுவதையும் தொடர்கிறார். அவர் வெவ்வேறு காரியங்களையும் வெவ்வேறு நபர்களையும் அறிந்துகொள்கிறார், ஆனால் தனக்கு தெரிந்துக் காரியங்களைப் பற்றி ஒருபோதும் பெருமைக் கொண்டு அதைக் குறித்து பெருமையாகப் பேசுவதில்லை. ஒரு தலைவர் தனக்கு தெரிந்த விஷயங்களிலும், தான் வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களிலும் அவரை மிகவும் தாழ்த்துகிறார். குறைந்தவர் என மற்றவரால் எண்ணப்படுபவரிடமிருந்து கூடக் கற்றுக்கொள்வார், நிறைந்தவர்களுக்கு கூடச் சிறந்ததை கற்பிப்பார்.

சிறியவரையும் வரவேற்றல்:

ஒரு தலைவர் மனிதர்களின் செல்வங்கள், உடைமைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் உள்ள பாகுபாடுகளால் பாதிக்கப்படுவதில்லை. ஒரு தலைவர் அனைவரையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார், மேலும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் உண்மையான தேவையையும் நோக்கத்தையும் கண்டுபிடிக்க அனைவருக்கும் உதவுகிறார். ஒரு தலைவர் அவதூறு செய்பவர்களையும், குற்றம் நிறைந்தவர்களையும் மற்றும் குறைந்த சலுகை பெற்றவர்களையும் கூட ஏற்றுக்கொள்கிறார், மேலும் அவர்களின் திறனையும் மதிப்பையும் அறிய அவர்களுக்கு உதவுகிறார்.

மற்றவர்களுக்காக உயிரையும் கொடுத்தல்:

ஒரு தலைவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உருவம் சார்ந்தும் மனம் சார்ந்தும் அதிக இடத்தைக் கொடுத்துத் தனது வாழ்க்கையை வாழ்கிறார். கஷ்டங்களின் போது, ​​தலைவர் முன்னிலை வகித்து மக்களைப் பாதுகாக்கிறார், மற்றவர்களுக்காகத் தனது சொந்த வாழ்க்கையை கொடுக்கத் தயாராக இருக்கிறார். ஒரு தலைவரின் ஒவ்வொரு செயலும் மனதின் அர்ப்பணிப்புள்ள உணர்ச்சிகளிலிருந்து வெளிவருகிறது, மேலும் அவரது உண்மை தன்மை அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கு முழுமையாகச் சேவைச் செய்யச் செய்கிறது.

2. மறைந்திருக்கும் பண்புகள்

ஒருவரோடொருவர்   இணைந்திருத்தல்:

தலைவரின் மகத்துவத்திற்கு காரணம், தரங்களையும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் சமரசம் செய்யாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பச்சாதாபம் காட்டிப் புரிந்துகொள்வது. தலைவர் தனது குழுவினருக்கு இடமளிப்பதற்கும், அவர்கள் அவருடன் சேர்ந்து செயல்படுவதற்கும் சிறந்த விதத்தில் முயற்சிக்கிறார், ஆனால் எப்போதும் தவறுகளுக்கு எதிர்த்து நிற்கிறார், அதைச் சரிசெய்ய தனது சிறந்த முயற்சியை மேற்கொள்கிறார்.

மாறாத அன்பைக் கொண்டிருத்தல்:

தலைவர் தனது இதயத்தில் வெறுப்பைக் கொண்டிருப்பதில்லை, அவர் கோபமடைந்து, சுற்றியுள்ள மக்களிடம் கோபப்படும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் இருக்கக்கூடும் என்றாலும், தலைவர் தனது மக்களின் தவறால் ஏற்படும் இழப்பை இழப்பீடால் மூடிமறைத்து, மீண்டும் தவறு செய்யாமல் இருப்பதற்கு உதவுவதன் மூலம் மக்களைச் சரி செய்கிறார். மக்கள் மீதுள்ள தலைவரின் அன்பும் அக்கறையும் மாறாதது, ஏனெனில் அது மக்கள் அவர்மீது கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் அல்ல, அவர் அவர்களை நேசிப்பதால் தான்.

மனதில் தாழ்மை:

தலைவருக்குப் பல காரியங்கள் தெரிந்திருக்கும், அவர் தனிப்பட்ட முறையில் ஆர்வமுள்ள சில விஷயங்களில் தனது நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கிறார், ஆனால் தலைவர் அதைப் பெருமையாகக் காட்டுவதில்லை, எப்போதும் மக்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே அவரது திறமைகளையும் அறிவையும் பயன்படுத்துகிறார். தலைவர் தப்பித்துக்கொள்ளவோ விமர்சிக்கப்படுவார் என்ற பயத்தாலோ தன்னைத் தாழ்த்திக் கொள்வதில்லை, ஆனால் தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடம் கொடுப்பதற்காகவே.

மற்றவர்களைச் சிறந்தவராக மதிப்பிடுதல்:

வேறுபாடுகள் மற்றும் வரம்புகளைப் பொருட்படுத்தாமல் தலைவர் மற்றவர்களை மதிக்கிறார். தலைவர் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள திறனைப் புரிந்துகொண்டு, அவர்களிடமிருக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவருகிறார், இதனால் அவை அனைவருக்கும் பயனளிக்கும். தலைவர் குறைந்த மதிப்பைக் கொண்ட நபரிடம் பரிவு காட்டுகிறார், மேலும் அவர்களிடம் உள்ள தனித்துவமான குணங்களின் சிறப்பை அவர்கள் உணர உதவுகிறார்.

மற்றவர்களைக் கருத்தில் கொள்ளுதல்:

தலைவர் அதிகார செலுத்துபவர் அல்ல, ஆனால் தன்னைச் சுற்றியுள்ள மக்களைச் சரியான மதிப்பீடுகள் மற்றும் நல்லொழுக்கங்களுடன் சரியான வழியில் இயக்கி, மற்றவர்களின் கருத்தை எப்போதும் எடுத்துக் கொள்கிறார். தலைவர் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தீர்மானத்திலும், கட்டுவிக்கும் ஆக்கபூர்வமான ஒவ்வொரு செயலிலும் மற்றவரைக் கருத்தில் கொள்கிறார், இதனால் யாரும் எந்த வகையிலும் எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதில்லை.

2. தலைவரின் நற்பண்புகளையும் விரும்பத்தகாத பண்புகளையும் வேறுபடுத்துதல்

தலைவரின் நற்பண்புகள்

தலைவரின் விரும்பத்தகாத பண்புகள்

அன்பு மற்றும் பாசம்

அதிகாரம் மற்றும் முதலாளித்துவம்

ஐக்கியம்

மேலோட்ட உறவு

கருணையுள்ளவர்

கடுமையானவர்

ஒன்றாக இருத்தல்

பிரிக்கப்பட்டிருத்தல்

மற்றவர்களைக் கருத்தில் கொள்ளுதல்

சுய நோக்குடன் இருத்தல்

அமைதி மற்றும் நல்லிணக்கம்

சண்டை மற்றும் வீண் பெருமை

மனதின் தாழ்வு

சுயத்தைப் பற்றிப் பெருமை பேசுதல்

மற்றவர்களை மதிப்பது

மற்றவர்களைத் தாழ்த்துவது

நோக்கத்தை நிறைவேற்றுதல்

நற்பெயருக்காகச் செயல்படுதல்

நன்மைக்குக் கீழ்ப்படிதல்

பெருமை பேசுதல்

3. எடுத்துக்காட்டுகள்

அராமின் வாழ்க்கை:

திரு. அராம் ஒரு பெரிய நிறுவனத்தை வைத்திருந்தார், மேலும் தேவையான அனைத்து பொருட்களுடனும் அவர் நன்கு வாழ்ந்தார், அதிக செல்வத்தையும் செழிப்பையும் கொண்டிருந்தார், வசதியான இடத்தில் இருந்தார். அவர் ஒரு பெரிய நில உரிமையாளர், அவரது காலத்தின் செல்வந்தர், மரியாதைக்குரிய நபர். அவரிலும் உயர்ந்தவர் ஒருவர் அவரைத் தனது சொகுசு வாழ்வை கைவிட்டு, ஒரு பெரிய நோக்கத்திற்காகவும், சிறந்த நன்மைக்காகவும் வேறொரு நாட்டிற்குச் செல்லும்படி அவரிடம் கூறினார். திரு. அராம் அதிகம் யோசிக்கவில்லை, ஆனால் எழுந்து, அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து, வயதான காலத்தில் தனது மனைவி மற்றும் சில உடைமைகளுடன் வேறொரு தேசத்திற்குப் போகத் தொடங்கினார். ஆராமை சார்ந்து இருந்த நெருங்கிய நண்பரான ஒருவரும் சில உடைமைகளைக் கொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் தொடர்ந்து அவர்கள் ஒன்றாக இருக்க முடியாது என்ற சூழல் இருந்தது, மேலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்ல முடிவு செய்ய வேண்டியிருந்தது. திரு. அராம் முதலில் தேர்ந்தெடுப்பதைப் பொருட்படுத்தவில்லை, அவர் உயர்ந்தவராகவும் வயதானவராகவும் இருந்தபோதிலும், அவர் தன்னை சார்ந்து இருப்பவருக்கு முடிவு செய்யும் வாய்ப்பினை கொடுத்தார். அராமின் நெருங்கிய நண்பர் கண்களுக்கு வளமான செழிப்பான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார், எஞ்சியவற்றை அராம் தேர்வுச் செய்தார்.

ஜோஸ் இன் வாழ்க்கை:

திரு. ஜோஸ் கால்நடைகளை வளர்க்கும் வேலையைச் செய்யும் ஒரு சாதாரண மனிதர். ஆனால் அவர் தனது எதிர்காலத்திற்கான பெரிய தரிசனங்களையும் குறிக்கோள்களையும் கொண்டிருந்தார், மேலும் அவர் தான் வயதான பிறகு ஒரு பெரிய நிர்வாகியாக மாறுவார் என்று உறுதியாக நம்பினார். திரு. ஜோஸ் தனது தரிசனங்களை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொண்டார், ஆனால் அவர்கள் அனைவரும் அவரைப் புறக்கணித்துக் கேலி செய்தனர். அவருடைய பெரிய கனவுகள் காரணமாக அவரை நிராகரித்தனர். பல ஆண்டுகளாகப் பல உந்துதல்கள், தோல்விகள், வெறுப்பு, பொறாமை மற்றும் துரோகம் ஆகியவற்றிற்குப் பிறகு, திரு. ஜோஸ் தனது திறமைகளையும் திறனையும் சில நபர்களுக்கு முன் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. திரு. ஜோஸ் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். சில காலம் கழித்து தனது திறமைகளையும், அறிவையும் நாட்டின் ஆட்சியாளரின் முன் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது, அதையும் திரு. ஜோஸ் பயன்படுத்திக்கொண்டார், அதனால் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியாக ஆனார். பிறகு, தன்னை நிராகரித்தவர்களுக்குக் கூட அவர் முழு மனதுடன் சேவை செய்தார்.

டேவ் இன் வாழ்க்கை:

திரு. டேவ் ஒரு எளிய தோற்றத்தைக் கொண்டிருந்தார், எனினும் அவர் அழகானவர், வலிமை மற்றும் நம்பிக்கையில் சிறந்தவர். அவர் தனது முழு பலத்தோடு சார்ந்திருப்பவர்களைப் பாதுகாப்பார். அவர் மக்கள் மீதான அக்கறையும் தயவும் கொண்டவர், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக அவரை அனைவரும் விரும்பினர். திரு. டேவ் ஒரு காலத்தில் நாட்டின் ஆட்சியாளராகிவிட்டார், அதிகாரம் மற்றும் பதவிகள் அனைத்தும் அவரது கைகளில் இருந்தன. திரு. டேவ் ஒரு பெண்ணிடத்தில் தவராக நடந்த பிறகு, அவளது கணவரைக் கொன்ற மிகப்பெரிய தவறைச் செய்தார். எல்லா அதிகாரத்தையும் அவர் கையில் வைத்திருப்பதால் யாரும் அவரிடம் அதைப் பற்றிப் பேசத் துணியவில்லை. இறுதியாக, உண்மை மற்றும் நீதிக்காக நிற்கும் துணிச்சலான மனிதர்களில் ஒருவர் திரு. டேவிடம் வந்து அவர் செய்த தவறை ஒரு எடுத்துக்காட்டு மூலம் தெரிவித்தார். திரு. டேவ் தனது தவறுக்கு வருத்தம் அடைந்தார், அதை ஒப்புக் கொண்டார், மேலும் மிகுந்த கசப்புடன் அவர் தனது தவறை சரி செய்யவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் முயன்றார்.

டானியின் வாழ்க்கை:

திரு. டானி தனது பணிக்காக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அவர் தனது நாட்டில் நல்ல கல்வியையும் அந்தஸ்தையும் கொண்டிருந்தார், ஆனால் மற்ற நாட்டில் சலுகைகளை அவர் அனுபவிக்கவில்லை. அந்த நாட்டிற்கு பொருத்தமான நடைமுறைகள் மற்றும் சட்டங்களின் தொகுப்பைப் அவர் பின்பற்ற வேண்டி இருந்தது, அதனுடன் ஒத்துப்போவது மிகவும் சவாலானது என்று அவர் கண்டார். திரு. டேனி மெதுவாக வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டார், ஆனால் அவர் வைத்திருந்த தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளில் அவர் சமரசம் செய்யவில்லை. திரு. டானி பிற நாட்டில் உள்ள மக்களின் கலாச்சாரம், மொழி மற்றும் நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள் நிமித்தம் அவர்களை ஏற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருந்தார். அவர் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இருப்பதால், மற்றவருக்கு மறைக்கப்பட்ட விஷயங்களின் சிறந்த விளக்கங்களைக் கூறுகிறவராக மாறினார். அதனால் திரு. டானிக்கு ஆட்சியாளரால் வெகுமதி வழங்கப்பட்டது, அவருக்கு நிர்வாகி பதவி வழங்கப்பட்டது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை பொறாமையின் நிமித்தம் மற்ற தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டார், அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் திரு. டானி தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளில் என்றும் உறுதியாக இருந்தார், அதனால் எல்லாவற்றிலும் திரு. டானி தன்னை சரியானவர் என்று நிரூபித்தார், யாராலும்  அவரை முறியடிக்க முடியவில்லை.

கிறிஸின் வாழ்க்கை:

திரு. கிறிஸ் குழந்தை பருவத்திலிருந்தே பரந்த ஞானம், அறிவு, திறன்கள், தாலந்துகள் மற்றும் திறமைகளைக் கொண்ட ஒரு சிறந்த நபராக இருந்தார். அவர் பல விஷயங்களை அறிந்திருந்தாலும், தன்னிடம் இருந்த அனைத்தையும் பற்றி அவர் ஒருபோதும் பெருமை கொள்வதில்லை, ஆனால் வாழ்க்கையின் பொருத்தமான மற்றும் தேவையான சூழ்நிலைகளில் அதைப் பயன்படுத்தினார். திரு. கிறிஸ் இளம் வயதிலேயே வீட்டு வேலைகளைச் செய்வதிலும், தந்தையின் வேலைகளில் உதவுவதிலும் மிகவும் தாழ்மையுடன் இருந்தார். அவர் கீழ்ப்படிதலுடன் நல்லவராகவும் இருந்தார், ஆனால் அதே நேரத்தில், அவர் சரியில்லாததை எதிர்த்து நின்றார், தவறுகளைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது இளமை பருவத்தில், கிறிஸ் மிகவும் சுயாதீனமாக இருந்தார், மேலும் அவர் உணர்வு ரீதியாகவும், அறிவுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும் நிறைய பேருக்கு உதவினார். பலர் கிறிஸைப் பாராட்டினர், வரவேற்றனர், அதே நேரத்தில், அவர் பெரியவராவதால் தங்கள் நிலையை இழக்க நேரிடும் என்ற அச்சமும் பொறாமையும் கொண்ட சிலர் இருந்தனர். அவர்கள் கிறிஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர், ஆனால் அவர் அவர்களைக் தண்டிக்கவில்லை, அதற்குப் பதிலாகச் சரியான காரணத்தை அவர் விவரித்தார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தனர், கிறிஸ் இறக்கும் போது கூட, அதற்குக் காரணமானவர்களை அவர் மன்னித்தார்.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிந்துக்கொள்ளலாம். முதலில், அவர்களுக்குத் தெரிந்த தலைவர்களைப் பட்டியலிட 5 நிமிடங்கள் வழங்கப்படும். அடுத்து, பட்டியலில் இருந்து அவர்கள் 10 தலைவர்களின் பெயர்களைத் தேந்தெடுத்து, காரணப்படுத்தி, அவர் அறியப்பட்ட பண்புடன் தலைவரைத் தொடர்புபடுத்த வேண்டும்.

4. வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளக்கூடியவை

உண்மையுள்ளவர்களாகவும் பயனுள்ளவர்களாகவும் இருத்தல்:

ஒப்படைக்கப்பட்டதும் எதிர்கொண்டதுமான சிறிய விஷயங்களிலிருந்து எல்லாவற்றிலும் ஒரு நபர் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட / எடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியம், அத்துடன் உறுதியளித்த வார்த்தைகளை நிறைவேற்றுப்பர் ஒரு சிறந்த தலைவர். அவர் பலருக்கும் சிறந்த விதத்தில் பயனுள்ளவராக இருக்க முடியும்.

மற்றவர் தங்களை வெளிப்படுத்த உதவுதல்:

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான எண்ணங்களை வெளிக்கொணர்வது எப்போதுமே மிகவும் கடினம், ஏனென்றால் அனைவருக்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் உள்ளது, மற்றவர்களுக்கு முன்பாக நன்றாக இருக்க விரும்புகின்றனர். ஒரு நபர் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம், ஏனென்றால் அதற்கு நம்பகதன்மை தேவைப்படுகிறது, மேலும் ஒருவரோடு தொடர்பில் இருப்பது தங்கள் சுயத்தை வளர்த்துக் கொள்ள உதவும் என்ற சிந்தனையும் தேவை. ஒரு நல்ல தலைவர் எப்போதுமே மற்றவர்கள் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பார், பிழைகளுக்கு அவர்களைக் கண்டிக்கவோ அல்லது குறை கூறவோ மாட்டார், தொடர்ந்து ஊக்கப்படுத்துவார்.

தொலைநோக்கமும் குறிக்கோள்களும் கொண்டிருத்தல்:

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையுடன் நாளுக்கு நாள் தங்கள் வாழ்க்கையை வாழுகிறார்கள். நாம் கடைப்பிடிக்கும் காரியங்களின் அடிப்படையில் வாழ்க்கை சுவாரஸ்யமாகவோ அல்லது சலிப்பாகவோ இருக்கும். எந்தவொரு நேர்மறையான மாற்றமும் இல்லாமல், அல்லது எதிலாவது கவனம் செலுத்தாமல் ஒரு நபர் தொடர்ச்சியான விஷயங்களைப் பின்பற்றினால் அது சோர்வை ஏற்படுத்தும். ஒரு தலைவருக்குத் தொலைநோக்கமும் குறிக்கோள்களும் உள்ளன, மேலும் அவற்றை நிறைவேற்றுவதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு மற்றவர்களை அவர் ஊக்குவித்து உதவுவார்.

வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்:

செய்வதற்கு நிறைய காரியங்கள் எப்போதும் இருக்கக்கூடும், ஆனால் செய்ய வேண்டிய ஒன்றாகக் அதைக் கருதினால் மட்டுமே அதைச் செய்ய முடியும். நிறைய பேர் சுற்றியுள்ள வாய்ப்புகளை உணர்வதில்லை, தேவைப்பட்டால் ஆராய்ந்து பயன்படுத்தக்கூடிய ஒன்றாக நினைக்கிறார்கள். ஒரு தலைவர் என்பவர் தனது தேவை அல்லது சுற்றியுள்ள மக்களின் தேவைக்கேற்ப, பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர். நேர்மறையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் தங்களைச் சுற்றியுள்ள வாய்ப்புகளை அவர்கள் ஆராய்ந்து பயன்படுத்த ஒரு தலைவர் மக்களுக்கு உதவுகிறார்.

கைகளில் உள்ளவற்றுடன் நம்பிக்கை கொண்டிருத்தல்:

மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் பழக்கங்களினால், தங்களிடம் இல்லாததைக் குறித்து மக்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகி தங்களிடம் இருப்பவற்றை குறித்து கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். கையில் உள்ளவற்றை வைத்து நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம், மேலும் அதை மற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் / சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துவதும் அவசியம், ஒரு நல்ல தலைவர் அதைச் செய்கிறார். தலைவர் தன்னிடம் உள்ள காரியங்களைப் குறித்து நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல், மற்றவருக்கு நம்பிக்கையையும் வழிகாட்டலையும் அளிப்பதன் மூலம் அவற்களுக்கு தெரிந்தவற்றையும், அவர்களிடம் உள்ளவற்றையும் பயன்படுத்த மக்களுக்கு உதவுகிறார்.

தவறுகளை ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்தல்:

ஒரு நபர் ஏதாவது செய்ததாக யாரோ ஒருவர் நேரடியாகச் சுட்டிக்காட்டி கூறும்போது, ​​அந்த நபர் பெரும்பாலும் தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சிப்பார், அந்த நேரத்தில் அதிகம் சிந்திக்காமல் இருப்பார். ஆனால் ஒரு தலைவர் மற்றவர்களின் குரல்களை எச்சரிக்கையாகக் கேட்பதுடன், தகுந்த முறையில் பதிலளிப்பவர், சுயத்தை பாதுகாக்க அல்ல, உண்மைகளை ஒப்புக்கொள்ளும் வகையில். தலைவர் தவறுகளை ஏற்றுக்கொண்டு ஒரு தீர்வைக் கண்டறிவார் அல்லது மற்றவர்களிடமிருந்து சிறந்த தீர்வைக் கேட்டறிவார். தலைவர் குற்றம் சாட்டாமல் மற்றவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்கிறார், எப்போதும் அதைச் சரிசெய்ய முயற்சிக்கிறார்.   

வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்தல்:

சுற்றியுள்ள வெவ்வேறு சூழ்நிலைகள் நாம் சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வழக்கமாக, பலர் தங்கள் முன்னோர்கள் மூலமாகப் பாரம்பரியமாக்க் கடைப்பிடிப்பதை மாற்ற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் தவறாகிவிடுவார்களோ என்ற பயம் அவர்களுக்குள் உள்ளது. நம்பிக்கைகள் மற்றும் தரநிலைகளில் சமரசம் செய்யாமல், சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதற்காகத் தலைவர் வெவ்வேறு சூழ்நிலைகளை ஏற்கிறார். தலைவர் தனது மக்களுடைய வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப உண்மையை நிலைநிறுத்த உதவுகிறார்.

தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளைத் கொண்டிருத்தல்:

எப்போதும் உண்மையானவராக இருப்பது மற்றும் வாழ்க்கையில் தரங்களையும் மதிப்பீடுகளையும் வைத்திருப்பது மிகவும் கடினம். உண்மையாகவும் நியாயமாகவும் இருப்பதற்கான விலை மிக அதிகம். சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் மாறுபாடுள்ளவர்கள், மற்றவர்களும் தவறுள்ளவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், ஏனென்றால் யாராவது உண்மையானவராக இருந்தால் அவர்கள் பிடிபடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. தலைவர் ஒருபோதும் தான் வைத்திருக்கும் தரநிலைகளையும், பின்பற்றத் தகுதியான மதிப்பீடுகளையும் சமரசம் செய்யமாட்டார். தலைவர் அவரைச் சுற்றியுள்ள மக்கள் வாழ்க்கையின் உயர் தரநிலைகளையும் நல்லொழுக்கங்களையும் தக்க வைத்துக் கொள்ள உதவுவார்.

தாராளத்துடனும் பணிவுடனும் இருத்தல்:

காரியங்களில் முழுமை இருப்பின், எப்போதும் பெருமை சேர்ந்து இருக்கும். ஒரு நபருக்கு உண்மையிலேயே மதிப்புமிக்க செல்வம் அல்லது ஞானம் இருக்கும்போது தாழ்மையுடன் இருப்பது எப்போதுமே கடினம், ஏனெனில் சுற்றியுள்ள மக்கள் அந்த நபரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள் அல்லது அந்த நபர் தனது செல்வம் அல்லது ஞானத்தை வெளிப்படுத்த விரும்புவார். குறிப்பிட்ட காரியங்களின் ஞானத்திலோ அல்லது நிபுணத்துவத்திலோ ஏராளமானவராக இருப்பவர் தலைவர், ஆனால் அதைப் பற்றி ஒருபோதும் அவர் பெருமை பேசுவதில்லை. தலைவர் தனது சிறந்தக் காரியங்களைச் சுற்றியுள்ள மக்களை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்துகிறார். மேலும், ஏராளமான மக்கள் பொறுப்பாளர்களாகத் தாழ்மையுடன் இருக்கவும் அவர் வழிகாட்டுகிறார்.

மற்றவர்களின் தவறுகளை மன்னித்தல்:

கோபத்தினாலோ சுயத்தின் தலைகனத்தை பாதுகாக்கவோ, பலர் மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க மாட்டார்கள். ஒரு நபர் மீது வைத்திருக்கும் மிகுந்த நம்பிக்கையையும் சார்பையும் இழக்கும் போது மற்றவர் அந்த நபரின் தவறை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். ஒரு தலைவர் மற்றவர்களின் சூழ்நிலைகளையும் மற்றவர்களின் நிலையையும் புரிந்துகொள்வதால் மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பார், மேலும், சுயத்திற்கு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்பதை விட மற்றவரின் மீது அக்கறை கொள்வார். விரோதத்திலிருந்து விடுபட்டு, ஒருவரையொருவர் மன்னித்துச் சிறந்த முறையில் இருக்க, தலைவர் மற்றவர்களுக்கு உதவுவார்.

செயல்பாடு:

பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிந்துக்கொள்ளலாம். அவர்கள் மேலேயுள்ள வாழ்க்கைக் கதைகளிலிருந்து வழக்கு ஆய்வுகளை எடுத்து ஒரு நாடகத்தைச் சித்தரிக்கலாம், இல்லையெனில் அவர்கள் தங்கள் சொந்தத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரின் வாழ்க்கையை நாடகமாக்கலாம்.

5. உத்வேகம் பெறுதல்

ஒரு நபரை ஆழமாக அறிந்து கொள்ளுதல்:

ஒருவரின் சொற்பொழிவு மற்றும் தூண்டுதல் பேச்சைக் கேட்கும்போது அது எப்போதும் சுவாரஸ்யமானதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. யாராவது நல்லதைப் பேசும்போது சரியான மதிப்பீடுகள் மற்றும் எண்ணங்களால் ஈர்க்கப்படுவது நல்லது. ஆனால் ஊக்கமளிக்கும் நபர் பொருத்தமான செயலைச் செய்யாத பொழுதும் மாறுபாடான ஒன்றைச் சொல்லும் பொழுதும், அதை ஒப்புக்கொள்வதும் பின்பற்றுவதும் எப்போதும் சரியானதல்ல. யாரும் கண்மூடித்தனமாக ஒருவரை பின்தொடரக் கூடாது, ஒருவரது சொற்களும் செயல்களும் ஒன்றாகச் செல்கிறதா சரியாகச் சீரமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க அந்த நபரை ஆழமாக அறிந்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய செயல்கள் பின்பற்ற ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும்.

நேர்மறை மற்றும் எதிர்மறை செயல்களை ஆய்வு செய்தல்:

பூரணமாக எவரும் இல்லாததால், மிகவும் போற்றப்படுபவர் அதிக சரியான நபராக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் உடல், சிந்தை, சமூகம் அல்லது சூழலின் அடிப்படையில் பல்வேறு காரணங்களால் அவர்களின் வாழ்க்கையில் வரம்புகள் மற்றும் பின்னடைவுகள் உள்ளன. எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய மெய்யாக ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றைப் பின்பற்றுவதற்காக, ஒரு நபரின் ஒவ்வொரு செயலையும் முழுமையான உயர் தரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வது எப்போதும் அவசியம்.

நேர்மறையானவற்றை உருவாக்குதலும் எதிர்மறைகளை புறக்கணித்தலும்:

ஒவ்வொருவரிடமிருந்தும் பின்பற்றச் சில நற்காரியங்கள் உள்ளன, மேலும் வாழ்க்கையின் ஒரு துறையில் நன்கு அறியப்பட்ட ஊக்கமளிக்கும் சில நபர்கள் வேறு காரியங்களில் கடுமையான சில தவறுகளைச் செய்திருப்பார்கள், அது அவர்களைக் கீழ்ப்படுத்தும். நாம் நம் சுயத்தை குறித்து சிந்திப்போமென்றால் அது நம்மிலும் எப்போதும் உணரக்கூடியது, தவறான சில காரியங்கள் நமக்குள்ளே உள்ளன, மேலும் சில விரும்பத் தகாத விஷயங்களும் நமக்குள் உள்ளன. நேர்மறையான விஷயங்களை நாளுக்கு நாள் வளர்த்து, எதிர்மறையான விஷயங்களை நாளுக்கு நாள் மெதுவாக விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்வது அவசியம்.

குணநலனையும் நோக்கத்தையும் அறிதல்:

மிகவும் வெளிப்படையான செயல்கள் எப்போதும் உணர எளிதானவை, ஆனால் எல்லா செயல்களும் நாம் அறிந்தவற்றிற்கு மாறாகயும் உண்மையற்றதாகவும் உள்ளன. மறைக்கப்பட்ட, வக்கிரமான, சுயநலமான சில காரணிகள் எப்போதும் இருக்கலாம். ஒருவரின் நற்கிரியைகளையும் செயல்களையும் ஒப்புக்கொள்வதும் அறிவுறுத்துவதும் எப்போதும் நல்லது, ஆனால் அதே நேரத்தில், செயலின் நோக்கத்தைச் சோதித்து அறிந்துக் கொள்வதும் கூடவே அவசியம். செயல்களின் நோக்கம் ஒரு நபரின் தன்மையை வரையறுக்க உதவுகிறது. ஒரு நபரின் குணம் அவரின் முழுமையான தன்மையைப் வெளிப்படுத்துகிறது மற்றும் அவரின் எதிர்கால செயல்களைக் கணிக்க உதவுகிறது.

தவறுகளை கண்டுப்பிடிப்பவராக இல்லாமல் கற்ப்பவராக இருத்தல்:

ஒருவரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மிகவும் எளிதானது மற்றும் தவறுகள் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமான பணி. தவறுகளை ஏற்கத் தயாராக இல்லாமல் இருப்பது சுயத்தைக் காத்துக்கொள்வதற்காக அனைவரும் செய்யும் பணியாகும். ஒரு நபரைத் திருத்தவும் மேம்படுத்தவும் தவறுகளைக் கண்டறியும் பொழுது அது ஆக்கபூர்வமானது, அதேசமயம் ஒருவரை கீழ்ப்படுத்த தவறுகளைக் கண்டுபிடிப்பது அழிவுகரமானது. தவறுகள் இருப்பதைக் கண்டறிபவர், அது ஏன் நிகழ்ந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் அதை எவ்வாறு சரிசெய்யலாம் என்றும் சரியானது என்ன என்பதற்கான பரிந்துரைகளையும் வழங்க வேண்டும்.

நல்லவற்றிற்கு உத்வேகம் பெறுதல்:

ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எப்போதும் பிடித்த காரியங்கள் உள்ளன. சரியான நேரத்தில் தங்களுடைய ஆர்வங்களுக்கு ஏற்ப ஒருவரிடம் ஈர்க்கப்படுவது நல்லது. ஆனால் அனைவருக்கும் பிடித்தவற்றின் மீது முழுமையாக ஈர்க்கப்படுவது நம்முடைய நோக்கத்திலிருந்து விலகச் செய்வதாகவும் மாயையானதாகவும் கூட இருக்கலாம், ஏனென்றால் அனைவரிடத்திலும் சில நற்காரியங்கள் உள்ளன மற்றும் அதே நேரத்தில், சரியானதாக இல்லாத காரியங்களும் உள்ளன.

Comments

Popular posts from this blog

1. நல்ல தலைமை மற்றும் அதன் தேவை